யே யதா2 மாம் ப்1ரப1த்3யன்தே1 தா1ம்ஸ்த1தை2வ ப4ஜாம்யஹம் |
மம வர்த்1மானுவர்த1ன்தே1 மனுஷ்யா: பா1ர்த2 ஸர்வஶ: ||11||
யே——யார்; யதா——எந்த விதத்திலும்; மாம்——என்னை; ப்ரபத்யந்தே——சரணடைகிறார்கள்; தான்——அவர்களுக்கு; ததா——அந்த விதத்தில்; ஏவ———நிச்சயமாக; பஜாமி——ப்ரதிபலன்;;அஹம்——நான்; மம———என்; வர்த்மா——பாதையை; அனுவர்தந்தே——பின்பற்றுகின்றனர்; மனுஷ்யாஹா——மனிதர்கள்; பார்த----ப்ரிதாவின் மகன் அர்ஜுனா; ஸர்வஶஹ-——எல்லா வகையிலும்
Translation
BG 4.11: எந்த வழியில் மக்கள் என்னிடம் சரணடைகிறார்களோ, அதற்கேற்ப நான் கைமாறு செய்கிறேன். பிருதையின் மகனே, தெரிந்தோ தெரியாமலோ எல்லோரும் என் வழியைப் பின்பற்றுகிறார்கள்.
Commentary
இங்கே, பகவான் கிருஷ்ணர் ஒவ்வொருவரும் தன்னிடம் சரணடையும் போது அவர்களது சரணாகதியின் அடைவு நிலைக்கேற்ப, அவர்களுக்கு பிரதிபலனை வழங்குவதாக கூறுகிறார். கடவுள் இருப்பதை மறுப்பவர்களுக்கு, அவர் கர்மாவின் சட்டத்தின் வடிவத்தில் அவர்களைச் சந்திக்கிறார்- அவர் அவர்களின் இதயங்களுக்குள் அமர்ந்து, அவர்களின் செயல்களைக் கவனித்து, முடிவுகளை வழங்குகிறார். ஆனால் அத்தகைய நாத்திகர்களும் அவருக்கு சேவை செய்வதில் இருந்து தப்பிக்க முடியாது; செல்வம், ஆடம்பரங்கள், உறவினர்கள், கௌரவம் போன்ற பல்வேறு தோற்றங்களில் மாயா அவர்களை கோபம், காமம், மற்றும் பேராசையின் கீழ் வைத்திருப்பதால் அவர்கள் கடவுளின் பொருள் ஆற்றலுக்கு சேவை செய்ய கடமைப்பட்டுள்ளனர். மறுபுறம், உலக ஈர்ப்புகளிலிருந்து தங்கள் மனதைத் திருப்பி, கடவுளை ஒரே குறிக்கோளாகவும் அடைக்கலமாகவும் பார்ப்பவர்களுக்கு, ஒரு தாய் தன் குழந்தையைப் பராமரிப்பது போல அவர் அவர்களைக் கவனித்துக்கொள்கிறார்.
ஸ்ரீ கிருஷ்ணர் பஜாமி என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார், அதாவது 'சேவை செய்வது'. சரணடைந்த ஆன்மாக்களின் முடிவில்லாத வாழ்வின் கர்மங்களை அழித்து, மாயாவின் பிணைப்புகளை அறுத்து, ஜட இருளை அகற்றி, தெய்வீக பேரின்பம், தெய்வீக அறிவு மற்றும் தெய்வீக அன்பை வழங்குகிறார். பக்தர்கள் தன்னலமின்றி கடவுளை நேசிக்கக் கற்றுக் கொள்ளும்போது பகவான் விருப்பத்துடன் பக்தர்களுடைய அன்பிற்கு அடிமையாகிறார். பகவான் ஸ்ரீ ராம் இவ்வாறு ஹனுமானிடம் கூறுகிறார்:
ஏகை1க1ஸ்யோப1கா1ரஸ்ய ப் 1ராணாந் தா3ஸ்யாமி தே1 க1பே
ஶேஷஸ்யஹோப 1காராணாம் ப4வாம் ரிணினோ வயம்
(வால்மீகீ1 ராமாயணம்)
‘ஹனுமானே, நீ எனக்காகச் செய்த ஒரு சேவையின் கடனில் இருந்து என்னை விடுவிக்க, நான் என் உயிரை உனக்கு அர்ப்பணிக்க வேண்டும். நீ செய்த மற்ற அனைத்து பக்தி சேவைகளுக்கும், நான் என்றென்றும் கடமைப்பட்டவனாக இருப்பேன்.’ இவ்வாறு, கடவுள் ஒவ்வொருவரும் தன்னைச் சரணடையும்போது அவர்களுக்குப் பிரதிபலன் செய்கிறார்.
கடவுள் தனது பக்தர்களின் மீது இவ்வளவு கருணை காட்டுகிறார் என்றால், சிலர் ஏன் தேவலோக தெய்வங்களை வணங்குகிறார்கள்? பின்வரும் வசனத்தில் விளக்குகிறார்.