Bhagavad Gita: Chapter 4, Verse 3

ஸ ஏவாயம் மயா தே1த்3ய யோக3: ப்1ரோக்11: பு1ராத1ன: |

4க்தோ1‌ஸி மே ஸகா2 சே1தி1 ரஹஸ்யம் ஹ்யேத1து3த்11மம் ||3||

ஸஹ——--அந்த; ஏவ—--—நிச்சயமாக; அயம்—--—இது; மயா—--—என்னால்; தே—--—-உங்களுக்கு; அத்ய—--—-இன்று; யோகஹ-—----யோக அறிவியல்; ப்ரோக்தஹ——-வெளிப்படுத்து; புராதனஹ—--—-பழமையான; பக்தஹ——-பக்தர்; அஸி—-—நீ; மே—---என்; ‌ஸகா——--நண்பன்; ச—-மற்றும்; இதி——-எனவே; ரஹஸ்யம்—--ரகசியம்; ஹி—--நிச்சயமாக; ஏதத்—-இது; உத்தமம்—-—உயர்ந்த

Translation

BG 4.3: யோகத்தைப் பற்றிய அதே மிக உயர்ந்த ரகசியமான பண்டைய அறிவை இன்று நான் உனக்கு வெளிப்படுத்துகிறேன், ஏனென்றால் எனது நண்பன் மற்றும் பக்தனான உன்னால் இந்த ஆழ்நிலை ஞானத்தை புரிந்துகொள்ள முடியும்.

Commentary

ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம் பழங்கால விஞ்ஞானம் தனக்குக் கற்பிக்கப்பட்டது என்பது வழக்கத்திற்கு மாறான ரகசியம் என்று கூறுகிறார். உலகில் இரகசியம் இரண்டு காரணங்களுக்காக பராமரிக்கப்படுகிறது: ஒன்று உண்மையை தன்னிடம் வைத்திருப்பதில் சுயநலம் அல்லது அறிவின் துஷ்பிரயோகத்திலிருந்து உண்மையைப் பாதுகாப்பது. இந்த இரண்டு காரணங்களுக்காக அல்லாமல் யோகத்தின் விஞ்ஞானம் இரகசியமாகவே உள்ளது, ஏனெனில் அதைப் புரிந்து கொள்ள ஒரு தகுதி தேவைப்படுகிறது. அந்தத் தகுதியே இந்த வசனத்தில் பக்தியாக வெளிப்படுகிறது. பகவத் கீதையின் ஆழமான தூதுரை ஸமஸ்கிருத மொழியின் புலமை அல்லது தேர்ச்சியின் மூலம் மட்டும் புரிந்து கொள்ளப்படுவதற்கு ஏற்றதல்ல. அதற்கு பக்தி தேவைப்படுகிறது, இது கடவுள் மீது உள்ள ஆன்மாவின் நுட்பமான பொறாமையை அழித்து, நாம் நமது தாழ்மையான நிலையை அவரது சிறிய பகுதிகளாகவும் சேவகர்களாகவும் ஏற்றுக்கொள்ள உதவுகிறது.

அர்ஜுனன் இறைவனின் பக்தனாக இருந்ததால் இந்த அறிவியலில் தகுதியான மாணவனாக இருந்தார். கடவுள் பக்தியை வரிசையாக உயர்ந்த பா4வ் அல்லது உணர்வுகளில் ஏதேனும் ஒன்றில் கடைப்பிடிக்கலாம்: 1) ஶாந்த1 பா4வ்: கடவுளை நம் அரசனாக ஆராதித்தல். 2) தா3ஸ்ய பா4வ்: கடவுளைஎஜமானாகக் கருதுதல். 3) ஸக்2ய பா4வ்: கடவுளை நம் நண்பராக கருதுதல் 4) வாத்1ஸல்ய பா4வ்: கடவுளை நம் குழந்தையாக கருதுதல் 5) மாது4ர்ய பா4வ்: கடவுளை நம் ஆத்மா-பிரியராக வணங்குதல். அர்ஜுனன் கடவுளை தனது நண்பராக வணங்கினார், அதனால், ஸ்ரீ கிருஷ்ணர் அவருடன் தனது நண்பராகவும் பக்தராகவும் பேசுகிறார்.

பக்தி நிறைந்த இதயம் இல்லாமல், பகவத் கீதையின் செய்தியை உண்மையாக புரிந்துகொள்ள முடியாது. இந்த வசனம் பகவத் கீதையின் பண்டிதர்கள், ஞானிகள், யோகிகள், தபஸ்விகள் மற்றும் கடவுள் மீது பக்தி இல்லாத பலர் எழுதிய வர்ணனைகளையும் செல்லாததாக்குகிறது. இந்த வசனத்தின்படி, அவர்கள் பக்தர்கள் இல்லை என்பதால், அர்ஜுனனுக்கு வெளிப்படுத்தப்பட்ட உயர்ந்த அறிவியலின் உண்மையான முக்கியத்துவத்தை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது, எனவே, அவர்களின் வர்ணனைகள் துல்லியமற்றவை மற்றும் முழுமையற்றவை.

Watch Swamiji Explain This Verse