Bhagavad Gita: Chapter 17, Verse 28

அஶ்ரத்34யா ஹுத1ம் த1த்1த3ம் த11ஸ்த1ப்த1ம் க்1ருத1ம் ச1 யத்1 |

அஸதி3த்1யுச்1யதே1 பா1ர்த2 ந ச21த்1ப்1ரேத்1ய நோ இஹ ||28||

அஶ்ரத்தாய--—நம்பிக்கை இல்லாமல்; ஹுதம்—--தியாகம்; தத்தம்—--தானம்; தபஹ:---தவம்; தப்தம்—--பயிற்சி; கிருதம்—--செய்யப்பட்டது; ச--—மற்றும்; யத்--—எது; அஸத்—--அழியும்; இதி--—இவ்வாறு; உச்யதே--—என அழைக்கப்படுகின்றன; பார்தா—--ப்ரிதாவின் மகன் அர்ஜுன்; ந--—இல்லை; ச--—மற்றும்; தத்--அது;ப்ரேத்யா--—-- மறுமையிலும்; நோ---இல்லவே இல்லை; இஹ----இம்மையிலும்.

Translation

BG 17.28: ப்ருதையின் மகனே, நம்பிக்கையில்லாமல் செய்யும் தியாகம், தானம் அல்லது தவம் எதுவாக இருந்தாலும் அது அஸத் எனப்படும். அவை இம்மையிலும் மறுமையிலும் பயனற்றவை.

Commentary

அனைத்து வேதச் செயல்களும் நம்பிக்கையுடன் செய்யப்பட வேண்டும் என்பதை உறுதியாக நிலைநிறுத்துவதற்காக, அது இல்லாமல் செய்யப்படும் வேதச் செயல்களின் பயனற்ற தன்மையை ஸ்ரீ கிருஷ்ணர் இப்போது வலியுறுத்துகிறார். வேதத்தில் நம்பிக்கையில்லாமல் செயல்படுபவர்களுக்கு இந்த ஜென்மத்தில் நல்ல பலன்கள் கிடைக்காது, ஏனெனில் அவர்களின் செயல்கள் சரியாக செய்யப்படவில்லை என்று அவர் கூறுகிறார். மேலும் அவர்கள் வேத சாஸ்திரங்களின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததால், அடுத்த ஜென்மத்திலும் நல்ல பலன்களைப் பெற மாட்டார்கள். எனவே, ஒருவரின் நம்பிக்கையானது ஒருவரின் மனம் மற்றும் புத்தியின் சொந்த அபிப்பிராயங்களின் அடிப்படையில் இருக்கக்கூடாது. மாறாக, அது வேத சாஸ்திரங்கள் மற்றும் குருவின் பிழையாத அதிகாரத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும். பதினேழாவது அத்தியாயத்தின் சாராம்சம் இதுதான்.