அர்ஜுன உவாச1 |
கை1ர்லிங்கை3ஸ்த்1ரீன்கு3ணானேதா1னதீ1தோ1 ப4வதி1 ப்1ரபோ4 |
கி1மாசா1ர: க1த2ம் சை1தா1ம்ஸ்த்1ரீன்கு3ணானதி1வர்த1தே1 ||21||
அர்ஜுனஹ உவாச---—அர்ஜுனன் வினவினார்; கைஹி--—எதன் மூலம்; லிங்கைஹி--—அறிகுறிகள்; த்ரீன்--—மூன்று மூன்று குணங்கள்; குணான்—--பொருள் இயற்கையின் முறைகளை; ஏதான்--—இவைகளை; அதீதஹ----—குணங்களைக் கடந்தவர்களின்; பவதி--—ஆகும்; ப்ரபோ—--இறைவன்; கிம்--—என்ன; ஆசாரஹ--- குணாதிசயங்கள்; கதம்---—எப்படி; ச—-மற்றும்; ஏதான்---—இவைகளை; த்ரீன்----மூன்று குணங்கள்; குணான்—பொருள் இயற்கையின் முறைகள்; அதிவர்ததே----கடந்து செல்கிறார்கள்
Translation
BG 14.21: அர்ஜுனன் வினவினார்: இறைவா, மூன்று குணங்களைக் கடந்தவர்களின் குணாதிசயங்கள் என்ன? அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள்? குணங்களின் அடிமைத்தனத்தை அவர்கள் எவ்வாறு கடந்து செல்கிறார்கள்?
Commentary
அர்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணரிடமிருந்து மூன்று குணங்களைக் கடப்பதை பற்றிக் கேட்டார். எனவே, இப்போது அவைகள் தொடர்பாக மூன்று கேள்விகளைக் கேட்கிறார். லிங்கைஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் 'அறிகுறிகள்’ அர்ஜுனனின் முதல் கேள்வி: "மூன்று குணங்களைக் கடந்தவர்களின் குணாதிசயங்கள் என்ன?" ஆசாரம் என்ற சொல்லுக்கு ‘நடத்தை’ என்று பொருள். அர்ஜுனின் இரண்டாவது கேள்வி: ‘அத்தகைய ஆழ்நிலைவாதிகள் எந்த விதத்தில் நடந்து கொள்கிறார்கள்?’ அதிவர்ததே என்ற சொல்லுக்கு 'கடந்து' என்று பொருள். அவர் கேட்கும் மூன்றாவது கேள்வி: ‘ஒருவர் எப்படி மூன்று குணங்களைத் கடந்து செல்கிறார்?’ ஸ்ரீ கிருஷ்ணர் அவருடைய கேள்விகளுக்கு முறையாக பதிலளிக்கிறார்.