Bhagavad Gita: Chapter 8, Verse 6

யம் யம் வாபி1 ஸ்மரன்பா4வம் த்1யஜத்1யன்தே11லேவரம் |

1ம் த1மேவைதி1 கௌ1ன்தே1ய ஸதா31த்3பா4வபா4வித1: ||6||

யம் யம்—--எவ்வெதை; வா—-அல்லது; அபி--—கூட; ஸ்மரன்—--நினைத்து; பாவம்—--நினைவில்; த்யஜதி—--துறக்கிறார்களோ; அந்தே--—இறுதியில்; கலேவரம்—--உடலை; தம்—தம்—அவ்வதை; ஏவ—நிச்சயமாக; ஏதி—--பெருகிறார்; கௌந்தேய—--குந்தியின் மகன் அர்ஜுனன்; ஸதா—--எப்பொழுதும்; தத்--—அந்த; பாவ-பாவிதஹ——சிந்தனையில் லயித்திருந்த

Translation

BG 8.6: குந்தியின் மகனே, ஒருவர் இறப்பின் பொழுது உடலைத் துறக்கும் நேரத்தில் எதனை நினைவு செய்கிறாரோ, அந்த நிலையை எப்பொழுதும் அத்தகைய சிந்தனையில் ஆழ்ந்து விடுகிறார்.

Commentary

ஒரு கிளிக்கு, ‘காலை வணக்கம்!’ என்று சொல்லிக் கொடுப்பதில் நாம் வெற்றி பெறலாம். ஆனால், நாம் அதன் தொண்டையை அழுத்தினால், அதன் இயற்கையான ஒலியை உருவாக்கவும் வெற்றி பெறலாம். அது செயற்கையாக கற்றுக்கொண்டதை மறந்துவிடும். அதன் இயற்கையான ‘காவ்!’ என்று ஒலியை எழுப்பும். அவ்வாறே, மரணத்தின்பொழுது, ​​நமது மனம் இயற்கையாகவே வாழ்நாள் முழுவதும் பழக்கம் மூலம் .அது உருவாக்கிய எண்ணங்களுக்கு உரிய வழியே பாய்கிறது. நமது பயண திட்டங்களை தீர்மானிக்கும் நேரம் உடுப்பு பெட்டியில் துணிமணிகளை முறையாக அடுக்கி வைத்த பின்பு அல்ல. . மாறாக, அதற்கு முன்னதாகவே கவனமாக திட்டமிடல் மற்றும் செயல்படுத்துதல் தேவைப்படுகிறது. இறக்கும் தருணத்தில் ஒருவரது எண்ணங்களில் எது பிரதானமாக ஆதிக்கம் செலுத்துகிறதோ அதுவே ஒருவரின் அடுத்த பிறவியைத் தீர்மானிக்கும். இதையே ஸ்ரீ கிருஷ்ணர் இந்த வசனத்தில் கூறுகிறார்.

ஒருவரது அன்றாடப் பழக்கவழக்கங்கள் மற்றும் தொடர்புகளின் செல்வாக்கின்படி, வாழ்நாளில் எதைத் தொடர்ந்து சிந்தித்து தியானித்தார்களோ, அதை வைத்து அவரது இறுதி எண்ணங்கள் இயல்பாகவே தீர்மானிக்கப்படும். புராணங்கள் இந்த விஷயத்தை வலியுறுத்த மஹாராஜர் பரத்தின் கதையை விரித்துரைக்கின்றன.

