இந்த அத்தியாயத்தில் அர்ஜுனன் சூழ்நிலையை சமாளிப்பதற்கான தனது இயலாமையை மீண்டும் வலியுறுத்துகிறார். மற்றும் வரவிருக்கும் போரில் தனது கடமையை செய்ய மறுக்கிறார். பின்னர் அவர் முறைப்படி ஸ்ரீ கிருஷ்ணரை தனது ஆன்மீக ஆசிரியராக இருக்கும்படி கேட்டுக் கொண்டு அவருக்கு சரியான செயல்பாட்டின் பாதையில் வழி காட்டுமாறு ஸ்ரீ கிருஷ்ணரிடம் மன்றாடுகிறார். உடல் அழிந்தாலும் ஆத்மாவின் அழியாத தன்மையை பற்றி அவருக்கு கற்பிப்பதன் மூலம் ஒப்புயர்வற்ற ஸ்ரீ கிருஷ்ணர் தெய்வீக அறிவை வழங்க தொடங்குகிறார். ஒருவர் புதிய ஆடைகளை அணிந்து பழைய ஆடைகளை நிராகரிப்பது போல் ஆத்மா உடல்களை ஒரு ஆயுட்காலத்திலிருந்து மற்றொரு ஆயுட்காலத்திற்கு மாற்றுகிறது. பின்னர் ஸ்ரீ கிருஷ்ணர் சமூகப் பொறுப்புகள் என்ற தலைப்பிற்குச் செல்கிறார். அர்ஜுனனுக்கு ஒரு போர்வீரனின் கடமையான நீதியை நிலைநிறுத்துவதற்காக போராடும் கடமையை நினைவுபடுத்துகிறார். நீதியை நிலைநிறுத்துவதற்காக போராடுவது ஒரு நல்லொழுக்கமான செயல் மட்டுமல்லாமல் அவரது கடமையை நினைவுபடுத்துகிறார். ஒருவரின் சமூகக் கடமையை நிறைவேற்றுவது ஒரு நல்லொழுக்கமான செயல், தேவலோக வாசஸ்தலங்களில் இருப்பிடம் கிடைக்கும் என்பதை விளக்குகிறார். அதே நேரத்தில் கடமையை மீறுவது அவருக்கு அவமானத்தையும் அவப்பெயரையும் மட்டுமே அளிக்கும் என்று அர்ஜுனனுக்கு அவர் விளக்குகிறார்.
இவ்வுலக வாழ்க்கை தரத்திலிருந்து அர்ஜுனனை ஊக்கிவித்த ஸ்ரீ கிருஷ்ணர் பணியின் அறிவியலில் ஆழமாக இறங்குகிறார். செய்யும் செயல்களின் பலனில் பற்று இல்லாமல் அர்ஜுனிடம் செயல்களை செய்யும்படி கேட்கிறார். செய்யும் பணிகளின் பலனை விரும்பாமல் செய்யும் பணிகளின் அறிவியலை அவர் புத்தி யோகம் அல்லது 'புத்தியின் யோகம்' என்று குறிப்பிடுகிறார். உழைப்பின் பலன்களுக்கான மன ஏக்கத்தைக் கட்டுப்படுத்த புத்தியைப் பயன்படுத்த வேண்டும். அப்படி உணர்ந்து செயல்படுவதால், பந்தத்தை உருவாக்கும் கர்மாக்கள் (செயல் வினைகள்) பந்தத்தை முறிக்கும் முன்வினைப் பயன்களாக மாறி, அர்ஜுனன் துக்கங்களுக்கு அப்பாற்பட்ட நிலையை அடைய உதவும்.
அர்ஜுனன் தெய்வீக உணர்வில் உள்ளவர்களின் அடையாளங்களைப் பற்றி விசாரிக்கிறார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக, ஸ்ரீ கிருஷ்ணர், ஆழ்நிலையில் இருக்கும் நபர்கள் எவ்வாறு பற்றுதல், பயம் மற்றும் கோபத்திலிருந்து விடுபடுகிறார்கள் என்பதை விவரிக்கிறார்; அவர்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் சீராக மற்றும் அமைதிகுலைவற்ற நிலையில் இருக்கின்றனர்; அவர்களின் புலன்கள் தன்வயப்படுத்தப்பட்டு மேலும் அவர்களின் மனம் எப்பொழுதும் கடவுளில் லயித்திருக்கும். மனதின் துன்பங்களான காமம், கோபம், பேராசை ஆகியவை எவ்வாறு உருவாகின்றன, மற்றும் அவற்றை எவ்வாறு அகற்றலாம் என்பதையும் படிப்படியாக விளக்குகிறார்.
