Bhagavad Gita: Chapter 1, Verse 41

அத4ர்மாபி44வாத்1க்1ருஷ்ண ப்1ரது3ஷ்யன்தி1 கு1லஸ்த்1ரிய: |

ஸ்த்1ரீஷு து3ஷ்டா1ஸு வார்ஷ்ணேய ஜாயதே1 வர்ணஸங்க1ர: ||41||

அதர்ம—-ஒழுங்கீனம்; அபிபவாத்—--மேலோங்குவதால்; க்ருஷ்ண—--ஶ்ரீ கிருஷ்ணா; ப்ரதுஷ்யன்தி—--நெறி தவறுகிறார்கள்;  குலஸ்த்ரியஹ--—குடும்பப் பெண்கள்; ஸ்த்ரீஷு--—பெண்களிடம் இருந்து; துஷ்டாஸு—-- நெறி தவறிய வார்ஷ்ணேய—- விருஷ்ணியின்  வழியில் தோன்றியவரே -;  ஜாயதே— பிறக்கிறது;  வர்ண-ஸங்கரஹ— தேவையற்ற சந்ததி

Translation

BG 1.41: ஒழுங்கீனம் பரவலாக ஓங்கும் பொழுது ஓ கிருஷ்ணா, குடும்பப் பெண்கள் தார்மீக நெறியிலிருந்து தவறுகிறார்கள்; மற்றும்,  அவ்வாறு அவமார்க்கத்தில் செல்லும் பெண்களிடம் இருந்து, ஓ விருஷ்ணியின்  வழியில் தோன்றியவரே, தேவையற்ற சந்ததியினர் பிறக்கிறார்கள்.

Commentary

வேதப் பண்பாடு பெண்களுக்கு சமூகத்தில் மிக உயர்ந்த இடத்தை வழங்கியது மற்றும் பெண்கள் நல்லொழுக்கமுள்ளவர்களாக இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது. எனவே, மனு ஸ்ம்ருதி கூறுகிறது: யத்1ர நார்யஸ் து1 பூ1ஜ்யந்தே1 ரமந்தே11த்1ர தே3வதா1ஹா (3.56). ‘'எங்கெல்லாம் பெண்கள் தூய்மையான மற்றும் நல்லொழுக்கமுள்ள வாழ்க்கையை நடத்துகிறார்களோ, அவர்களின் தூய்மைக்காக சமூகத்தின் மற்ற மக்களால் வழிபடப்படுகிறார்களோ, அங்கு தேவலோக தெய்வங்கள் மகிழ்ச்சியடைகின்றன.’ ஆயினும் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்களாககும்போது, பொறுப்பற்ற ஆண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுவதன் மூலம் ஆதாயம் பெறுகிறார்கள், அதன் விளைவாக தேவையற்ற குழந்தைகள் பிறக்கின்றன.

Watch Swamiji Explain This Verse