மஹாராஜர் பரத் பண்டைய இந்தியாவில் ஒரு சக்திவாய்ந்த மன்னராக இருந்தார், அவர், ஒரு துறவியாக காட்டில் வாழவும், கடவுளை உணரவும் ராஜ்யத்தைத் துறந்தார். ஒரு நாள், புலியின் உருமல் சத்தம் கேட்டு ஒரு கர்ப்பிணி மான் தண்ணீரில் குதிப்பதைக் கண்டார். பயத்தின் காரணமாக, கர்ப்பமான மான் பெற்றெடுத்த குட்டி தண்ணீரில் மிதக்கத் தொடங்கியது. மஹாராஜர் பரத் தண்ணீரில் குதித்து மான் குட்டியை காப்பாற்றினார். அவர் அதை தனது குடிசைக்கு எடுத்துச் சென்று வளர்க்கத் தொடங்கினார். மிகுந்த பாசத்துடன், அதன் உல்லாச அசைவுகளைப் பார்த்துக் கொண்டிருப்பார். அவர் மான் குட்டிக்கு உணவளிக்க புல்லை சேகரித்து மற்றும் அதன் உடம்பை சூடாக வைத்திருக்க அதை தழுவிக் கொள்வார். மெதுவாக அவரது மனம் கடவுளை விட்டு விலகி, மானில் லயித்தது. மான் குட்டியின் மீது அவரது ஈடுபாடு மிகவும் ஆழமானது, நடைமுறையில் நாள் முழுவதும், அவரது எண்ணங்கள் மானை நோக்கி அலைந்து, பற்று மிகவும் தீவிரமானது, இறக்கும் நேரத்தில் கூட, மான் குட்டியை பற்றி கவலையுற்று மானை அன்பான நினைவுடன் அழைத்தார்.

இதன் விளைவாக, அவரது அடுத்த ஜென்மத்தில், மஹாராஜர் பரத் ஒரு மானாக பிறந்தார். இருப்பினும், அவர் ஆன்மீக பயிற்சி செய்ததால், அவர் தனது முந்தைய ஜென்மத்தில் செய்த தவறை உணர்ந்தார். எனவே, அவர் ஒரு மானாக இருந்தாலும், காட்டில் உள்ள துறவிகளின் ஆசிரமங்களில் தங்குவார். இறுதியாக, அவர் மானின் உடலை துறந்த பொழுது, ​​அவருக்கு மீண்டும் ஒரு மனிதப் பிறவி கொடுக்கப்பட்டது. இம்முறை, அவர் மாபெரும் முனிவர் ஜடபாரதராக ஆனார், மற்றும் தனது ஆன்மிகப் பயிற்சியை முடித்து கடவுளை உணர்ந்தார்.

வசனத்தை ஒருவர் படித்து இறுதி இலட்சியத்தை அடைவதற்கு, ஒப்புயர்வற்ற இறைவனை மரணத்தின் தருணத்தில் மட்டுமே தியானிக்க வேண்டும் என்று முடிவு செய்யக் கூடாது. வாழ்நாள் முழுவதும் ஆயத்தம் இல்லாமல், மரணத்தின் பொழுது கடவுளை நினைவு கூர்வது மிகவும் கடினம் என்று ஸ்கந்த புராணம் கூறுகிறது. மரணம் என்பது ஒரு துன்பந்தருகிற வலிமிகுந்த அனுபவமாகும், ஒருவரின் உள்ளார்ந்த இயல்பை உருவாக்கும் எண்ணங்களுக்கு மனம் இயல்பாகவே ஈர்க்கப்படுகிறது. மனது கடவுளைப் பற்றி சிந்திக்க ஒருவரின் உள்ளார்ந்த இயல்பு அவருடன் ஐக்கியமாக இருக்க வேண்டும். உள் இயல்பு என்பது ஒருவரின் மனம் மற்றும் புத்திக்குள் நிலைத்திருக்கும் உணர்வு. நாம் எதையாவது தொடர்ந்து சிந்தித்துப் பார்த்தால் மட்டுமே அது நமது உள்ளார்ந்த இயல்பின் ஒரு பகுதியாக வெளிப்படும். எனவே, கடவுள்-உணர்வை உள்ளார்ந்த இயல்பாக வளர்த்துக் கொள்ள, நம் வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் இறைவனைப் பற்றி சிந்தித்து நினைவு கூற வேண்டும். இதையே ஸ்ரீ கிருஷ்ணர் அடுத்த வசனத்தில் மீண்டும் வலியுறுத்துகிறார்.