Bhagavad Gita 2.1 View commentary »
ஸஞ்ஜயன் கூறினார்: அர்ஜுனன் துக்கமடைந்து பரிதாபத்தில் மூழ்கியிருப்பதையும், அவரது கண்களில் கண்ணீர் மல்குவதையும் பார்த்து, ஸ்ரீ கிருஷ்ணர் பின்வரும் வார்த்தைகளை பேசினார்.
Bhagavad Gita 2.2 View commentary »
ஒப்புயர்வற்ற பகவான் கூறினார் என் அன்பான அர்ஜுனா, இன்னலுக்கு உட்பட்ட இந்த நேரத்தில் இந்த மாயை உன்னை எப்படி வென்றது? இது ஒரு மரியாதைக்குரிய நபருக்கு பொருந்தாது. உயர்ந்த இடங்களுக்கு அல்லாமல் இது அவமானத்திற்கு வழிவகுக்கிறது.
Bhagavad Gita 2.3 View commentary »
ஓ பார்த்தா, இந்த ஆண்மையின்மைக்கு அடிபணிவது உனக்குப் பொருந்தாது. எதிரிகளை வென்று அடக்கியவனே இத்தகைய முக்கியமல்லாத வீண் பலவீனமான மனத் தளர்ச்சியை தவிர்த்துவிட்டு எழுந்திரு.
Bhagavad Gita 2.4 View commentary »
அர்ஜுனன் கூறினார்: ஓ மதுஸூதனா, எதிரிகளை அழிப்பவரே, என் வழிபாட்டிற்குரிய பீஷ்மர், துரோணாச்சாரியர் போன்ற பெரியோர்களின் மீது நான் எவ்வாறு அம்புகளை எய்வது?
Bhagavad Gita 2.5 View commentary »
என்னுடைய ஆசிரியர்களான இந்த உன்னத பெரியவர்களைக் கொன்று வாழ்க்கையை அனுபவிப்பதை விட இந்த உலகில் பிச்சை எடுத்து வாழ்வது சிறந்தது. அவர்களைக் கொன்றால், நாம் அனுபவிக்கும் செல்வமும், இன்பமும் இரத்தத்தால் கறைபடும்.
Bhagavad Gita 2.6 View commentary »
இந்தப் போரின் எந்த முடிவு நமக்குச் சிறந்தது என்று கூடத் தெரியாது-- அவர்களை வெல்வது அல்லது அவர்களால் வெற்றி பெறுவது. அவர்களைக் கொன்ற பிறகும் நாம் வாழ ஆசைப்பட மாட்டோம். ஆயினும் அவர்கள் த்ருதராஷ்டிரர் உடன் சேர்ந்து போராட, இப்பொழுது போர்க்களத்தில் நம் முன். நிற்கிறார்கள்.
Bhagavad Gita 2.7 View commentary »
எனது கடமையைப் பற்றி நான் குழப்பமடைந்து, கவலையுடனும் அச்சத்த்டனும் சூழப்பட்டிருக்கிறேன். நான் உங்களுடைய சீடன் மற்றும் உங்களிடம் சரண் அடைந்துள்ளேன். தயவு செய்து எனக்கு எது சிறந்தது என்று அறிவுறுத்துங்கள்.
Bhagavad Gita 2.8 View commentary »
இந்த வேதனையிலிருந்து என்னுடைய உணர்வுகளை பேணிக் காக்கவும் மற்றும் இந்த வேதனையை விரட்டவும் எந்த வழியயும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. நான் பூமியில் வளமான மற்றும் நிகரற்ற ராஜ்யத்தை வென்றாலும் அல்லது தேவலோக தெய்வங்களைப் போன்ற இறையாண்மையை பெற்றாலும் இந்த துயரத்தை என்னால் அகற்ற முடியாது.
Bhagavad Gita 2.9 View commentary »
ஸஞ்ஜயன் கூறினார்: இவ்வாறு பேசிவிட்டு, எதிரிகளை தண்டிக்கும் குடா கேஶன், ஹ்ருஷிகேஷிடம், 'கோவிந்தா, நான் போரிட மாட்டேன்' என கூறி, அமைதியாகி விட்டார்.
