ஸர்வத்3வாராணி ஸந்யம்ய மனோ ஹ்ருதி3 நிருத்4ய ச1 |
மூர்த்4ன்யாதா4யாத்1மன: ப்1ராணமாஸ்தி2தோ1 யோக3தா4ரணாம் ||12||
ஸர்வ-த்வாராணி—-அனைத்து வாயில்களையும்; ஸந்யம்ய--—தடுத்து; மனஹ—--மனதை; ஹ்ருதி--—இதய மண்டலத்தில்; நிருத்ய—--நிலைநிறுத்தி; ச--—மற்றும்; மூர்த்த்னி—--தலையில்; ஆதாய—--நிலைத்து; ஆத்மனஹ—-தன்னுடைய; ப்ராணம்—--உயிர் மூச்சை; ஆஸ்திதஹ—--அமைந்து (உள்ளமைந்து); யோக-தாரணாம்——யோகத்தில் ஒரு நிலைப்படுத்தி
Translation
BG 8.12: உடலின் அனைத்து வாயில்களையும் அடக்கி, மனதை இதயப் பகுதியில் நிலைநிருத்தி, உயிர் மூச்சை தலைக்கு இழுத்து, உறுதியான யோகச் செறிவில் நிலைபெற வேண்டும்.
Commentary
புலன்கள் மூலம் உலகம் மனதில் நுழைகிறது. நாம் முதலில் உணரும் பொருட்களைப் பார்க்கிறோம், கேட்கிறோம், தொடுகிறோம், சுவைக்கிறோம் மற்றும் வாசனை செய்கிறோம். பின்னர் மனம் இந்த பொருள்களின் மீது தங்குகிறது. மீண்டும் மீண்டும் சிந்திப்பது பற்றினை உருவாக்குகிறது, இது தானாகவே மனதில் எண்ணங்களை மீண்டும் மீண்டும் உருவாக்குகிறது. புலன்களைக் கட்டுப்படுத்துவது மனதின் உலகத்தைப் பூட்டுவதற்கான இன்றியமையாத அம்சமாகும். இந்த அபிப்ராயத்தை புறக்கணிக்கும் ஒரு தியான பயிற்சியாளர், கட்டுப்பாடற்ற புலன்கள் உருவாக்கும் உலக எண்ணங்களின் இடைவிடாத ஓட்டத்தை தொடர்ந்து போராட வேண்டும். எனவே, ஸ்ரீ கிருஷ்ணர் உடலின் வாயில்களைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளை வழங்குகிறார் -ஸர்வ-து3வாராணி-ஸந்யம்ய என்ற வார்த்தைகளுக்கு 'உடலுக்குள் நுழையும் அனைத்து செல்வழிகளையும் கட்டுப்படுத்துதல்' என்று பொருள். ஹ்ருதி நிருத்ய என்ற வார்த்தையின் அர்த்தம் 'மனதை இதயத்தில் அடைத்தல்' இது புலன்களை அவற்றின் இயல்பான வெளிச்செல்லும் போக்குகளிலிருந்து கட்டுப்படுத்துகிறது. மனதிலிருந்து பக்தி உணர்வுகளை அங்கு வீற்றிருக்கும் அக்ஷரம் என்றுமழியா பரமாத்மாவிடம் செலுத்துவதை இது குறிக்கிறது. யோக3-தா4ரணாம் என்ற வார்த்தைக்கு ‘உணர்வை இறைவனுடன் இணைத்தல்’ என்று பொருள். இது முழு கவனத்துடன் அவரைத் தியானிப்பதைக் குறிக்கிறது.