Bhagavad Gita: Chapter 12, Verse 8

மய்யேவ மன ஆத4த்1ஸ்வ மயி பு3த்3தி4ம் நிவேஶய |

நிவஸிஷ்யஸி மய்யேவ அத1 ஊர்த்4வம் ந ஸந்ஶய: ||8||

மயி-—என் மீது; ஏவ--—ப்ரத்யேகமாக; மனஹ—--மனதை; ஆதத்ஸ்வ--—நிலை நிறுத்தி; மயி--—என்னிடம்; புத்திம்--—புத்தியை; நிவேஶய--— ஒப்படைத்து விடு; நிவஸிஷ்யஸி--—என்னில் நிலைத்திருப்பாய்; மயி--—என்னில்; ஏவ--—மட்டுமே; அதஹ ஊர்த்வம்--—அதன்பின்; ந--—இல்லை; ஸந்ஶயஹ--—சந்தேகம்

Translation

BG 12.8: உன் மனதை என்னிடமே நிலைநிறுத்தி உன்னுடைய புத்தியை என்னிடம் ஒப்படைத்து விடு. இவ்வாறு நீ எப்போதும் என்னில் நிலைத்திருப்பாய்.

Commentary

தனிப்பட்ட வடிவத்தை வழிபடுவது சிறந்தது என்பதை விளக்கிய ஸ்ரீ கிருஷ்ணர் இப்போது அவரை எப்படி வழிபட வேண்டும் என்பதை விளக்கத் தொடங்குகிறார். அவர் அர்ஜுனனிடம் மனதை கடவுளின் மீது நிலை நிறுத்துவது மற்றும் புத்தியை அவரிடம் ஒப்படைப்பது ஆகிய இரண்டு விஷயங்களை செய்யுமாறு கேட்கிறார் ஆசைகள், ஈர்ப்புகள் மற்றும் வெறுப்புகளை உருவாக்குவதே மனதின் செயல்பாடு. புத்தியின் செயல்பாடு சிந்திப்பது, பகுப்பாய்வு செய்வது மற்றும் வேறுபடுத்துவது.

மனதின் முக்கியத்துவம் வேத சாஸ்திரங்களில் திரும்பத் திரும்பக் கூறப்பட்டுள்ளது:

சே11ஹ க1ல்வஸ்ய ப3ந்தா4ய முக்11யே சா1த்1மனோ மத1ம்

கு3ணேஷு ஸக்11ம் ப3ந்தா4ய ர11ம் வா பூம்ஸி முக்11யே

(பா43வத1ம் 3.25.15)

‘மாயையால் கட்டுண்டு இருப்பதும் அதிலிருந்து விடுதலையும் மனத்தால் தீர்மானிக்கப்படுகிறது. உலகத்துடன் இணைந்திருந்தால், ஒருவன் அடிமைத்தனத்தில் இருக்கிறான், மேலும் மனம் உலகத்திலிருந்து விலகியிருந்தால், ஒருவன் விடுதலை பெறுகிறான்.’

மன ஏவ மனுஷ்யாணாம் கா1ரணம் ப3ந்4த மோக்ஷயோஹோ

(பஞ்ச13ஶி)

‘பந்தமும் விடுதலையும் மன நிலையால் தீர்மானிக்கப்படுகிறது.’ வெறும் இயற்பியல் பக்தி மட்டும் போதாது; கடவுளில் மனதை ஈடுபடுத்த வேண்டும். காரணம், மனதின் ஈடுபாடு இல்லாமல், உணர்ச்சியற்ற செயல்களுக்கு எந்த மதிப்பும் இல்லை. உதாரணமாக, நாம் ஒரு பிரசங்கத்தை நம் காதுகளால் கேட்கிறோம், ஆனால் மனம் அலைந்தால், என்ன சொல்லப்பட்டது என்று நமக்கு தெரியாது. அந்த வார்த்தைகள் காதில் விழுந்தாலும் அது பதிவு செய்யப்படாது. இது மனதை ஈடுபடுத்தாமல் புலன்களின் வேலை பிரயோஜனம் அற்றது என்பதை காட்டுகிறது. மறுபுறம், மனம் என்பது ஒரு கருவியாகும், எல்லா புலன்களும் அதனுள் இருக்கும் நுட்பமான வடிவத்தில் வசிக்கின்றன. எனவே, உண்மையான புலன் செயல்பாடு இல்லாவிட்டாலும், மனம் பார்வை, வாசனை, சுவை, தொடுதல் மற்றும் ஒலி ஆகியவற்றின் உணர்வை அனுபவிக்கிறது. உதாரணமாக, இரவில் நாம் உறங்கும் போது நமது புலன்கள் செயலற்ற நிலையில் இருக்கும். இன்னும் கனவு காணும் போது, ​​நம் மனம் அனைத்து புலன்களின் பொருட்களையும் அனுபவிக்கிறது. மொத்த இயல் உணர்வு இல்லாவிட்டாலும் அனைத்து உணர்வுகளையும் அனுபவிக்கும் திறன் மனதிற்கு உண்டு என்பதை இது நிரூபிக்கிறது. எனவே கடவுள் உங்களது செயல்களை கவனிக்கும்போது உடல் செயல்பாடுகளுக்கு அல்லாமல் மன வேலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்.