Bhagavad Gita 2.10 View commentary »
ஓ திருதராஷ்டிரரே, அதன்பிறகு, இரு சேனைகளுக்கும் நடுவே, ஸ்ரீ கிருஷ்ணர், துக்கமடைந்தவரிடம் புன்னகையுடன் பின்வரும் வார்த்தைகளைப் பேசினார்.
Bhagavad Gita 2.11 View commentary »
ஒப்புயர்வற்ற பகவான் கூறினார்: நீ ஞான வார்த்தைகளைப் பேசும் பொழுது, துக்கப்படுவதற்கு தகுதியற்ற காரணங்களால் துயருற்று இருக்கிறாய். விவேகமுடையவர்கள் உயிருடன் இருப்பவர்களுக்காகவோ, இறந்தவர்களுக்காகவோ புலம்புவதில்லை.
Bhagavad Gita 2.12 View commentary »
நான் இல்லாத காலம் இருந்ததில்லை, நீயும் இந்த அனைத்து மன்னர்களும் இல்லாத காலம் இருந்ததில்லை; எதிர்காலத்திலும் நம்மில் எவரும் இல்லாமல் இருக்க மாட்டோம்.
Bhagavad Gita 2.13 View commentary »
உடலுள்ள ஆன்மா குழந்தைப்பருவத்திலிருந்து இளமைப் பருவம் மற்றும் முதுமை வரை தொடர்ந்து கடந்து செல்வது போலவே, மரணத்தின் பொழுது ஆன்மா மற்றொரு உடலுக்குள் செல்கிறது. அறிவாளிகள் இதனால் மயங்கி விடுவதில்லை.
Bhagavad Gita 2.14 View commentary »
குந்தியின் மகனே, புலன்களுக்கும் புலபொருட்களுக்கும் இடையிலான தொடர்பு மகிழ்ச்சி மற்றும் துன்பம் பற்றிய நொடிப்பொழுதான உணர்வுகளுக்கு வழிவகுக்கிறது. இவை நிரந்தரமற்றவை, இவை குளிர்காலம் மற்றும் கோடை காலங்களைப் போல வந்து செல்கின்றன. பரத வம்சத்தில் தோன்றிய அர்ஜுனா, அமைதி குலையாமல் அவைகளை சகித்துக்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும்.
Bhagavad Gita 2.15 View commentary »
ஓ அர்ஜுனா, மகிழ்ச்சி மற்றும் துன்பத்தால் பாதிக்கப்படாமல் இரண்டிலும் நிலையாக இருப்பவனே மனிதர்களில் உன்னதமானவன். அத்தகையவன் விடுதலைக்கு தகுதி பெறுகிறான்.
Bhagavad Gita 2.16 View commentary »
நிலையற்றவற்றில் சகிப்புத்தன்மை இல்லை, மற்றும் நித்தியத்திற்கு இடைநிறுத்தம் இல்லை. இந்த இரண்டின் இயல்புகளையும் ஆய்வு செய்தபின், உண்மையைக் கண்டறியும் தீர்க்கதரிசிகள் இந்த முடிவுக்கு வந்தனர்.
Bhagavad Gita 2.17 View commentary »
உடல் முழுவதும வியாபித்துள்ளதை அழியாத, அழியாதது என்று அறிந்து கொள். ஆத்மாவின் அழிவை யவராலும் ஏற்படுத்த முடியாது.
Bhagavad Gita 2.18 View commentary »
ஸ்தூல உடல் மட்டுமே அழியக் கூடியது. உள்ளிருக்கும் ஆன்மா அழியாதது, அளவிட முடியாதது, மற்றும் நித்தியமானது. எனவே, ஓ, பரத வம்சத்தில் தோன்றியவனே, போரிடு.
Bhagavad Gita 2.19 View commentary »
ஆன்மாவால் கொல்ல முடியும் அல்லது ஆன்மாவைக் கொல்ல முடியும் என்று நினைக்கும் இருவருமே விவரமறிந்தவரல்ல. உண்மையில், ஆன்மா கொல்வதோ அல்லது கொல்லப் கொல்லப்படுபடுவதோ இல்லை.
