Bhagavad Gita: Chapter 7, Verse 22

ஸ த1யா ஶ்ரத்34யா யுக்11ஸ்த1ஸ்யாராத4னமீஹதே1 |

லப4தே ச111: கா1மான்மயைவ விஹிதா1ன்ஹி தா1ன் ||22||

ஸஹ--—அவர்; தயா—--அதனுடன்; ஶ்ரத்தயா—--நம்பிக்கையுடன்; யுக்தஹ--—கொடுக்கப்பட்ட; தஸ்ய-—-அதன்; ஆராதனம்—--வழிபாடு; ஈஹதே--—ஈடுபட முயற்சிக்கிறார்; லபதே—--பெறுகிறார்; ச—--மற்றும்; ததஹ—--அதிலிருந்து; காமான்—--ஆசைகளை; மயா—--என்னால்; ஏவ—--தனியாக; விஹிதான்—--வழங்கியதே; ஹி--—நிச்சயமாக; தான்--—அவை

Translation

BG 7.22: நம்பிக்கையுடன், ஒரு குறிப்பிட்ட தேவலோக தெய்வத்தை வணங்கி, ஆசைப் பொருட்களைப் பக்தர் பெறுகிறார். ஆனால் உண்மையில், நான் மட்டுமே இந்த நன்மைகளை ஏற்பாடு செய்கிறேன்.

Commentary

லபதே என்றால் 'அவர்கள் பெறுகிறார்கள்'. தேவலோக தெய்வங்ளின் பக்தர்கள் அந்தந்த தேவலோக தெய்வங்களை வழிபடுவதன் மூலம் தங்கள் விருப்பத்தை அடையலாம், ஆனால் உண்மை என்னவென்றால், அவர்களுக்கு அருள வேண்டிய நன்மைகளை வழங்குவது கடவுளே அன்றி தேவலோக தேவர்கள் அல்ல. தேவலோக தெய்வங்களுக்குப் பொருள் பலன்களை வழங்குவதற்கான சரியான உரிமை இல்லை என்பதை இந்த வசனம் தெளிவாகக் குறிக்கிறது; கடவுள் அனுமதித்தால் மட்டுமே அவற்றைத் தங்கள் பக்தர்களுக்கு வழங்க முடியும். இருப்பினும், சாதாரணமான புரிதல் கொண்டவர்கள், தாங்கள் வணங்கும் கடவுள்களிடமிருந்து தங்களுக்கு உதவி வருகிறது என்று அனுமானிக்கிறார்கள்.