அதை2த1த3ப்1யஶக்1தோ1உஸி க1ர்து1ம் மத்3யோக3மாஶ்ரித1: |
ஸர்வக1ர்மப2லத்1யாக3ம் த1த1: கு1ரு யதா1த்1மவான் ||11||
அத—--என்றால; ஏதத்--—இது; அபி—-கூட; அஶக்தஹ--—முடியவில்லை; அஸி--—உன்னால்; கர்தும்--—செயல்களை செய்ய; மத்-யோகம்--—என்னிடம் பக்தியுடன்; ஆஶ்ரிதஹ--—தஞ்சம் அடைந்து; ஸர்-வகர்ம—--அனைத்து செயல்களின்; ஃபல-தியாகம்--—பலன்களைத் துறந்து; ததஹ--—பின்னர்; குரு-—செய்; யத-ஆத்ம-வான்--—தன்னிடத்தில் நிலைபெற முயற்சி செய்
Translation
BG 12.11: பக்தியுடன் உன்னால் எனக்காக உழைக்க முடியவில்லை என்றால், உன் செயல்களின் பலன்களைத் துறந்து சுயத்தில் நிலைபெற முயற்சி செய்.
Commentary
12.8 வசனத்தில் தொடங்கி, ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனின் நலனுக்காக மூன்று வழிகளைக் கொடுத்தார். மூன்றாவதாக, அர்ஜுனனிடம் வேலை செய்யும்படி கேட்டார். இருப்பினும், அதற்கும் ஒரு தூய்மையான மற்றும் உறுதியான புத்தி தேவை. கடவுளுடனான உறவைப் பற்றி இன்னும் உறுதியாக நம்பாதவர்கள் மற்றும் கடவுளை உணர்ந்துகொள்வதை தங்கள் வாழ்க்கையின் இலக்காகக் கொள்ளாதவர்களால், அவருடைய மகிழ்ச்சிக்காக வேலை செய்ய இயலாது. எனவே, ஸ்ரீ கிருஷ்ணர் இப்போது நலனுக்கான நான்காவது மாற்றீட்டைக் கொடுக்கிறார். அவர் கூறுகிறார், ‘அர்ஜுனா நீ முன்பு மாதிரியே உன்னுடைய வேலைகளை செய்து கொண்டு இரு, ஆனால் செயல்களின் பலன்களில் இருந்து விலகி இரு’. இத்தகைய பற்றின்மை நம் மனதை அறியாமை (தமஸ்) மற்றும் ஆர்வம் (ரஜஸ்) ஆகியவற்றிலிருந்து தூய்மையாக்கி, அதை நன்மையின் (ஸத்வ) நிலைக்கு உயர்த்தும். இவ்வாறாக, நாம் செய்யும் முயற்சியின் பலனைத் துறப்பது, நம் மனதில் இருந்து உலகியல் தன்மையை அகற்றி, புத்தியை வலுப்படுத்தும். பின்னர், புனிதப்படுத்தப்பட்ட புத்தி மிக எளிதாக ஆழ்நிலை அறிவைப் புரிந்து கொள்ள முடியும் மற்றும் பயிற்சியின் உயர் நிலைகளுக்கு செல்ல முடியும்.