யே து1 த4ர்ம்யாம்ருத1மித3ம் யதோ2க்1த1ம் ப1ர்யுபா1ஸதே1 |
ஶ்ரத்3த3தா4னா மத்1ப1ரமா ப4க்1தா1ஸ்தே1தீ1வ மே ப்1ரியா: ||20||
யே--—யார்; து—--உண்மையில்; தர்மம்--—விவேகம்; அம்ருதம்--—அமிர்தம்; இதம்--—இது; யதா--—எவ்வாறு; உக்தம்--—அறிவிக்கப்பட்டதோ; பர்யுபாஸதே--—பிரத்தியேகமான பக்தி; ஶ்ரத்ததானாஹா--—நம்பிக்கையுடன்; மத்-பரமாஹா--—உயர்ந்த இலக்காக என்னை கருதும்; பக்தாஹா—--பக்தர்கள்; தே--—அவர்கள்; அதீவ—--அதிகமாக; மே--—எனக்கு; ப்ரியாஹா--—மிகவும் பிரியமானவர்கள்
Translation
BG 12.20: இங்கு அறிவிக்கப்பட்ட இந்த ஞான அமிர்தத்தை மதித்து, என்மீது நம்பிக்கை வைத்து, என்னையே உயர்ந்த குறிக்கோளாகக் கொண்டு அர்ப்பணிப்புடனும் நோக்கத்துடனும் இருப்பவர்கள், எனக்கு மிகவும் பிரியமானவர்கள்.
Commentary
ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனின் கேள்விக்கான பதிலைச் சுருக்கி அத்தியாயத்தை முடிக்கிறார். அத்தியாயத்தின் தொடக்கத்தில், அர்ஜுனன் பக்தி யோகத்தின் மூலம் தனது தனிப்பட்ட வடிவத்திற்கு அர்ப்பணித்தவர்கள் மற்றும் ஞான யோகம் மூலம் உருவமற்ற பிரம்மத்தை வழிபடுபவர்களில் ஸ்ரீ கிருஷ்ணர் யாரை உயர்ந்தவர் எனக் கருதுகிறார் என்று கேட்டிருந்தார். ஸ்ரீ கிருஷ்ணர் இரண்டாவது வசனத்தில்அவர் தனது தனிப்பட்ட வடிவத்தில் உறுதியுடன் பக்தியுடன் ஈடுபடும் உயர்ந்த யோகிகளாக அவர்களைக் கருதுகிறார் என்று பதிலளித்தார், பின்னர் அவர் பக்தி என்ற தலைப்பில் தொடர்ந்து பக்தியை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளையும் பின்னர் தனது பக்தர்களின் குணங்களையும் விளக்கினார். ஆன்மிகத்தின் உன்னதமான பாதை பக்தி என்று அவர் இப்போது உறுதியுடன் முடிக்கிறார். ஒப்புயர்வற்ற கடவுளையே குறிக்கோளாகக் கொண்டு, முந்திய வசனங்களில் கூறப்பட்டுள்ள நற்குணங்களால் மிகுந்த நம்பிக்கையுடன் பக்தியை வளர்த்துக் கொள்கிற பக்தர்கள் கடவுளுக்கு மிகவும் பிரியமானவர்கள.