Bhagavad Gita: Chapter 8, Verse 13

ஓமித்1யேகா1க்ஷரம் ப்3ரஹ்ம வ்யாஹரன்மாமனுஸ்மரன் |

ய: ப்1ரயாதி த்1யஜன்தே3ஹம் ஸ யாதி11ரமாம் க3தி1ம் ||13||

ஓம்---கடவுளின் உருவமற்ற அம்சத்தைக் குறிக்கும் புனித எழுத்து; இதி—--இவ்வாறு; ஏக—அக்ஷரம்--—ஒற்றெழுத்தை; ப்ரஹ்மா—--முழு உண்மை; வ்யாஹரன்—--கோஷமிட்டவாறே; மாம்--—என்னை (ஸ்ரீ கிருஷ்ணரை); அனுஸ்மரன்--—நினைவில் வைத்தவாறே; யஹ--—யார்; ப்ரயாதி—-பிரிபவர் த்யஜன்--—விட்டு; தேஹம்---—உடலை; ஸஹ--—அவர்; யாதி--—அடைகிறார்; பரமாம்--—உயர்ந்த; கதிம்-——இலக்கை

Translation

BG 8.13: பரம புருஷனாகிய என்னை நினைவு செய்து, ஓம் என்ற எழுத்தை உச்சரித்துக்கொண்டே உடலை விட்டுப் பிரிந்தவன், உன்னதமான இலக்கை அடைவான்.

Commentary

ப்ரணவ் என்றும் அழைக்கப்படும் ஓம் என்ற புனித எழுத்து, ப்ரஹ்மனின் ஒலி வெளிப்பாட்டைக் குறிக்கிறது (நற்குணங்கள் மற்றும் பண்புக்கூறுகள் இல்லாத பரம இறைவனின் உருவமற்ற அம்சம்). எனவே, அது கடவுளைப் போலவே அழியாததாகக் கருதப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணர் இங்கே தியானத்தின் செயல்முறையை அஷ்டாங்க யோக பயிற்சியின் சூழலில் விவரிக்கிறார். துறவு மற்றும் ப்ரஹ்மச்சரியத்தை கடைப்பிடிக்கும் பொழுது மனதை ஒருமுகப்படுத்த ஓம் என்ற எழுத்தை உச்சரிக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார். வேதங்கள் ஓம் என்பதை அனாஹத1 நாத்3 என்றும் குறிப்பிடுகின்றன. இது படைப்பில் வியாபித்திருக்கும் ஒலியாகும், அதை சுரம் கூட்டிய யோகிகளால் கேட்க முடியும்.

பைபிள் சொல்கிறது, 'ஆரம்பத்தில் வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை கடவுளிடம் இருந்தது, வார்த்தை கடவுளாக இருந்தது.' (யோவான் 1:1) கடவுள் முதலில் ஒலியை உருவாக்கினார், அவர் ஒலியிலிருந்து இடத்தை உருவாக்கினார், பின்னர் உருவாக்கும் செயல்பாட்டை தொடர்ந்தார் என்று வேதங்கள் கூறுகின்றன. மேலும் உருவாக்கும் செயல்பாட்டில் அந்த அசல் ஒலி ஓம் ஆக இருந்தது. இதன் விளைவாக, வேத தத்துவத்தில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது மஹா வாக்கியம் அல்லது வேதங்களின் பெரும் ஒலி அதிர்வு என்று அழைக்கப்படுகிறது. இது பீ 3ஜ மந்தி1ரம் என்றும் அழைக்கப்படுகிறது, ஏனெனில் இது பெரும்பாலும் வேத மந்திரங்களின் தொடக்கத்தில் ஹ்ரீம், க்ளீம் மற்றும் பிறவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஓமின் அதிர்வுகள் அ...ஓ....ம் மூன்று எழுத்துக்களைக் கொண்டிருக்கின்றன: ஓம் என்ற முறையான உச்சரிப்பில், ' அ' என்ற ஒலியை வயிற்றில் இருந்து திறந்த தொண்டை மற்றும் வாய் வழியாக ஒலியை எழுப்புவதன் மூலம் ஒருவர் தொடங்குகிறார். இது வாயின் நடுவில் இருந்து உருவாகும் .’ஓ’ என்ற ஒலியின் உச்சரிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. வாயை மூடிக்கொண்டு ‘ம்’ என்று உச்சரிப்பதோடு வரிசை முடிகிறது. அ...ஓ....ம் ஆகிய மூன்று பகுதிகளுக்கும் பல அர்த்தங்கள் மற்றும் விளக்கங்கள் உள்ளன. பக்தர்களைப் பொருத்தவரை, கடவுளின் ஒருவரையும் குறிப்பாக எடுத்துக் காட்டாத அம்சத்திற்கு ஓம் என்று பெயர்.

இந்த ப்ரணவ சப்தம் அஷ்டாங்க யோகத்தில் தியானத்திற்குரிய பொருளாகும். பக்தி யோகத்தின் பாதையில், பக்தர்கள் ராமர், கிருஷ்ணர், சிவன் போன்ற இறைவனின் தனிப்பட்ட பெயர்களை தியானிக்க விரும்புகிறார்கள், ஏனெனில், இந்த தனிப்பட்ட பேரின்பத்தின் அதிக இனிமை இந்தப் பெயர்களில் உள்ளன. இந்த வேறுபாடு வயிற்றில் குழந்தை ,இருப்பதற்கும் மடியில் குழந்தை இருப்பதற்கும் உள்ள வித்தியாசம் போன்றது. வயிற்றில் இருக்கும் குழந்தையை விட மடியில் இருக்கும் குழந்தை மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

நமது தியானத்தின் இறுதிப் பரீட்சை மரண நேரமாகும். மரணத்தின் கடுமையான வலி இருந்தபோதிலும், கடவுள் மீது தங்கள் உணர்வை நிலைநிருத்த முடிந்தவர்கள் இந்த தேர்வில் தேர்ச்சி பெறுகிறார்கள். அத்தகைய நபர்கள் தங்கள் உடலை விட்டு வெளியேறியவுடன் உச்சநிலையை அடைகிறார்கள். இது மிகவும் கடினமானது மற்றும் வாழ்நாள் முழுவதும் பயிற்சி தேவை. பின்வரும் வசனத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் அத்தகைய தேர்ச்சியைப் பெருவதற்கான எளிய வழியைக் கூறுகிறார்