Bhagavad Gita 2.20 View commentary »
ஆன்மா பிறப்பதுமில்லை, இறப்பதுமில்லை; அல்லது இது ஒரு காலத்தில் இருந்திருந்து, எக்காலத்திலும் இல்லாமல் இருந்ததில்லை. ஆன்மா பிறப்பற்றது, நித்தியமானது, அழியாதது, வயது அற்றது. உடல் அழியும்போது அது அழிவதில்லை.
Bhagavad Gita 2.21 View commentary »
ஓ பார்தா, ஆன்மாவை அழியாதது, நித்தியமானது, பிறக்காதது. மற்றும் மாறாதது என்று அறிந்தவர் எவ்வாறு யாரையும் கொல்வும் மற்றும் யாரையும் கொலை செய்யவும் முடியும்?
Bhagavad Gita 2.22 View commentary »
ஒருவன் கந்தல் கீறலாய்ப்போன ஆடைகளை அகற்றிவிட்டு, புதிய ஆடைகளை அணிவது போல, மரணத்தின் போது, ஆன்மா தனது தேய்ந்து போன உடலைக் களைந்துவிட்டு புதியதொன்றில் நுழைகிறது.
Bhagavad Gita 2.23 View commentary »
ஆயுதங்களால் ஆன்மாவை துண்டாக்க முடியாது, நெருப்பால் எரிக்க முடியாது. தண்ணீரால் அதை நனைக்க முடியாது, காற்றால் உலர்த்தவும் முடியாது.
Bhagavad Gita 2.24 View commentary »
ஆன்மா உடைக்க முடியாதது மற்றும் எரிக்க முடியாதது; அதை ஈரப்படுத்தவோ உலர்த்தவோ முடியாது. அது எப்போதும், எல்லா இடங்களிலும், மாறாதது, மாற்றமுடியாதது, ஆதியானது.
Bhagavad Gita 2.25 View commentary »
ஆன்மா கட்புலனாகாதது, அறிவுக்கு எட்டாதது, மற்றும் மாற்ற முடியாதது என்று பேசப்படுகிறது. இதை உணர்ந்த, நீ உடலை நினைத்து வருத்தப்படக்கூடாது.
Bhagavad Gita 2.26 View commentary »
எனினும், சுயம் நிலையான பிறப்பு மற்றும் இறப்புக்கு உட்பட்டது என்று நீ நினைத்தால், ஓ வலிமையான கைகளை உடைய அர்ஜுனனே, அப்படியிருந்தும் நீ இப்படி வருத்தப்படக்கூடாது.
Bhagavad Gita 2.27 View commentary »
பிறந்தவருக்கு மரணம் நிச்சயம், இறந்தவருக்கு மறுபிறப்பு தவிர்க்க முடியாதது. எனவே, நீ தவிர்க்க முடியாததை நினைத்து புலம்பக்கூடாது.
Bhagavad Gita 2.28 View commentary »
ஓ பரத வம்சத்தின் வழித்தோன்றலே, படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களும் பிறப்பதற்கு முன் வெளிப்படாமல், வாழ்வில் வெளிப்பட்டு, மீண்டும் இறப்பின் பின் வெளிப்படாமல் இருக்கின்றன. அதனால் ஏன் வருத்தப்பட வேண்டும்?
Bhagavad Gita 2.29 View commentary »
சிலர் ஆன்மாவை ஆச்சரியமாக பார்க்கிறார்கள், சிலர் அதை ஆச்சரியமாக விவரிக்கிறார்கள், சிலர் ஆன்மாவை ஆச்சரியமாக கேட்கிறார்கள், மற்றவர்கள் கேட்டாலும் கூட அதை புரிந்துகொள்ள முடிவதில்லை.
Bhagavad Gita 2.30 View commentary »
ஓ அர்ஜுனா, உடலுக்குள் இருக்கும் ஆத்மா அழியாதது; ஆகையால் , நீ யாருடைய இழப்புக்காகவும் வருந்தாதே.
Bhagavad Gita 2.31 View commentary »
அதுமட்டுமின்றி, ஒரு போர்வீரனாக உனது கடமையைக் கருதி, நீ தளரக் கூடாது. உண்மையில், ஒரு போர்வீரனுக்கு, நீதியை நிலைநிறுத்துவதற்காக போராடுவதை விட சிறந்த ஈடுபாடு எதுவும் இல்லை.
