ஓம் த1த்1ஸதி3தி1 நிர்தே3ஶோ ப்3ரஹ்மணஸ்த்1ரிவித4: ஸ்ம்ருத1: |
ப்3ராஹ்மணாஸ்தே3ன வேதா3ஶ்ச1 யஞ்ஞாஶ்ச1 விஹிதா1: பு1ரா ||23||
ஓம் தத் ஸத்—-- ஆழ்நிலையின் அம்சங்களைக் குறிக்கும் எழுத்துக்கள்; இதி—--இவ்வாறு; நிர்தேஶஹ--- உண்மையின் அடையாளப் பிரதிநிதி; ப்ரஹ்மணஹ—---உயர்ந்த முழுமையான உண்மை; த்ரி-விதஹ—--மூன்று வகையான; ஸ்ம்ருதஹ--—அறிவிக்கப்பட்டுள்ளது; ப்ராஹ்மணாஹா-—-புரோகிதர்களும்; தேன--—அவர்களிடமிருந்து; வேதாஹா--—வேதம்; ச—மற்றும்; யஞ்ஞாஹா----தியாகம்; ச--—மற்றும்; விஹிதாஹா---வந்தது; புரா--—படைப்பின் தொடக்கத்திலிருந்து.
Translation
BG 17.23: 'ஓம் தத் ஸத்' என்ற வார்த்தைகள் படைப்பின் தொடக்கத்திலிருந்தே ஒப்புயர்வற்ற முழுமையான உண்மையின் அடையாளப் பிரதிநிதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவைகளில் இருந்துபுரோகிதர்களும், வேதங்களும், தியாகங்களும் வந்தன.
Commentary
இந்த அத்தியாயத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் ஜட இயற்கையின் மூன்று முறைகளின்படி, தியாகம் (யஞ்ஞம்), துறவு (த1பம்), தா3னம் (தா3ன்) ஆகிய வகைகளை விளக்கினார். இந்த மூன்று முறைகளில், அறியாமை முறை ஆன்மாவை அறிவின்மை தளர்ச்சி மற்றும் சோம்பேறித் தனத்திற்கு தள்ளுகிறது. பேரார்வத்தின் முறை உயிரை உற்சாகப்படுத்துகிறது மற்றும் எண்ணற்ற ஆசைகளில் பிணைக்கிறது. நன்மையின் முறை அமைதியான மற்றும் ஒளிமயமானது. மற்றும் நற்பண்புகளின் வளர்ச்சியை ஏற்படுத்துகிறது. இருப்பினும், நன்மையின் முறையும் மாயையின் எல்லைக்குள் உள்ளது. நாம் அதனுடன் இணைந்திருக்கக்கூடாது; மாறாக, ஆழ்நிலை தளத்தை அடைவதற்கு நாம் நன்மையின் முறையை ஒரு மிதி கல்லாகப் பயன்படுத்த வேண்டும். இந்த வசனத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் மூன்று குணங்களுக்கு அப்பால் சென்று, முழுமையான சத்தியத்தின் வெவ்வேறு அம்சங்களைக் குறிக்கும் ஓம் தத் ஸத் என்ற வார்த்தைகளைப் பற்றி விவாதிக்கிறார். பின்வரும் வசனங்களில், இந்த மூன்று வார்த்தைகளின் முக்கியத்துவத்தை விளக்குகிறார்.