கா1மக்1ரோத4வியுக்1தா1னாம் யதீ1னாம் யத1சே1த1ஸாம் |
அபி4தோ1 ப்3ரஹ்மனிர்வாணம் வர்த1தே1 விதி3தா1த்1மனாம் ||26||
காம--—ஆசைகள்; க்ரோத—--கோபம்; வியுக்தாநாம்—--முக்தி பெற்றவர்களின்; யதீனாம்—--துறவிகளின்; யத-சேதஸாம்--—தங்கள் மனதை அடக்கிய சுயத்தை-உணர்ந்த நபர்கள்; அபிதஹ--—சுயத்தை; பிரஹ்ம—ஆன்மிக; நிர்வாணம்—--பொருள் இருப்பிலிருந்து விடுதலை; வர்ததே--—இருக்கிறது; விதித-ஆத்மனாம்--—தன்னை உணர்ந்தவர்கள்
Translation
BG 5.26: இடைவிடாத முயற்சியின் மூலம் கோபம் மற்றும் காமத்திலிருந்து வெளியேறி, தங்கள் மனதை அடக்கி, சுய-உணர்வு பெற்ற ஸன்யாஸிகள் இம்மையிலும் மறுமையிலும் ஜட இருப்பிலிருந்து விடுபடுகிறார்கள்.
Commentary
முன்பு வசனம் 5.2 இல் விளக்கியது போல், கர்ம யோகம் (செயல் யோகம்) பாதுகாப்பான பாதை. அதனால்தான் இதை ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம் கடுமையாகப் பரிந்துரைத்தார். இருப்பினும், உலகத்திலிருந்து உண்மையிலேயே பற்றற்ற ஒருவருக்கு, கர்ம ஸன்யாஸம் (செயல்களைத் துறத்தல்) பொருத்தமானது. உலகக் கடமைகளை நோக்கி நேரத்தையும் ஆற்றலையும் திசைதிருப்பாமல் இருப்பதும், ஆன்மீகப் பயிற்சிக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்வதும் நன்மை பயக்கும் பாதுகாப்பான பாதை. வரலாற்றில் பல சாதனை படைத்த ஸன்யாஸிகள் இருந்துள்ளனர். அத்தகைய உண்மையான கர்ம ஸன்யாஸிகள் விரைவாக முன்னேறி எல்லா இடங்களிலும் அமைதியை அனுபவிப்பதாக ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார். ஆசை மற்றும் கோபத்தின் தூண்டுதல்களை நீக்கி, தங்கள் மனதை அடக்குவதன் மூலம், அவர்கள் இம்மையிலும் மறுமையிலும் பூரண அமைதியை அடைகிறார்கள்.
நம் வாழ்வில் அமைதி இல்லாததற்கு வெளிப்புறச் சூழ்நிலைகளே காரணம் என்ற தவறான எண்ணத்தை நாம் அடிக்கடி அடைகிறோம், மேலும் அந்த சூழ்நிலை மன அமைதிக்கு உகந்ததாக நாளை மாறும் என்று எதிர்பார்க்கிறோம். இருப்பினும், அமைதி என்பது வெளிப்புற சூழ்நிலைகளைச் சார்ந்தது அல்ல; இது புனிதப்படுத்தப்பட்ட புலன்கள், மனம் மற்றும் புத்தியின் விளைபொருளாகும். ஸன்யாஸீகள், தங்கள் மனதையும் எண்ணங்களையும் உள்நோக்கித் திருப்பியதால், வெளிப்புறச் சூழ்நிலைகளுக்கு அப்பாற்பட்ட அமைதியின் கடலைக் காண்கிறார்கள். பின்னர், உள் இயந்திர ஒழுங்கு முறையினால், அவர்கள் எல்லா இடங்களிலும் ஒரே அமைதியை அனுபவித்து, இந்த உலகத்திலேயே விடுவிக்கப்படுகிறார்கள்.