Bhagavad Gita 2.32 View commentary »
ஓ பார்த் சன்மார்க்கத்தை பாதுகாப்பதற்கான அத்தய வாய்ப்புகளை எதிர்பார்க்காமல் பெரும் போர் வீரர்களுக்கு தேவலோக வாசஸ்தலங்களின் படிகட்டுகள் திறக்கப்படுகின்றன.
Bhagavad Gita 2.33 View commentary »
இருப்பினும், உன் சமூக கடமையையும் நற்பெயரையும் கைவிட்டு இந்த நேர்மையான போரில் ஈடுபட மறுத்தால், நீ நிச்சயமாக பாவத்தை சந்திக்க வேண்டும்.
Bhagavad Gita 2.34 View commentary »
மக்கள் உன்னை கோழை, படைத்துறை விட்டோடுபவன் என்று பேசுவார்கள். ஒரு மரியாதைக்குரிய நபருக்கு, இழிபழி மரணத்தை விட மோசமானது.
Bhagavad Gita 2.35 View commentary »
உன்னை உயர்வாக மதிப்பிடும் வீரமிக்க தளபதிகள் நீ போர்க்களத்திலிருந்து பயந்து ஓடி விட்டதாக எண்ணுவார்கள். இதனால், உன் மீதான மரியாதையை இழக்க நேரிடும்.
Bhagavad Gita 2.36 View commentary »
உன் எதிரிகள் உன் வல்லமையை பழித்துரைத்து, மதிப்பிழக்கும் இரக்கமற்ற, அன்பில்லாத, வார்த்தைகளால் உன்னை அவமானப்படுத்துவார்கள். ஐயோ, இதைவிட வேதனை என்ன இருக்க முடியும்?
Bhagavad Gita 2.37 View commentary »
நீ போரில் போர்க்களத்தில் கொல்லப்பட்டால் தேவலோக வாசஸ்தலங்களுக்கு செல்வாய் அல்லது நீ வெற்றி பெற்று தரணியில் ராஜ்யத்தை அனுபவிப்பாய். எனவே, குந்தியின் மகனே உறுதியுடன் எழுந்து போருக்கு தயாராக இரு.
Bhagavad Gita 2.38 View commentary »
மகிழ்ச்சி மற்றும் துன்பம், இழப்பு மற்றும் லாபம், வெற்றி மற்றும் தோல்வியை ஒரே மாதிரியாக கருதி, கடமைக்காக போராடு. இவ்வாறு நீ பொறுப்பை நிறைவேற்றினால் ஒரு பொழுதும் பாவம் செய்தவன் ஆக மாட்டாய்.
Bhagavad Gita 2.39 View commentary »
இதுவரை, ஆன்மாவின் தன்மையைப் பற்றிய ஸாங்க்2ய யோகம் அல்லது பகுப்பாய்வு அறிவை நான் விளக்கினேன். இப்போது, ஓ பார்த், நான் புத்தி யோகம் அல்லது புத்தி யோகத்தை வெளிப்படுத்துவதைக் கேள். அப்படிப் புரிந்து கொண்டு வேலை செய்யும் பொழுது கர்ம பந்தத்திலிருந்து விடுபடுவாய்.
Bhagavad Gita 2.40 View commentary »
இந்த உணர்வு நிலையில் வேலை செய்வதால், இழப்பு அல்லது பாதகமான விளைவு எதுவும் இல்லை, மேலும் ஒரு சிறிய முயற்சி கூட பெரிய ஆபத்திலிருந்து ஒருவரைக் காப்பாற்றுகிறது.
Bhagavad Gita 2.41 View commentary »
ஓ, குரு வம்சத்தில் தோன்றியவனே, இந்தப் பாதையில் செல்பவர்களின் புத்தி உறுதியானது, அவர்களின் நோக்கம் ஒன்றுபட்டது. ஆனால் உறுதியற்றவர்களின் புத்தி பல கிளைகளைக் கொண்டது.
Bhagavad Gita 2.42 – 2.43 View commentary »
வரையறுக்கப்பட்ட புரிதல் கொண்டவர்கள், வேதங்களின் சொல்நயமிக்க வார்த்தைகளால் ஈர்க்கப்படுகிறார்கள், இது தேவலோக வசிப்பிடங்களுக்கு உயர்த்துவதற்கான ஆடம்பரமான சடங்குகளை பரிந்துரைக்கிறது; மற்றும், அவற்றில் எந்த உயர்ந்த கொள்கையும் விவரிக்கப்படவில்லை என்று மெய்யெனக்க கொள்கிறார்கள். அவர்கள் தங்கள் புலன்களை மகிழ்விக்கும் வேதங்களின் பகுதிகளை மட்டுமே மகிமைப்படுத்துகிறார்கள்; மற்றும் உயர் பிறப்பு, செழுமை, புலனின்பம் மற்றும் தேவலோக உறைவிடங்களுக்கு உயர்வு ஆகியவற்றை அடைவதற்காக ஆடம்பரமான சடங்குகளைச் செய்கிறார்கள்.
