Bhagavad Gita: Chapter 5, Verse 12

யுக்1த: க1ர்மப2லம் த்1யக்1த்1வா ஶான்தி1மாப்1னோதி நைஷ்டி2கீ1ம் |

அயுக்11: கா1மகா1ரேண ப2லே ஸக்1தோ1 நிப3த்4யதே1 ||12||

யுக்தஹ--—கடவுளுடன் உணர்வில் ஐக்கியமானவர்; கர்ம- ஃபலம்—--அனைத்து செயல்களின் முடிவுகள்; த்யக்த்வா—--விடுதல்; ஶாந்திம்—--அமைதி; ஆப்னோதி--அடைகிறார்கள்; நைஷ்டிகீம்—--என்றென்றும்; அயுக்தஹ—--உணர்வில் கடவுளோடு ஐக்கியமாகாதவர்; காம-காரேண—--ஆசைகளால் தூண்டப்பட்ட;  ஃபலே--—விளைவில்; ஸக்தஹ—--இணைக்கப்பட்டு; நிபத்யதே—-- சிக்கிக் கொள்கிறார்

Translation

BG 5.12: அனைத்து செயல்களின் பலன்களையும் கடவுளுக்கு வழங்குவதன் மூலம், கர்ம யோகிகள் நிரந்தரமான அமைதியை அடைகிறார்கள். அதேசமயம், தங்கள் ஆசைகளால் தூண்டப்பட்டு, சுயநல நோக்கத்துடன் வேலை செய்பவர்கள் தங்கள் செயல்களின் பலனுடன் இணைந்திருப்பதால் சிக்கிக் கொள்கிறார்கள்.

Commentary

அனைவரும் அதே செயல்களை செய்யும் அதே நேரம், சிலர் பொருள் இருப்புக்குக் கட்டுப்பட்டு, மற்றவர்கள் பொருள் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்படுவது எப்படி சாத்தியம்? ஸ்ரீ கிருஷ்ணர் இந்த வசனத்தில் பதில் தருகிறார். பொருள் வெகுமதிகளால் இணைக்கப்படாத மற்றும் தூண்டப்படாதவர்கள் ஒருபோதும் கர்மத்திற்கு கட்டுப்படுவதில்லை. ஆனால் வெகுமதிகளை ஏங்குபவர்கள் மற்றும் பொருள் இன்பங்களை அனுபவிக்கும் ஆசையில் வெறி கொண்டவர்கள் வேலையின் எதிர்வினைகளில் சிக்கிக் கொள்கிறார்கள்.

யுக்த என்ற சொல்லுக்கு ‘கடவுளுடன் உணர்வுபூர்வமாக ஐக்கியமாவது’ என்று பொருள். 'இதயத்தை தூய்மைப்படுத்துவதைத் தவிர வேறு எந்த வெகுமதியையும் விரும்பாதது' என்றும் இது அர்த்தப்படுத்துகிறது. தங்கள் மனதை புனிதப் படுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயல்களை செய்யும் யுக்த நபர்கள் தங்கள் செயல்களின் பலன்களின் விருப்பத்தை விட்டுவிடுகிறார்கள். எனவே, அவர்கள் விரைவில் தெய்வீக உணர்வையும் நித்திய பேரின்பத்தையும் அடைகிறார்கள்.

மறுபுறம், அயுக்த் என்றால் கடவுளுடன் ஒன்று படாத உள்ளுணர்வு என்று பொருள்'. இது 'ஆன்மாவுக்குப் பயனளிக்காத இவ்வுலக வெகுமதிகளை விரும்புவதையும்' குறிக்கலாம். ஆசைகளால் தூண்டப்பட்ட அத்தகைய நபர்கள், தங்கள் செயல்களின் வெகுமதிகளை ஆசையுடன் விரும்புகிறார்கள். இந்த உணர்வில் செய்யப்படும் வேலையின் எதிர்வினைகள் இந்த அயுக்த் நபர்களை ஸம்ஸாரம் அல்லது வாழ்க்கை மற்றும் இறப்பு சுழற்சியுடன் பிணைக்கிறது.

Watch Swamiji Explain This Verse