ஞேய: ஸ நித்1யஸன்யாஸீ யோ ந த்3வேஷ்டி1 ந கா1ங்க்ஷதி1 |
நிர்த்3வந்த்3வோ ஹி மஹாபா3ஹோ ஸுக2ம் ப3ந்தா4த்1ப்1ரமுச்1யதே1 ||3||
ஞேயஹ---—கருதப்பட வேண்டும்; ஸஹ----அந்த நபர்; நித்ய—---எப்போதும்; ஸன்யாஸீ—---துதுறவறத்தைப் பயிற்சி செய்தல்; யஹ---—யார்; ந—--ஒருபோதும் இல்லை; த்வேஷ்டி---—வெறுப்பு; ந—--இல்லை; காங்க்ஷதி--—ஆசை; நிர்த்வந்த்வஹ—--எல்லா இருமைகளிலிருந்தும் விடுபட்டவர்; ஹி--—நிச்சயமாக; மஹா-பாஹோ-----வலிமையான கைகளை கொண்டவர்; ஸுகம்—---எளிதாக; பந்தாத்---—பந்தத்திலிருந்து; ப்ரமுச்யதே---—விடுவிக்கப்படுகிறார் ; ந—காங்க்ஷதி----ஆசையின்றி; ந—-த்வேஷ்டி----வெறுப்பின்றி
Translation
BG 5.3: யாரையும் விரும்பாத, வெறுக்காத கர்ம யோகிகளை நித்திய ஸன்யாஸீகளாகக் கருத வேண்டும். ஓ வலிமையான அர்ஜுனா, எல்லாவிதமான பிணக்குகளிலிருந்தும் விடுபட்டதால், அவர்கள் மாயையின் அடிமைத்தனத்திலிருந்து எளிதாக விடுதலை பெறுகிறார்கள்.
Commentary
கர்ம யோகிகள் தங்கள் உலகக் கடமைகளைத் தொடர்ந்து செய்கிறார்கள், அதே நேரத்தில் உள் கண்ணோட்டத்தில் பற்றின்மையைக் கடைப்பிடிக்கிறார்கள். எனவே, அவர்கள் நேர்மறை மற்றும் எதிர்மறையான சூழ்நிலைகளை கடவுளின் கருணையாக சமமாக ஏற்றுக்கொள்கிறார்கள். நமது படிப்படியான மேம்பாட்டிற்காக இன்பம் மற்றும் துக்கம் இரண்டையும் அனுபவிக்கும் வகையில் கடவுள் இந்த படைப்பை மிகவும் தனித்துவமான முறையில் படைத்துள்ளார். நாம் ஒரு சீரான வாழ்க்கை வாழ்ந்து, நம் வழியில் வரும் அனைத்து சவால்களையும் தாங்கிக்கொண்டு, மகிழ்ச்சியுடன் நமது கடமைகளைச் செய்யும்போது, உலகம் நம்மை ஆன்மீக முன்னேற்றத்தை நோக்கி படிப்படியாக வழிநடத்துகிறது.
இந்த கருத்தை விளக்கும் ஒரு இனிமையான கதை உள்ளது:
ஒரு காலத்தில் ஒரு மரத்துண்டு இருந்தது.
அது ஒரு சிற்பியிடம் சென்று, ‘தயவுசெய்து என்னை அழகாக்க முடியுமா?’ என்று கேட்டது,
சிற்பி, ‘நான் அதைச் செய்யத் தயாராக இருக்கிறேன். ஆனால் நீ அதற்குத் தயாரா?’
மரம் பதிலளித்தது, ‘ஆம், நானும் தயாராக இருக்கிறேன்.’
சிற்பி தனது கருவிகளை எடுத்து சுத்தியாலும் உளியாலும் தனது வேலையைத் தொடங்கினார்.
மரம் கூவி, ‘நீங்கள் என்ன செய்கிறீர்கள்? தயவு செய்து நிறுத்துங்கள்! இது மிகவும் வேதனையானது.'
சிற்பி புத்திசாலித்தனமாக பதிலளித்தார், 'நீ அழகாக மாற விரும்பினால், நீ வலியை தாங்க வேண்டும்.
ஆனால், தயவு செய்து மென்மையாகவும், அக்கறையுடனும் இருங்கள்.’ என்று மரம் கூறியது
சிற்பி மீண்டும் தனது வேலையைத் தொடர்ந்தார்.
மரம் கூவிக்கொண்டே இருந்தது, ‘இன்றைக்கு போதும்; என்னால் மேலும் தாங்க முடியாது. தயவு செய்து நாளை மீண்டும் தொடரவும்.’
சிற்பி தனது பணியைத் தொடர்ந்தார், சில நாட்களில், அந்த மரம் கோயிலில் வீற்றிருக்கும் வணங்குவதற்குரிய அழகான தெய்வமாக மாற்றப்பட்டது.
அதுபோலவே, உலகில் முடிவில்லாத பற்றுதலின் காரணமாக நம் இதயங்கள் கடினமானதாகவும் முடிக்கப்படாததாகவும் இருக்கின்றன. நாம் நம் மனதளவில் அழகாக மாற விரும்பினால், வலியைப் பொறுத்துக்கொள்ளவும், நம்மைத் தூய்மைப்படுத்தும் வேலையை உலகம் செய்ய அனுமதிக்கவும் நாம் தயாராக இருக்க வேண்டும். எனவே கர்ம யோகிகள் பக்தியுடன் வேலை செய்கிறார்கள், முடிவுகளில் சமநிலையுடன் இருக்கிறார்கள், மேலும் தங்கள் மனதை கடவுளிடம் இணைக்க பயிற்சி செய்கிறார்கள்.