அத2 வ்யவஸ்தி2தா2ன்த்3ருஷ்ட்1வா தா4ர்த1ராஷ்ட்1ரான்க1பி1த்4வஜ: |
ப்1ரவ்ருத்1தே1 ஶஸ்த்1ரஸம்பா1தே1 த4னுருத்3யம்ய பா1ண்ட3வ:
ஹ்ருஷீகே1ஶம் த1தா3 வாக்1யமித3மாஹ மஹீப1தே1 ||20||
அத---அதன்பின்; வ்யவஸ்திதான்---வரிசைப்படுத்தப்பட்ட; த்ருஷ்ட்வா---பார்த்த; தார்தராஷ்ட்ரான்---த்ருதராஷ்டிரிரனின் மகன்கள்; கபித்வஜஹ----“வானர பதாகை தரித்தவரான”; ப்ரவ்ருத்தே----தொடங்க உள்ள; ஶஸ்த்ரஸம்பாதே---ஆயுதங்களைப் பயன்படுத்த; தனுஹு----வில்; யுத்யம்ய---எடுத்து; பாண்டவஹ--- பாண்டுவின் மகன் அர்ஜுனன்; ஹ்ருஷீகேஶம்---ஸ்ரீ கிருஷ்ணரிடம்; ததா----அந்த நேரத்தில்; வாக்யம்----வார்த்தைகளை; இதம்----இந்த; ஆஹ---கூறினார்; மஹீபதே---வேந்தரே!
Translation
BG 1.20: அந்த நேரத்தில் தனது தேரின் கொடியில் ஹனுமானின் முத்திரை குறித்த பாண்டுவின் மகன் அர்ஜுனன் தனது வில்லை எடுத்துக் கொண்டார். ஓ அரசரே, உங்கள் மகன்கள் அவருக்கு எதிராக அணிவகுத்து வருவதை பார்த்த அர்ஜூனன் ஸ்ரீ கிருஷ்ணரிடம் பின்வரும் வார்த்தைகளை பேசினார்.
Commentary
இங்கே சஞ்ஜயன் அர்ஜுனனை "க1பி1 த்4வஜ்" என்று மற்றொரு பெயரில் அழைக்கிறார், இது அர்ஜுனனின் தேரில் வலிமைமிக்க வானர கடவுளான ஹனுமானின் இருப்பை குறிக்கிறது. இதற்குப் பின்னால் ஒரு கதை இருக்கிறது.
ஒருமுறை தனது வில்வித்தை திறன்களைப் பற்றி பெருமிதம் கொண்ட அர்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணரிடம் கீழ்வருமாறு வினவினார். “ராமரின் காலத்தில், குரங்குகள் ஏன் பாரதத்திலிருந்து இலங்கைக்கு கனமான கற்களால் ஒரு பாலத்தை உருவாக்க இவ்வளவு கடினமாக உழைத்தன? ‘‘நான் அங்கு இருந்திருந்தால் நான் அம்புகளால் ஆன பாலத்தை உருவாக்கி இருப்பேன்.’ எல்லாம் அறிந்த இறைவன் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம் ‘சரி உன் பாலத்தை எனக்கு காட்டு’ என்று கேட்டார். மிகவும் திறமையான அர்ஜுனன் ஆயிரக்கணக்கான அம்புகளைப் பொழிந்து ஒரு பெரிய பாலத்தை உருவாக்கினார். ஸ்ரீ கிருஷ்ணர் வலிமைமிக்க ஹனுமானை பாலத்தை சோதிக்கும் வேலைக்கு அழைத்தார். ஹனுமான் பாலத்தின் மீது நடக்க துவங்கியதும், அவரது காலடியில் பாலம் நொறுங்கத் தொடங்கியது. தனது அம்புகளின் பாலம் இறைவன் இராமரின் மிகப்பெரிய இராணுவத்தை நிலைநிறுத்த முடியாது என்பதை அறிந்த அர்ஜுனன் தன் மடமையை உணர்ந்தார். மேலும், தன்னுடைய தப்புக்கு மன்னிப்பு கேட்டார். அதன்பிறகு ஹனுமான் அர்ஜுனனுக்கு அவரது திறமைகளில் ஒருபோதும் பெருமை பட வேண்டாம் என்று கூறி அர்ஜுனனுக்கு தாழ்மையுடன் இருப்பதைப் பற்றி பாடம் புகட்டினார். மேலும் ஹனுமான் பெரும் போரின் பொழுது அவர் அர்ஜுனனின் தேரில் அமர்ந்து இருப்பார் என்ற வரத்தையும் அர்ஜுனனுக்கு அளித்தார். எனவே அர்ஜுனனின் தேர் கொடி சிறந்த வலிமைமிக்க ஹனுமானின் முத்திரை உடையதாக இருந்தது.