Bhagavad Gita 2.44 View commentary »
உலக இன்பங்களில் ஆழமாகப் பற்றுக்கொண்ட அவர்களின் மனதாலும், இத்தகைய விஷயங்களால் குழம்பிப்போயிருக்கும் அவர்களுடைய புத்திகளாலும், கடவுளை நோக்கிய பாதையில் வெற்றி பெறுவதற்கான உறுதியான தீர்மானத்தை அவர்களால் கொண்டிருக்க முடியாது.
Bhagavad Gita 2.45 View commentary »
வேதங்கள் ஜட இயற்கையின் மூன்று முறைகளைக் கையாள்கின்றன. ஓ அர்ஜுனா, இந்த மூன்று முறைகளில் இருந்து தூய ஆன்மிக உணர்வு நிலைக்கு உயரவும். இருமைகளிலிருந்து உன்னை விடுவித்து, நித்தியமாக சத்தியத்தில் நிலைத்திருந்து, பொருள் ஆதாயம் மற்றும் பாதுகாப்பைப் பற்றி கவலைப்படாமல், சுயத்தில் நிலைத்திரு.
Bhagavad Gita 2.46 View commentary »
ஒரு சிறிய கிணற்று நீர் எந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறதோ, அது இயற்கையாகவே ஒரு பெரிய ஏரியால் வழங்கப்படுகிறது. அதுபோலவே, பூரண சத்தியத்தை உணர்ந்தவன் எல்லா வேதங்களின் நோக்கத்தையும் நிறைவேற்றுகிறான்.
Bhagavad Gita 2.47 View commentary »
உனக்கு பரிந்துரைக்கப்பட்ட கடமைகளைச் செய்ய உனக்கு உரிமை உண்டு, ஆனால் உன் செயல்களின் பலன்களைப் பெற உனக்கு உரிமை இல்லை. ஒருபோதும் உன் செயல்களின் முடிவுகளுக்கு நீயே காரணம் என்று கருதாதே, அல்லது செயலற்ற தன்மையுடன் இணைந்து இருக்காதே.
Bhagavad Gita 2.48 View commentary »
அர்ஜுனா, வெற்றி தோல்வி மீதான பற்றுதலைக் கைவிட்டு உன் கடமையைச் செய்வதில் உறுதியாக இரு. அத்தகைய சமநிலை யோகம் என்று அழைக்கப்படுகிறது.
Bhagavad Gita 2.49 View commentary »
தெய்வீக அறிவு மற்றும் நுண்ணறிவில் அடைக்கலம் தேடு. ஓ அர்ஜுனா, தெய்வீக அறிவில் நிறுவப்பட்ட புத்திசாலித்தனத்துடன் செய்யப்படும் செயல்களை விட நிச்சயமாக தாழ்ந்த வெகுமதி தேடும் செயல்களை நிராகரிக்கவும். கஞ்சத்தனம் உடையவர்கள் தங்கள் படைப்புகளின் பலனை அனுபவிக்க முயல்பவர்கள்.
Bhagavad Gita 2.50 View commentary »
பற்றின்றி வேலை செய்யும் அறிவியலை விவேகத்துடன் கடைப்பிடிப்பவர், இந்த ஜன்மத்திலேயே நல்ல மற்றும் கெட்ட வினை‘களில் இருந்து விடுபடலாம். எனவே, திறமையாக (சரியான உணர்வில்) வேலை செய்யும் கலையான யோகத்திற்காக பாடுபடுங்கள்.
Bhagavad Gita 2.51 View commentary »
அறிவின் சமநிலையைக் கொண்ட மெய்யறிவார்ந்தவர்கள், வாழ்க்கை மற்றும் இறப்பு சுழற்சியில் ஒருவரைப் பிணைக்கும் செயல்களின் பலன்களின் மீதான பற்றுதலைக் கைவிடுகிறார்கள். அத்தகைய உணர்வில் வேலை செய்வதன் மூலம், அவர்கள் எல்லா துன்பங்களுக்கும் அப்பாற்பட்ட நிலையை அடைகிறார்கள்.
