யத்1து ப்1ரத்1த்1யுப1கா1ரார்த2ம் ப2லமுத்3தி3ஶ்ய வா பு1ன: |
தீ3யதே1 ச1 ப1ரிக்1லிஷ்ட1ம் த1த்3தா3னம் ராஜஸம் ஸ்ம்ருத1ம் ||21||
யத்--—எது; து--—ஆனால்; ப்ரதி-உபகார-அர்த்தம்--—திரும்ப கிடைக்கும் என்ற நம்பிக்கை; ஃபலம்--—வெகுமதி; உத்திஶ்ய----எதிர்பார்த்து; வா—--அல்லது; புனஹ--—மீண்டும்; தீயதே---கொடுக்கப்படும்; ச---மற்றும்; பரிக்லிஷ்டம்--—தயக்கத்துடன்; தத்--—அது; தானம்—--கொடை; ராஜாஸம்--—ஆர்வ முறையில்; ஸ்மிருதம்--—என்று கூறப்படுகிறது.
Translation
BG 17.21: ஆனால் மகிழ்சியிண்மையுடன், வெகுமதியை எதிர்பார்த்து திரும்ப கிடைக்கும் என்ற நம்பிக்கை மற்றும் தயக்கத்துடன் கொடுக்கப்படும் கொடை, உணர்ச்சியின் முறையில் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
Commentary
கேட்காமல் கொடுப்பதே தர்மம் செய்வதற்கான சிறந்த மனப்பான்மை. இரண்டாவது சிறந்த மனப்பான்மை, கேட்கப்பட்டவுடன் மகிழ்ச்சியுடன் கொடுப்பதாகும். தர்மத்தின் மூன்றாவது சிறந்த உணர்வு, நன்கொடை கேட்கும் போது தயக்கத்துடன் கொடுப்பது அல்லது 'நான் ஏன் இவ்வளவு கொடுத்தேன்? ஒரு சிறிய தொகையை கொடுத்து நான் தப்பித்திருக்கலாம்.’ என்று பின்னர் வருந்துவது. ஸ்ரீ கிருஷ்ணர் இந்த வகையான தானங்களை உணர்ச்சியின் முறையில் வகைப்படுத்துகிறார்.