கு3ணானேதா1னதீ1த்1ய த்1ரீன்தே3ஹீ தே3ஹஸமுத்3ப4வான் |
ஜன்மம்ருத்2யுஜராது3:கை2ர்விமுக்1தோ1ம்ருத1மஶ்னுதே1 ||20||
குணான்--—ஜட இயற்கையின் மூன்று முறைகள்; ஏதான்--—இவைகளை; அதீத்ய--—கடந்து; த்ரீன்--—மூன்று முறைகளை; தேஹி--—உடலுறந்த; தேஹ--—உடல்; ஸமுத்பவான்--—உற்பத்தி செய்யப்பட்ட; ஜன்ம—--பிறப்பு; மிருத்யு--—இறப்பு; ஜரா--—முதுமை; துஹ்கைஹி—--துன்பம்; விமுக்தஹ----ஆகியவற்றிலிருந்து விடுபட்டு,; அமிர்தம்--—அழியாத தன்மையை; அஶ்னுதே—அடைகிறார்
Translation
BG 14.20: ஒருவர் உடலுடன் தொடர்புடைய ஜட இயற்கையின் மூன்று முறைகளைக் கடந்து, பிறப்பு, இறப்பு, முதுமை மற்றும் துன்பம் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு, அழியாத தன்மையை அடைகிறார்.
Commentary
அசுத்தமான கிணற்றில் உள்ள தண்ணீரை குடித்தால், வயிற்றெரிச்சல் ஏற்படுவது உறுதி. இதேபோல், நாம் மூன்று முறைகளால் உந்தப்படுவோமானால், பொருள் மண்டலத்திற்குள் மீண்டும் மீண்டும் பிறப்பு, நோய், முதுமை மற்றும் இறப்பு ஆகிய. அவற்றின் விளைவுகளை நாம் அனுபவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்த நான்கு விளைவுகளும் பொருள் வாழ்வின் முதன்மையான துன்பங்களாகும். இவற்றைப் பார்த்த புத்தர், உலகமே துன்பம் நிறைந்த இடம் என்பதை முதலில் உணர்ந்து, துன்பத்திலிருந்து விடுபடுவதற்கான வழியைத் தேடினார்.
வேதங்கள் மனிதர்களுக்கான பல நடத்தை விதிகள், சமூக கடமைகள், சடங்குகள் மற்றும் ஒழுங்கு முறைகளை பரிந்துரைக்கின்றன. இந்த பரிந்துரைக்கப்பட்ட கடமைகள் மற்றும் நடத்தை விதிகள் ஒன்றாக கர்ம தர்மம் அல்லது வர்ணாஶ்ரம தர்மம் அல்லது ஶாரிரீக் தர்மம் என்று அழைக்கப்படுகின்றது. அவை நம்மை அறியாமைமுறை--தமோகுணம் மற்றும் உணர்ச்சி முறை--ரஜோ குணத்திலிருந்து நன்மையின் குணத்திற்கு உயர்த்த உதவுகின்றன. இருப்பினும், நன்மையின் குணத்தை அடைவது போதாது; இதுவும் ஒரு வகையான அடிமைத்தனமே, நன்மை முறையை தங்க சங்கிலிகளால் பிணைக்கப் படுவதற்கு சமமாகக் கருதலாம் ஆனால் நமது குறிக்கோள் அதற்கும் அப்பால் உள்ளது அதாவது பொருள் இருப்பு எனும் சிறையில் இருந்து வெளியேறுவது.
நாம் மூன்று குணங்களுக்கு அப்பாற்பட்டால், மாயையின் ஆதிக்கத்தால் பிணைக்கப்படமாட்டோம் என்று ஸ்ரீ கிருஷ்ணர் வெளிப்படுத்துகிறார். இந்த வழியில், ஆன்மா பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியில் இருந்து விடுபட்டு அழியாத நிலையை அடைகிறது. உண்மையில், ஆன்மா எப்போதும் அழியாதது. இருப்பினும், ஜடப்பொருளுடன் சார்ந்த அதன் அடையாளத்தால்பிறப்பு மற்றும் இறப்பு என்ற மாயையை அனுபவிக்கிறது. இந்த மாயையான அனுபவம், அதிலிருந்து விடுதலை தேடும் ஆன்மாவின் நித்திய இயல்புக்கு எதிரானது. எனவே, பொருள் மாயை இயற்கையாகவே நமக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது, மேலும், நாம் அனைவரும் அழியாமையின் சுவையை நாடுகிறோம்.