Bhagavad Gita: Chapter 1, Verse 11

அயனேஷு ச1 ஸர்வேஷு  யதா2பா43மவஸ்தி2தா1: |

பீ4ஷ்மமேவாபி4ரக்ஷந்து1  ப4வந்த1: ஸர்வ ஏவ ஹி ||11||

அயனேஷு—--இந்த பல்வேறு தளத்தகைகளில்; ச—--மேலும்; ஸர்வேஷு—--அனைவரும்; யதாபாகம்—--அந்தந்த நிலையில்; அவஸ்திதாஹா—--அமர்த்துள்ளப்பட்டு; பீஷ்மம் —--பாட்டனார் பீஷ்மருக்கு; ஏவ—--மட்டும்; அபிரக்ஷந்து—--பாதுகாப்பு அளிப்பீர்களாக; பவந்தஹ--—நீங்கள்; ஸர்வ----அனைவரும்; ஏவ ஹி—--இருப்பினும்

Translation

BG 1.11: ஆகையால், கௌரவ இராணுவத்தின் தனித்தனி தளத்தகைகளுக்கு தற்காப்பு அளிக்கும் அனைத்து தளபதிகளையும் அவரவர் சூழ்நிலையிலிருந்து பாட்டனார் பீஷ்மருக்கு முழு ஆதரவளிக்குமாறு நான் இப்பொழுது அழைக்கிறேன்.

Commentary

பீஷ்மரின் வெல்ல முடியாத தன்மையை ஒரு அனுகூலமாக கண்ட துரியோதனன், அதை தனது இராணுவதின் வலிமையாகவும் உத்வேகமாகவும் பயன்படுத்த விரும்பினான். எனவே, தனது இராணுவ தளபதிகள் அனைவரையும் அவர்கள் தங்கள் சொந்த நிலைகளை பாதுகாத்துக் கொள்ளும் அதே நேரத்தில் பாட்டனார் பீஷ்மருக்கும் முழு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டான்.

Watch Swamiji Explain This Verse