த1த1: ஶங்கா2ஶ்ச1 பே4ர்யஶ்ச1 ப1ணவானக1கோ3முகா2: |
ஸஹஸைவாப்4யஹன்யன்த1 ஸ ஷப்3த3ஸ்து1முலோப4வத்1 ||13||
ததஹ—--அதன் பிறகு; ஶங்கஹ—--ஶங்குகள்; ச--—மற்றும்; பேர்யஹ---—ஊதுகுழல்களின் ; ச--—மற்றும்; பணவ-ஆனக—--பறைகள், எக்காளங்கள்; கோ-முகாஹா—--ஊதுகொம்புகள்; ஸஹஸா----திடீரென்று; ஏவ—--உண்மையில்; அப்யஹன்யன்த—--முழக்கம்; ஸஹ----அந்த; ஶப்தஹ—--ஒலி; துமமுலஹ—--திணரடிக்கிறவாறு; அபவத்---இருந்தது.
Translation
BG 1.13: அதன்பிறகு ஶங்குகள், பறைகள், எக்காளங்கள், ஊதுகொம்புகள், மற்றும் ஊது குழல்களின் ஒருங்கிணைத்த முழக்கம் பயங்கரமாக இருந்தது.
Commentary
பீஷ்மரின் போருக்கான பெரும் ஆவலைக் கண்டு கௌரவப் படைகளும் ஆவலுடன் ஆரவாரமான ஒலியை எழுப்பத் தொடங்கினர். பணவம் என்றால் முரசு, ஆனக என்றால் டமாரம், கோ-முக் என்றால் ஊதுகொம்புகள். இவ்வகையான அனைத்து இசைக்கருவிகளின் ஒருங்கிணைக்கப்பட்ட ஒலிகள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.