க3தி1ர்ப4ர்தா1 ப்1ரபு4: ஸாக்ஷீ நிவாஸ: ஶரணம் ஸுஹ்ருத்1 |
ப்1ரப4வ: ப்1ரலய: ஸ்தா2னம் நிதா4னம் பீ3ஜமவ்யயம் ||18||
கதிஹி——உயர்ந்த இலக்கு; பர்தா——ஆதரிப்பவர்; பிரபுஹு——இறைவன்; ஸாக்ஷீ——சான்று; நிவாஸஹ——உறைவிடம்; ஶரணம்——அடைக்கலம்; ஸு—ஹ்ருத்——நண்பர்; ப்ரபவஹ——தோற்றம்; ப்ரளயஹ——முடிவு; ஸ்தானம்——களஞ்சியம்; நிதானம்——இளைப்பாறும் இடம்; பீஜம்——விதை; அவ்யயம்——அழியாதது
Translation
BG 9.18: நான் அனைத்து உயிரினங்களின் உச்ச இலக்கு, மேலும் நான் அவற்றின் பராமரிப்பாளர், எஜமானர், சான்று, உறைவிடம், மற்றும் நண்பர். நான் படைப்பின் தோற்றம், முடிவு மற்றும் இளைப்பாறும் இடம்; நான் களஞ்சியம் மற்றும் நித்திய விதை.
Commentary
ஆன்மா கடவுளின் ஒரு சிறிய அங்கமாக இருப்பதால், அதன் ஒவ்வொரு உறவும் அவருடன் உள்ளது. இருப்பினும், உடல் உணர்வில், நாம் உடலின் உறவினர்களை நம் தந்தை, தாய், அன்புக்குரியவர், குழந்தை மற்றும் நண்பராகப் பார்க்கிறோம். நாம் அவர்கள் மீது நமது பற்றுதல் காரணமாக அவர்களை மீண்டும் மீண்டும் நம் நினைவில் கொண்டு வருகிறோம், அதன் மூலம் பொருள் மாயையில் மேலும் பிணைக்கப்படுகிறோம். ஆனால் இந்த பொருள் உறவினர்கள் எவரும் நம் ஆன்மா ஏங்கும் சரியான அன்பை நமக்குத் தர முடியாது. இது இரண்டு வகையான காரணங்களை கொண்டது. முதலாவதாக, இந்த உறவுகள் தற்காலிகமானவை, அவர்கள் அல்லது நாம் உலகத்தை விட்டு வெளியேறும் பொழுது பிரிவினை தவிர்க்க முடியாதது. இரண்டாவதாக, அவர்கள் உயிருடன் இருக்கும் வரை, பற்றுதல் சுயநலத்தை அடிப்படையாகக் கொண்டது, எனவே சுயநலம் திருப்தி அடையும் விகிதத்திற்கு நேரடி விகிதத்தில் ஏற்ற இறக்கமாக இருக்கும். இவ்வாறாக, உலக அன்பின் அளவு எல்லையும் தீவிரமும் நாளுக்கு நாள் மாறுபடும். ‘என் மனைவி ரொம்ப நல்லவள்... அவ்வளவு நல்லவள் இல்லை... பரவாயில்லை... பயங்கரமானவள்,’ இதுதான் உலக நாடகத்தில் காதலின் ஏற்ற இறக்கத்தின் அளவு. மறுபுறம், கடவுள் வாழ்நாள் முழுவதும் நம்முடன் வந்தவர். நாம் பெற்ற உயிர் வடிவத்தைப் பொருட்படுத்தாமல், கடவுள் நம்முடன் சேர்ந்து நம் இதயத்தில் நிலைத்திருந்தார்; எனவே அவர் நமது தன்னலமற்ற நித்திய உறவினர். அவர் தன்னில் பூரணமானவர் மற்றும் முழுமையானவர். அவர் தன்னலமின்றி நேசிக்கிறார், ஏனென்றால் அவருடைய ஒரே விருப்பம் நமது நித்திய நலன். எனவே, கடவுள் ஒருவரே நமது குறைபாடற்ற நித்தியமான மற்றும் தன்னலமற்ற உறவினர்.
