Bhagavad Gita: Chapter 7, Verse 2

ஞானம் தே1‌ஹம் ஸவிஞ்ஞானமித3ம் வக்ஷ்யாம்யஶேஷத1: |

யஜ்ஞ்ஞாத்1வா நேஹ பூ4யோ‌ன்யஜ்ஞாத1வ்யமவஶிஷ்யதே1 ||2||

ஞானம்--—அறிவு; தே—-உனக்கு; அஹம்--—நான்; ஸ—--உடன்; விஞ்ஞானம்--—ஞானம்; இதம்--—இது; வக்ஷ்யாமி--—வெளிப்படுத்துகிறேன்; அஶேஷதஹ முழுமையாக; யத்--—எது; ஞாத்வா--—அறிந்து பின்; ந—இல்லை; இஹ—--இந்த உலகில்; பூயஹ--—மேலும்; அன்யத்--—வேறேதும்; ஞாதவ்யம்--—அறியப்பட வேண்டியது; அவஶிஷ்யதே—எஞ்சியிருக்கும் (ந--அவஶிஷ்யதே---எஞ்சியிருக்காது)

Translation

BG 7.2: இந்த அறிவையும் ஞானத்தையும் நான் இப்போது உனக்குமுழுமையாக வெளிப்படுத்துகிறேன், இந்த அறிவை உணர்ந்தால்,மேலும் வேறு எந்த எந்த அறிவும் அறியப்பட வேண்டிய அவசியம் இருக்காது

Commentary

புலன்கள், மனம் மற்றும் புத்தி மூலம் பெறப்படும் அறிவு ஞானம் என்று கூறப்படுகிறது. ஆன்மீக பயிற்சியின் விளைவாக உள்ளிருந்து நுண்ணறிவாக வரும் அறிவு விஞ்ஞானம் (விவேகம்) எனப்படும். உதாரணமாக, ஒரு பாட்டிலில் வைத்திருக்கும் தேனின் இனிமையின் பெருமைகளைப் பற்றி நாம் கேள்விப்பட்டுக்கொண்டே இருக்கலாம், ஆனால் அது நடைமுறை சாராத அறிவாகவே உள்ளது. இருப்பினும், பாட்டிலைத் திறந்து உள்ளே இருக்கும் தேனைச் சுவைக்கும்போது, ​​அதன் இனிமையை அனுபவப்பூர்வமாக உணரலாம். அதேபோல, குருவிடமிருந்தும் வேதங்களிலிருந்தும் நாம் பெறும் தத்துவார்த்த அறிவானது ஞானம். அந்த அறிவிற்கு ஏற்ப, நாம் ஆன்மீக பயிற்சியை மேற்கொண்டு, மனதை தூய்மைப்படுத்தும்போது, ​​நமக்குள் உணர்தலாக எழும் அறிவே விஞ்ஞானம் (விவேகம்) எனப்படும்.

வேத வியாஸ முனிவர் ஸ்ரீமத் பாகவதத்தை எழுதத் தீர்மானித்தபோது, ​​பக்தியின் தன்மை, மகிமைகள் மற்றும் பக்தியின் பொருள் ஆகியவற்றை விவரிக்கும் போது, ​​ஞானத்தின் அடிப்படையில் அதை எழுதுவதில் அவருக்கு மனநிறைவு ஏற்படாததால், அவர் முதலில் கடவுளை அனுபவபூர்வமாக உணர பக்தியில் ஈடுபட்டார்:

4க்1தி1-யோகே3ன மனஸி ஸம்யக்1 ப்1ரணிஹிதே ’மலே

அப1ஶ்யத்1 பு1ருஷம் பூ1ர்வம் மாயாம் ச11த்1-அபாஶ்1ரயாம்

(பா43வத1ம் 1.7.4)

'பக்தி யோகத்தின் மூலம் வேத வியாஸர் எந்த ஒரு பொருளுணர்வின்றி கடவுளின் மீது தனது மனதை நிலைநிறுத்தினார், இவ்வாறு ஒப்புயர்வற்ற தெய்வீக ஆளுமையை அவரது (கடவுளின்) கட்டுப்பாட்டில் இருந்த வெளிப்புற ஆற்றல், மாயையுடன் வேத வியாஸர் உணர்ந்து முழுமையான தரிசனம் பெற்றார்.’ இந்த உணர்தல் மூலம், அவர் பின்னர் புகழ்பெற்ற ஸ்ரீமத் பாகவதத்தை இயற்றினார்.

ஸ்ரீ கிருஷ்ணர், அர்ஜுனனுக்கு பரம தெய்வீக ஆளுமையின் தத்துவார்த்த அறிவால் ஒளியூட்டுவதாகவும், அதைப் பற்றிய உள்ளார்ந்த ஞானத்தைப் பெற உதவுவதாகவும் அறிவிக்கிறார். இந்த அறிவை உணர்ந்தால்,மேலும் வேறு எந்த எந்த அறிவும் அறியப்பட வேண்டிய அவசியம் இருக்காது.