மனதிற்கு அப்பாற்பட்டது புத்தி. நமது புத்தியை அவரிடம் ஒப்படைத்தால் மட்டுமே நாம் மனதை இறைவனிடம் நிலைநிறுத்த முடியும். பொருள் சார்ந்த விஷயங்களிலும், நமது அறிவுத்திறனுக்கு அப்பாற்பட்ட சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்போது, ​​உயர்ந்த அறிவுத்திறன் கொண்ட ஒருவரிடமிருந்து வழிகாட்டுதலைப் பெறுகிறோம். உதாரணமாக, நாம் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது ஒரு மருத்துவரை சந்திக்கிறோம். மருத்துவ அறிவியலைப் பற்றிய அறிவு இல்லாததால், தகுதியான மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றுகிறோம். மருத்துவர் நமது அறிகுறிகளைச் சரிபார்த்து, மருத்துவ அறிக்கைகளைப் பார்த்து, நோயறிதலைச் செய்து, பின்னர் மருந்துகளை பரிந்துரைக்கிறார். நாம் புத்தியை ஒப்படைத்து, மருத்துவரின் பரிந்துரைப்படி மருந்துகளை எடுத்துக்கொள்கிறோம். அதேபோல், நாம் வழக்குகளில் ஈடுபட்டால், நம் வழக்கறிஞரின் உதவியைப் பெறுகிறோம். எதிர் வழக்கறிஞரின் விசாரணையை எவ்வாறு கையாள்வது என்பதை வழக்கறிஞர் அறிவுறுத்துகிறார். நமக்குச் சட்டம் பற்றிய அறிவு இல்லாததால், நம் அறிவுத்திறனை ஒப்படைத்துவிட்டு, வழக்கறிஞர் சொல்வதை அப்படியே செய்கிறோம்

அதேபோல், தற்போது நமது புத்தி பல குறைபாடுகளுக்கு உட்பட்டுள்ளது. பிருந்தாவனத்திலிருந்து மதுராவிற்கு ஸ்ரீ கிருஷ்ணரைப் அழைத்துவரச் சென்ற அக்ரூரர், இந்த புத்தியின் குறைபாடுகளை பாகவதத்தில் (10.40.25) விவரித்தார்: அனித்1யாநாத்1ம து3ஹ்கே2ஷு விப1ர்யய மதி1ர்ஹ்யஹம் அக்ரூரர் கூறினார்: 'எங்கள் அறிவு தவறான அறிவால் கட்டப்பட்டுள்ளது. நாம் நித்திய ஆத்மாவாக இருந்தாலும், நாம் நம்மை அழியக்கூடிய உடல் என்று நினைக்கிறோம். உலகில் உள்ள அனைத்து பொருட்களும் அழியக்கூடியவை என்றாலும், அவை எப்போதும் நம்முடன் இருக்கும் என்று நாம் நினைக்கிறோம், எனவே, நாம் அவற்றை இரவும் பகலும் மும்முரமாக சேகரிக்கிறோம். மேலும் பொருள் இன்பத்தில் நாட்டம் நீண்ட காலத்திற்கு துன்பத்தை மட்டுமே விளைவித்தாலும், மகிழ்ச்சியைக் காண்போம் என்று .அவற்றை இன்னும் நம்பிக்கையுடன் துரத்துகிறோம்.’

பொருள் மாயையின் கீழ் அறிவு எதிரிடையாக மாறுதல் (விப1ர்யய)) என்று அழைக்கப்படுகின்றன. எண்ணிலடங்கா கடந்தகால வாழ்நாளில் இருந்து இதுபோன்ற தவறான சிந்தனைக்கு நமது புத்தி நிலைப்படுத்தப்பட்டிருப்பதால், நமது பிரச்சனை மேலும் மோசமடைகிறது. நமது புத்தியின் வழிகாட்டுதலின்படி நம் வாழ்க்கையை வாழ்ந்தால், தெய்வீக ஆன்மீகத்தை நோக்கிச் செல்வதில் நாம் நிச்சயமாக அதிக முன்னேற்றம் அடைய மாட்டோம். எனவே, கடவுளிடம் மனதை இணைத்து ஆன்மீக வெற்றியை அடைய விரும்பினால், நாம் நமது புத்தியை அவரிடம் ஒப்படைத்து, அவருடைய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். புத்தியை ஒப்படைப்பது என்பது வேதம் மற்றும் நேர்மையான குருவின் மூலம் கடவுளிடமிருந்து பெறப்பட்ட அறிவின்படி சிந்திக்க வேண்டும். சரணடைந்த புத்தியின் சிறப்பியல்புகள் வசனம் 18.62 இல் விவரிக்கப்பட்டுள்ளன.