Bhagavad Gita 2.52 View commentary »
உன் புத்தி மாயையின் சூழலைக் கடக்கும்போது, நீ கேட்டவை மற்றும் இன்னும் கேட்கப்பட வேண்டியவை (இம்மை மற்றும் மறுமையில் உள்ள இன்பங்கள்) பற்றி விருப்புவெறுப்பின்மை பெறுவாய்.
Bhagavad Gita 2.53 View commentary »
உன் நுண்ணறிவானது வேதங்களின் பலனுள்ள பகுதிகளால் ஈர்க்கப்படுவதை நிறுத்திவிட்டு, தெய்வீக உணர்வில் உறுதியாக இருக்கும் போது, நீ சரியான யோக நிலையை அடைகிறாய்.
Bhagavad Gita 2.54 View commentary »
அர்ஜுன் கூறினார்: ஓ கேஶவா, தெய்வீக உணர்வில் நிலைத்திருப்பவரின் மனநிலை என்ன? ஒரு நபர் எப்படி பேசுவார்? அவர் எப்படி நடக்கிறார்?
Bhagavad Gita 2.55 View commentary »
பகவான் கூறினார்: ஒருவன் மனதைத் துன்புறுத்தும் புலன்களின் அனைத்து சுயநல ஆசைகளையும், வேட்கைகளையும் நிராகரித்து சுயத்தை உணர்ந்து திருப்தி அடையும் போது, அத்தகைய நபர் ஆழ்நிலையில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
Bhagavad Gita 2.56 View commentary »
எவருடைய மனம் துன்பங்களுக்கு மத்தியில் கலக்கமில்லாமல் இருக்கிறதோ, இன்பத்திற்காக ஏங்காமல், பற்று, பயம், மற்றும் கோபம் அற்று இருக்கிறதோ அவர் நிலையான ஞானமுள்ள ஞானி என்று அழைக்கப்படுகிறார்.
Bhagavad Gita 2.57 View commentary »
எவர் எல்லா நிலைகளிலும் பற்றற்று, நல்ல அதிர்ஷ்டத்தால் மகிழ்ச்சி அடையாமல் மற்றும் இன்னல்களால் மனச் சோர்வு அடையாமல் இருக்கிறாரோ அவர் முழுமையான, நிலையான அறிவை கொண்ட ஞானி ஆவார்.
Bhagavad Gita 2.58 View commentary »
புலன்களை அவற்றின் பொருள்களிலிருந்து விலக்கிக் கொள்ளக்கூடியவன், ஆமை தன் உறுப்புகளை ஓட்டுக்குள் பின் இழுத்துக் கொள்வது போல, தெய்வீக ஞானத்தில் நிலைபெற்றுள்ளான்.
Bhagavad Gita 2.59 View commentary »
ஆர்வமுள்ளவர்கள் தங்கள் இன்பப் பொருட்களிலிருந்து புலன்களைக் கட்டுப் படுத்தினாலும், புலன் பொருள்களுக்கான சுவை எஞ்சியுள்ளது. இருப்பினும், பரமத்தை உணர்ந்தவர்களுக்கு இந்த சுவை கூட நின்றுவிடுகிறது.
Bhagavad Gita 2.60 View commentary »
குந்தியின் மகனே, புலன்கள் மிகவும் வலுவாகவும், கொந்தளிப்பாகவும் உள்ளன, அவை பாகுபாடு மற்றும் தன்னடக்கத்தைக் கடைப்பிடிக்கும் ஒரு நபரின் மனதைக் கூட வலுக்கட்டாயமாக எடுத்துச் செல்ல முடியும்.
Bhagavad Gita 2.61 View commentary »
அவர்கள் பரிபூரண அறிவில் நிலைநிறுத்தப்பட்டவர்கள், அவர்கள் தங்கள் புலன்களை அடக்கி, தங்கள் மனதை எப்போதும் என்னில் லயித்து வைத்திருக்கிறார்கள்.
Bhagavad Gita 2.62 View commentary »
புலன்களின் பொருள்களைப் பற்றி சிந்திக்கும்போது, அவற்றின் மீது பற்று வளர்கிறது. பற்றுதல் ஆசைக்கு வழிவகுக்கிறது, ஆசையிலிருந்து கோபம் எழுகிறது.
