Bhagavad Gita: Chapter 1, Verse 25

பீ4ஷ்மத்3ரோணப்1ரமுக21: ஸர்வேஷாம் ச1 மஹீக்ஷிதா1ம் |

உவாச1 பா1ர்த21ஶ்யைதா1ன்ஸமவேதா1ன்கு1ரூனிதி1 ||25||

பீஷ்ம---பாட்டனார் பீஷ்மர்;  த்ரோண---த்ரோணாச்சாரியர்;  ப்ரமுகதஹ---முன்னிலையில்;  ஸர்வேஷாம்---அனைத்து;  ச---மற்றும்;  மஹீ-க்ஷிதாம்---மற்ற அரசர்கள்;  உவாச---கூறினார்;  பார்த்த----ப்ரித்தாவின் மகன் அர்ஜுனன்;  பஶ்ய----பார்; ஏதான்---இவர்களை ; ஸமவேதான்—குழுமியிருக்கும்; குரூன்---குரு வம்சத்தினரை;  இதி---என்று

Translation

BG 1.25: பீஷ்மர், த்ரோணாச்சாரியர் மற்றும் பிற மன்னர்கள் முன்னிலையில் ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார்: ஓ பார்த்தா, இங்கு குழுமியிருக்கும் குரு வம்சத்தினரை காண்பாய்.

Commentary

கு1ரு என்ற சொல் கௌரவர்கள் மற்றும் பாண்டவர்கள் இருவரையும் உள்ளடக்கியது, ஏனெனில், அவர்கள் இருவரும் குரு வம்சத்தைச் சேர்ந்தவர்கள். ஸ்ரீ கிருஷ்ணர் குரு ’என்ற வார்த்தையை வேண்டுமென்றே பயன்படுத்துகிறார். இவ்வாறு கூறி அர்ஜுனனை அவர்கள் அனைவரும் ஒன்று என்று உணரச் செய்து அவருடைய மனதில் உறவின் உணர்வுகளை தோற்றுவித்து அர்ஜுனனைப் குழப்ப விரும்புகிறார். இது ஸ்ரீ கிருஷ்ணருக்கு பகவத்கீதையின் நற்செய்தியை வரவிருக்கும் கலியுகத்தின் மனிதர்களின் நலனுக்காகப் பிரசங்கிக்கும் வாய்ப்பைக் கொடுக்கும். எனவே, தார்41ராஷ்ட்ரான் (திரிதராஷ்டிரரின் மகன்கள்) என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, அவர் கு1ரூன் (குருவின் வம்சத்தில் தோன்றியவர்கள்) என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் சீழ் பிடித்த கட்டியினால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு முதலில் மருந்தைக் கொடுத்து, அதை உறிஞ்சி, பின்னர் அறுவை சிகிச்சை செய்து நோயுற்ற பகுதியை அகற்றுவது போல ஒப்புயர்வற்ற ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனின் மறைந்திருக்கும் மாயையை முதலில் எழுப்பி, பின்னர் அதை அழிப்பதற்காக செயல்படுகிறார்.

Watch Swamiji Explain This Verse