இந்த கருத்தை மற்றொரு கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ள, கடலின் ஒப்புமையையும் அதிலிருந்து வெளிப்படும் அலைகளையும் கருத்தில் கொள்ளுங்கள். கடலில் அடுத்திருக்கும் இரண்டு அலைகள் சில நேரம் ஒன்றாகப் பாய்ந்து ஒன்றுடன் ஒன்று உல்லாசமாக விளையாடி, அவற்றுக்கிடையே ஆழமான உறவைக் கொண்டிருக்கின்றன என்ற எண்ணத்தை உருவாக்குகின்றன. இருப்பினும், சிறிது தூரம் பயணித்த பிறகு, ஒரு அலை கடலில் அடங்கிவிடுகிறது, சிறிது நேரத்திற்குப் பிறகு, மற்றொரு அலையும் அவ்வாறே கடலில் அடங்கிவிடுகிறது. அந்த இரண்டு அலைகளும் ஏதாவது உறவு கொண்டிருந்தனவா? இல்லை, அவை இரண்டும் கடலில் இருந்து பிறந்தவை, அவர்களுடைய உறவு கடலோடுதான் இருந்தது. அதுபோல, கடவுள் கடல் போன்றவர், நாமும் அவரிடமிருந்து வந்த அலைகளைப் போன்றவர்கள். நாம் நம் உடல் உறவுகளுக்கு இடையே இணைப்புகளை உருவாக்குகிறோம், மரணத்தின் பொழுது அனைவரையும் விட்டுவிட்டு வேறொரு பிறவிக்கு தனியாக பயணிக்கிறோம். உண்மை என்னவென்றால், கடவுளில் இருந்து தோன்றிய ஆத்மாக்கள் கடவுளுடன் மட்டுமே தொடர்புடையவை, அவை ஒன்றோடொன்று தொடர்புடையவை அல்ல.
உலக உறவினர்களுடனான அதன் இணையான பற்றுக்கும் மேலாக அழைத்துச் செல்கிறார். ஆன்மாவின் தளத்தில் இருந்து, எல்லா உறவுகளும் கடவுள் மட்டுமே; அவர் நமது நண்பர், தந்தை, தாய், சகோதரி, சகோதரர் மற்றும் அன்புக்குரியவர். இந்த கருப்பொருள் அனைத்து வேத நூல்களிலும் மீண்டும் வலியுருத்தப்பட்டுள்ளது:
தி3வ்யோ தே3வ ஏகோ1 நாராயணோ மாதா1 பிதா1 ப்4ராதா1 ஸுஹ்ருத்1 கதி3ஹி
நிவாஸஹ ஶரணம் ஸுஹ்ருத்1 க3தி3ர1நாரயண இதி1
(ஸுப2ல் ஸ்ருதி1, மந்திரம் 6)
‘ஆன்மாவின் தாய், தந்தை, அன்புக்குரியவர், மற்றும் இலக்கு ஒப்புயர்வற்ற நாராயணன் மட்டுமே.’
மோரே ஸப3யி ஏக1 து1ம்ஹ ஸ்வாமீ, தீ3னபந்து4 உர அந்த1ரயாமீ,
(ராமாயணம்)
‘ஓ ஒப்புயர்வற்ற ராமரே, நீங்கள் ஒருவரே என் எஜமானர், ஆதரவற்றவர்களின் இரட்சகர், இதயத்தை அறிந்தவர்.’ கடவுளுடனான நமது நித்திய உறவின் பரிமாணத்தை அறிந்து, அவருடன் நம் மனதை இணைக்க முயற்சிக்க வேண்டும். அப்பொழுது, மனம் தூய்மையடைந்து, கடவுளின் அருளைப் பெருவதற்குத் தேவையான ‘மாமேகம் ஶரணம் வ்ரஜ அல்லது பூரண சரணாகதியின் நிபந்தனையை நாம் நிறைவேற்ற முடியும்.’ இந்த ஒருமுகச்சிந்தனையை அடைய, நாம் மனதின் தற்போதைய அனைத்து இணைப்புகளையும் துண்டித்து, அவற்றை கடவுளின் மீதான பற்றுதலுடன் மாற்ற வேண்டும். எனவே, ராமாயணம் கூறுகிறது:
ஸப கே மமதா1 தாக1 ப3டோ1ரி, மம ப1த3 மனஹி பா3ந்த4 பரி3 டோ3ரீ’
‘உங்கள் மனதின் உலகப் பற்றின் பந்தங்கள் அனைத்தையும் அறுத்து விடுங்கள்; அவற்றை ஒரு கயிறாக திரித்து, கடவுளின் தாமரை பாதங்களில் கட்டுங்கள்.’ நம் மனதை அவருடன் இணைக்க உதவும் வகையில், ஆன்மாவின் அனைத்து உறவுகளும் கடவுளுடன் மட்டுமே உள்ளது என்பதை ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம் விளக்குகிறார்.