ஶ்ரீப4க3வானுவாச1 |
ஊர்த்4வமூலமத4:ஶாக2மஶ்வத்1த2ம் ப்1ராஹுரவ்யயம் |
ச2ந்தா3ன்ஸி யஸ்ய ப1ர்1ணானி யஸ்த1ம் வேத3 ஸ வேத3வித்1 || 1 ||
ஶ்ரீ-பகவான் உவாச--—ஒப்புயர்வற்ற தெய்வீக ஆளுமை கூறினார்; ஊர்த்வ—மூலம்--—மேல்நோக்கிய வேர்களைக் கொண்டது; அதஹ--—கீழ்நோக்கி; ஶாகம்--—கிளைகள்; அஶ்வத்தம்--—புனிதமான அத்தி மரம்; ப்ராஹுஹு----அவர்கள் பேசுகிறார்கள்; அவ்யயம்--—நித்தியமான; சந்தான்ஸி--—வேத மந்திரங்கள்; யஸ்ய--—இதில்; பர்ணானி----இலைகள்; யஹ--—யார்; தம்--—அந்த; வேத--—அறிந்தவர்; ஸஹ--—அவர்; வேதவித்----வேதங்களை அறிந்தவர்
Translation
BG 15.1: புருஷோத்தமன் கூறினார்: நித்திய அஸ்வத்த மரத்தின் வேர்கள் மேல்நோக்கியும் கிளைகள் கீழ்நோக்கியும் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் இலைகள் வேத ஆதாரங்கள், மற்றும் இந்த மரத்தின் ரகசியத்தை அறிந்தவர் வேதங்களை அறிந்தவர் என்று அழைக்கப்படுகிறார்.
Commentary
அஶ்வத்1 என்ற சொல்லுக்கு மறுநாள் வரையிலும் மாறாதது என்று பொருள். தொடர்ந்து மாறிக் கொண்டிருக்கும் இந்த உலகமும் அஸ்வத மரத்தைப் போன்றது. ஸமஸ்கிருத அகராதி உலகை பின்வரும் முறையில் வரையறுக்கிறது: ஸன்ஸாரதீ1தி1 ஸன்ஸாரஹ ‘அது தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது ஸன்ஸார் (உலகைக் குறிக்கும் ஸமஸ்கிருத வார்த்தை).’ உலகம் எப்பொழுதும் மாறிக்கொண்டே இருப்பது மட்டுமல்ல, அது ஒரு நாள் அழிந்து மீண்டும் கடவுளுக்குள் உள்வாங்கப்படும். எனவே, அதில் உள்ள அனைத்தும் தற்காலிகமானவை அல்லது அஶ்வத்.
அஶ்வத் என்பதற்கு மற்றொரு அர்த்தமும் உண்டு. இது ஆலமரக் குடும்பத்தைச் சேர்ந்த அரச மரம் (புனித அத்தி). ஆன்மாவைப் பொறுத்தவரை, இந்த ஜடவுலகம் ஒரு பெரிய அரச மரம் போன்றது என்று ஸ்ரீ கிருஷ்ணர் விளக்குகிறார். பொதுவாக, மரங்களுக்கு கீழே வேர்களும் மேலே கிளைகளும் இருக்கும். ஆனால் இந்த மரம் அதன் வேர்களை மேலே கொண்டுள்ளது (ஊர்த்4வ-மூலம்) அதாவது, இது கடவுளிடமிருந்து உருவானது, அவரை அடிப்படையாகக் கொண்டது மற்றும் அவரால் ஆதரிக்கப்படுகிறது. அதன் தண்டு மற்றும் கிளைகள் கீழ்நோக்கி(அத4ஹ-ஶாக2ம்) நீண்டுள்ளது, ஜடப்பொருளின் அனைத்து உறைவிடங்களிலும் உள்ள அனைத்து உயிர் வடிவங்களையும் உள்ளடக்கியது.
மரத்தின் இலைகள் வேத மந்திரங்கள் (ச2ந்தாம்3ஸி) சடங்குகள் மற்றும் அவற்றின் வெகுமதிகளைக் கையாள்கின்றன. அவை பொருள் இருப்பு மரத்தை வளர்ப்பதற்கான சாற்றை வழங்குகின்றன. இந்த வேத மந்திரங்களில் விவரிக்கப்பட்டுள்ள பலனளிக்கும் சடங்கு யாகங்களில் ஈடுபடுவதன் மூலம், ஆன்மா பரலோக இன்பங்களை அனுபவிக்க தேவலோக இருப்பிடங்களுக்குச் செல்கிறது, புண்ணிய செயல்கள் குறைந்துவிட்டால் மீண்டும் பூமிக்கு திரும்புகிறது. இவ்வாறு, மரத்தின் இலைகள் வாழ்க்கை மற்றும் இறப்பு சுழற்சியை நிலைநிறுத்துவதன் மூலம் அதை வளர்க்கின்றன. உலக வடிவில் உள்ள இந்த மரம் நித்தியம் -அவ்யயம் என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் அதன் ஓட்டம் தொடர்ச்சியாக உள்ளது, மேலும் அதன் தொடக்கமும் முடிவும் ஆத்மாக்களால் உணரப்படவில்லை. கடலில் உள்ள நீர் ஆவியாகி மேகங்களை உருவாக்குவது போல, பூமியில் மழை பொழிந்து மீண்டும் கடலில் கலப்பது போல, வாழ்க்கை மற்றும் இறப்பு சுழற்சி நிரந்தரமானது.
வேதங்களும் இந்த மரத்தைக் குறிப்பிடுகின்றன:
ஊர்த்4வமுலோ ’வாக்1ஶாக2 ஏஷோ ’ஶ்வத்1த2ஹ ஸநாத1னஹ
(க1டோ2ப1நிஷத3ம்)
‘மேல்நோக்கிய வேர்களையும் கீழ்நோக்கிய கிளைகளையும் கொண்டுள்ள புனித அத்திமரம் நிரந்தரமானது.’
ஊர்த்4வமூலம் அர்வாஶாக2ம் வ்ரிக்ஷம் யோ சம்ப்1ரதி1
நா ச ஜாது1 ஜனஹ ஶ்ரத்3த4யாத்1ம்ருத்1யுத்1யுர்மா மாரயதீ3தி1
(தை1த்1தி1ரிய அரண்யக்.1 1.11.5)
‘இந்த மரத்தின் வேர்கள் மேல்நோக்கியும், கிளைகள் கீழ்நோக்கியும் இருப்பதை அறிந்தவர்கள், மரணம் அவர்களை முடித்து விடும் என்று நம்ப மாட்டார்கள.'
வேதங்கள் இந்த மரத்தை நாம் வெட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் விவரிக்கின்றன. எனவே, இந்த ஸம்சார மரத்தை வெட்டுவதன் ரகசியத்தை அறிந்தவர் வேதங்களை அறிந்தவர் (வேத-வித்) என்று ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்.