Bhagavad Gita 2.63 View commentary »
கோபம் பகுத்தறிவின் மேகமூட்டத்திற்கு வழிவகுக்கிறது, இதன் விளைவாக நினைவுத் திறன் குழப்பமடைகிறது. நினைவாற்றல் குழப்பமடையும் போது, புத்தி அழிந்துவிடும்; மற்றும் புத்தி அழிந்தால், ஒருவன் பாழாகிறான்.
Bhagavad Gita 2.64 View commentary »
ஆனால் மனதைக் கட்டுப்படுத்தி, பற்றுதல் மற்றும் வெறுப்பு இல்லாதவர், புலன்களின் பொருட்களைப் பயன்படுத்தும்போது கூட, கடவுளின் அருளைப் பெறுகிறார்.
Bhagavad Gita 2.65 View commentary »
தெய்வீக அருளால் அனைத்து துக்கங்களும் முடிவடையும் அமைதி வருகிறது, அமைதியான மனதுடைய ஒருவரின் புத்தி விரைவில் கடவுளிடம் உறுதியாக நிலைநிறுத்தப்படுகிறது.
Bhagavad Gita 2.66 View commentary »
ஆனால் மனதையும் புலன்களையும் கட்டுப்படுத்தாத ஒழுக்கமற்ற ஒருவரால் உறுதியான புத்தியோ அல்லது நிலையான சிந்தனையோ கடவுள் மீது இருக்க முடியாது. கடவுளோடு மனதை ஒருக்காலும் இணைக்காதவனுக்கு அமைதி இல்லை; அமைதி இல்லாதவர் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்?
Bhagavad Gita 2.67 View commentary »
பலத்த காற்று படகை அதன் பட்டயப் பாதையில் இருந்து தண்ணீரில் அடித்துச் செல்வது போல, மனம் ஒருமுகப்படுத்தும் புலன்களில் ஏதாவது ஒரு புலனை பற்றி தொடர்ந்து சிந்திப்பது கூட புத்தியை வழிதவறச் செய்துவிடும். க1டோ2ப1நிஷத3ம் கூறுகிறது,
Bhagavad Gita 2.68 View commentary »
எனவே, புலன்களை அவற்றின் பொருட்களிலிருந்து கட்டுப்படுத்தியவன், ஓ வலிமைமிக்க கைகளைக் கொண்ட அர்ஜுனனே, ஆழ்நிலை அறிவில் உறுதியாக நிலைபெற்றுள்ளான்.
Bhagavad Gita 2.69 View commentary »
எல்லா உயிரினங்களும் பகல் என்று கருதுவது ஞானிகளுக்கு அறியாமையின் இரவாகும், மேலும் அனைத்து உயிரினங்களும் இரவாகக் காணும் பகல் என்பது உள்முக ஞானிக்கு பகலாகும்.
Bhagavad Gita 2.70 View commentary »
நதிகளில் இருந்து வரும் நீரின் இடைவிடாத நீரோட்டத்தால் கடல் கலங்காமல் இருப்பது போல, தன்னைச் சுற்றி விரும்பத்தக்க பொருள்கள் இருந்தாலும் ஆசைகளைத் திருப்திப்படுத்த முயற்சி செய்யாமல் அவைகளால் பாதிக்கப்படாமல் இருக்கும் முனிவர் அமைதியை அடைகிறார்.
Bhagavad Gita 2.71 View commentary »
ஒருவன் தன் பொருள் ஆசைகள் அனைத்தையும் துறந்து, புலன் இன்பத்திற்கான ஏக்கமும், உரிமை உணர்வும், அகங்காரமும் இல்லாதவனாக இருந்தால், அவன் பூரண அமைதியை அடைய முடியும்.
Bhagavad Gita 2.72 View commentary »
ஓ பார்த்தா, ஒரு ஞானம் பெற்ற ஆத்மாவின் நிலையை அடைந்து பிறகு, ஒருவன் மீண்டும் ஒருபோதும் ஏமாற்றப்படுவதில்லை. மரண நேரத்திலும் இந்த உணர்வில் நிலைநிறுத்தப்பட்டு, ஒருவர் பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியில் இருந்து விடுபட்டு, கடவுளின் உன்னதமான இருப்பிடத்தை அடைகிறார்.