ஸ்ப1ர்ஶான்க்1ருத்1வா ப3ஹிர்பா3ஹ்யான்ஶ்ச1க்ஷுஶ்சை1வான்த1ரே ப்4ருவோ: |
ப்1ராணாபா1னௌ ஸமௌ க்1ருத்வா நாஸாப்4யன்த1ரசா1ரிணௌ ||27||
யதே1ன்த்3ரியமனோபு3த்3தி4ர்முனிர்மோக்ஷப1ராயண: |
விக3தே1ச்1சா2ப4யக்1ரோதோ4 ய: ஸதா3 முக்1த1 ஏவ ஸ: ||28||
ஸ்பர்ஶான்---தொடர்புகள் (புலன்கள் மூலம்); க்ருத்வா—--வைத்து; பஹிஹி—-வெளியே; பாஹ்யான்—--வெளிப்புறம்; சக்ஷுஹு--—கண்கள்; ச—--மற்றும்; ஏவ--—நிச்சயமாக; அந்தரே—--இடையில்; ப்ருவோஹோ---- புருவங்களின்; ப்ராண-அபானௌ----வெளிச்செல்லும் மற்றும் உள்வரும் சுவாசங்கள்; ஸமௌ—--சமமான; க்ருத்வா—--வைத்தல்; நாஸ-அப்யந்தர—---நாசிக்குள்; சாரிணௌ—--அசையும்; யத--—கட்டுப்படுத்தப்பட்ட; இந்த்ரிய—--புலன்கள்; மனஹ—--மனம்; புத்திஹி----புத்தி; முனிஹி----முனிவர்; மோக்ஷ---—விடுதலை; பராயணஹ----அர்ப்பணிக்கப்பட்ட; விகத--—இல்லாமல்; இச்சா—--ஆசைகள்; பய—--பயம்; க்ரோதஹ—--கோபம்; யஹ--—யார்; ஸதா—--எப்போதும்; முக்தஹ—--விடுதலை; ஏவ--—நிச்சயமாக; ஸஹ----அந்த நபர்
Translation
BG 5.27-28: புற இன்பம் பற்றிய எண்ணங்கள் அனைத்தையும் அடைத்து, புருவங்களுக்கு இடையே உள்ள இடைவெளியில் பார்வையை நிலைநிறுத்தி, மூக்கின் உள்வரும் மற்றும் வெளியேறும் மூச்சின் ஓட்டத்தை சமப்படுத்தி, புலன்கள், மனம் மற்றும் புத்தி ஆகியவற்றைக் கட்டுப்படுத்தி, ஆசை மற்றும் பயத்திலிருந்து விடுபடும் ஞானி சுதந்திரமாக வாழ்கிறார்.
Commentary
பெரும்பாலும் துறப்பவர்கள் தங்கள் ஸந்நியாஸப் பயிற்சியுடன் அஷ்டாங்க யோகம் அல்லது ஹட யோகம் ஆகியவற்றில் அதிக நாட்டம் கொண்டுள்ளனர். அவர்களின் தீவிரமான பற்றின்மை அவர்களை கடவுளின் கூட்டாளிகள், பெயர்கள், வடிவங்கள், பொழுதுபோக்குகள், நற்பண்புகள், மற்றும் இருப்பிடங்கள் ஆகியவற்றின் மீது தியானம் தேவைப்படுகிற பக்தியின் பாதையில் ஆர்வமற்றவர்களாக ஆக்குகிறது,. இங்கே, ஸ்ரீ கிருஷ்ணர் அந்த பாதையை விவரிக்கிறார்,
அத்தகைய துறவிகள் தங்கள் பார்வை மற்றும் மூச்சைக் கட்டுப்படுத்துவதன் மூலம் புலன்களின் எண்ணங்களை மூடிவிடுகிறார்கள் என்று அவர் கூறுகிறார். அவர்கள் தங்கள் புருவங்களுக்கு இடையே தங்கள் பார்வையை செலுத்துகிறார்கள். ஒருவரின் கண்கள் முழுவதுமாக மூடியிருந்தால், தூக்கம் ஒருவரை முந்தலாம்; மேலும் அவை அகலமாக திறந்திருந்தால், அவை சுற்றியுள்ள பொருட்களால் திசைதிருப்பப்படலாம். இந்த இரண்டு குறைபாடுகளையும் தவிர்ப்பதற்காக, துறவிகள் தங்கள்பாதி திறந்த கண்களை, புருவங்களுக்கு இடை ஒரு முகப்படுத்துகிறார்கள். அவர்கள் தங்களது ப்ராணம் (வெளிச்செல்லும் மூச்சு) அபானம் (உள்வரும் மூச்சு) மூச்சு இரண்டையும் யோக மயக்கத்தில் இடை நிறுத்தப்படும் வரை ஒத்திசைக்கிறார்கள். இந்த யோக செயல்முறை புலன்கள், மனம் மற்றும் புத்தியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. அத்தகைய நபர்கள் ஜட ஆற்றலிலிருந்து விடுதலையை மட்டுமே தங்கள் குறிக்கோளாகக் கொண்டுள்ளனர்.
இத்தகைய துறவு நடைமுறைகள் ஆத்ம ஞானம் (தன்னைப் பற்றிய அறிவு), ப்ரஹ்ம ஞானம் (கடவுளைப் பற்றிய அறிவு) ஆகியவற்றிற்கு வழிவகுக்கும். எனவே, அடுத்த வசனத்தில் கூறப்பட்டுள்ளபடி, துறவு பாதையும் கடவுள் பக்தியின் மூலம் முழுமையடைய வேண்டும்.