Bhagavad Gita: Chapter 9, Verse 15

ஞானயஞேன சா1ப்1யன்யே யஜன்தோ1 மாமுபா1ஸதே1 |

ஏக1த்1வேன ப்1ருத2க்1த்1வேன ப3ஹுதா4 விஶ்வதோ1முக2ம் ||15||

ஞான—யஞ்ஞேன——அறிவை வளர்க்கும் யாகத்தில்; ச——மற்றும்; அபி——மேலும்; அன்யே—மற்றவர்கள்; யஜந்தஹ——வழிபடுகின்றனர்; மாம்——என்னை; உபாஸதே——வழிபடுகின்றனர்; ஏகத்வேன——வேறுபடுத்தப்படாத ஒருமை; ப்ரிதக்த்வேன——வேறுபடாததாக; பஹுதா——எல்லையற்ற; விஸ்வதஹ-முகம்——அண்ட வடிவத்தில்

Translation

BG 9.15: மற்றவர்கள், அறிவை வளர்க்கும் யாகத்தில் ஈடுபட்டு, பல வழிகளில் என்னை வழிபடுகிறார்கள். சிலர் என்னை வேறுபடுத்தப்படாத ஒருமையாக அவர்களிடமிருந்து வேறுபடாததாகப் பார்க்கிறார்கள். மற்றவர்கள் என்னை அவர்களிடமிருந்து தனியாகப் பார்க்கிறார்கள். மற்றும் பலர் என் பிரபஞ்ச வடிவத்தின் எல்லையற்ற வெளிப்பாடுகளில் என்னை வணங்குகிறார்கள்.

Commentary

(ஆன்மீக பயிற்சியாளர்கள்) முழுமையான உண்மையை அடைய ஆன்மீகத்தின் வெவ்வேறு பாதைகளைப் பின்பற்றுகிறார்கள். ஸ்ரீ கிருஷ்ணர் முன்பு பக்தர்கள் யார் என்று விவரித்தார். பக்தி நிரம்பிய அவர்கள், பரமாத்மாவின் தாமரை பாதங்களில், தங்களை அவருடைய சிறிய பகுதிகளாக மற்றும் அடியார்கள் என்ற மனப்பான்மையுடன் சரணடைகிறார்கள். ஆன்மீக பயிற்சியாளர்கள் பின்பற்றும் வேறு சில வழிகளை அவர் இப்பொழுது விவரிக்கிறார்.

ஞான யோகத்தின் வழியைப் பின்பற்றுபவர்கள் தங்களை கடவுளிலிருந்து வேறுபடாதவர்கள் என்று கருதுகிறார்கள். அவர்கள் ’ஸோ ஹம் (நான் அதுதான்), ஶிவோ ’ஹம் (நான் சிவன்) மற்றும் பல ஸுத்திரங்களை ஆழ்ந்து சிந்திக்கிறார்கள். அறிவு மற்றும் பேரின்பம் ஆகிய பண்புகளைக் கொண்ட, ஆனால் வடிவங்கள், குணங்கள், நற்பண்புகள் மற்றும் பொழுது போக்குகள் அற்ற, வேறுபடுத்தப்படாத ப்ரஹ்மன் என்று பரமாத்மாவை உணர்ந்து கொள்வதே அவர்களின் இறுதிக் குறிக்கோள்.

இன்னும் சிலர் வெளிப்படையான பிரபஞ்சத்தை கடவுளாக வணங்குகிறார்கள். வேத தத்துவத்தில், இது கடவுளின் பிரபஞ்ச வடிவத்தை வணங்குதல் (விஸ்வரூப உபாஸனா) என்று அழைக்கப்படுகிறது. மேற்கத்திய தத்துவத்தில், இது கிரேக்க வார்த்தைகளான பான் (அனைத்தும்) மற்றும் தியோஸ் (கடவுள்) ஆகியவற்றிலிருந்து 'பாந்தீசம்' என்று அழைக்கப்படுகிறது. இந்த தத்துவத்தின் மிகவும் பிரபலமான விரிவுரையாளர் ஸ்பினோஸா ஆவார். உலகம் கடவுளின் ஒரு பகுதி என்பதால், அதை நோக்கி தெய்வீக உணர்வை வைத்திருப்பது சரியானது, ஆனால் அது முழுமையற்றது. அத்தகைய பக்தர்களுக்கு ப்ரஹ்மன் (கடவுளின் வேறுபடுத்தப்படாத அனைத்து வியாபித்த வெளிப்பாடு), பரமாத்மா (அனைவரின் உள்ளங்களிலும் அமர்ந்திருக்கும் பரமாத்மா), மற்றும் பகவான் (கடவுளின் தனிப்பட்ட வடிவம்) போன்ற பரம தெய்வீக ஆளுமையின் மற்ற அம்சங்களைப் பற்றிய அறிவு இல்லை.

இந்த மாறுபட்ட அணுகுமுறைகள் அனைத்தும் ஒரே கடவுளை எப்படி வணங்க முடியும்? இதற்குப் பின்வரும் வசனங்களில் ஸ்ரீகிருஷ்ணர் பதிலளிக்கிறார்.