ஸர்வத1:பா1ணிபா3த1ம் த1த்1ஸர்வதோ1க்ஷிஶிரோமுக2ம் |
ஸர்வத1:ஶ்ருதி1மல்லோகே1 ஸர்வமாவ்ருத்1ய தி1ஷ்ட2தி1 ||14||
ஸர்வதஹ--—எல்லா இடங்களிலும்; பாணி—--கைகள்; பாதம்—-அடி; தத்—-அது; ஸர்வதஹ----எல்லா இடங்களிலும்;அக்ஷி--—கண்கள்;ஶிரஹ-—-தலைகள்; முகம்—--முகங்கள்;ஸர்வதஹ--—எல்லா இடங்களிலும்; ஶ்ருதி-மத்—--காதுகளை உடைய; லோகே--—ப்ரம்மாண்டத்தில்; ஸர்வம்--—-அனைத்தையும்; ஆவ்ருத்ய--—வியாபித்து; திஷ்டதி—--இருக்கிறார்
Translation
BG 13.14: எல்லா இடங்களிலும் அவருடைய கைகள் மற்றும் கால்கள், கண்கள், தலைகள் மற்றும் முகங்கள் உள்ளன. அவருடைய காதுகள் எல்லா இடங்களிலும் உள்ளன, ஏனென்றால் அவர் ப்ரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் வியாபித்திருக்கிறார்.
Commentary
கடவுளுக்கு கைகள், கால்கள், கண்கள், காதுகள் மற்றும் பிற உடல் உறுப்புகள் இருக்க முடியாது என்று பெரும்பாலும் மக்கள் வாதிடுகின்றனர். ஆனால் ஸ்ரீ கிருஷ்ணர், கடவுளிடம் இவை அனைத்தும் உள்ளன என்றும் மற்றும் எண்ணற்ற அளவில் உள்ளது என்றும் கூறுகிறார். நமது வரையறுக்கப்பட்ட புரிதலுக்குள் கடவுளை சுற்றிவளைக்கும் வலையில் நாம் ஒருபொழுதும் விழக்கூடாது. அவர் க1ர்து1மக1ர்து1ம் அன்யதா1க1ர்து1ம் ஸமர்த1ஹ. ‘சாத்தியமானதையும், முடியாததையும், சாத்தியமானதை தலைகீழாக முடியாததாகவும் அவரால் செய்ய முடியும்.’ ஸர்வ வல்லமையுள்ள கடவுளுக்குக் கைகளும் கால்களும் இருக்க முடியாது என்று சொல்வது, அவர் மீது ஒரு தடையை ஏற்படுத்துவதாகும். கடவுளின் உறுப்புகளும் புலன்களும் தெய்வீகமானவை என்பதை நினைவில் வையுங்கள். பொருள் மற்றும் ஆழ்நிலைக்கு இடையிலான வேறுபாடு என்னவென்றால், நாம் ஒரு புலனுணர்வு தொகுப்பு உடையவர்களாக இருக்கும்போது கடவுள் எல்லையற்ற கைகள், கால்கள், கண்கள் மற்றும் காதுகளைக் கொண்டிருக்கிறார் .நமது புலன்கள் ஒரே இடத்தில் இருக்கும் நிலையில், கடவுளின் உணர்வுகள் எல்லா இடங்களிலும் உள்ளன. இவ்வாறு, கடவுள் உலகில் நடக்கும் அனைத்தையும் பார்க்கிறார். மற்றும் எப்பொழுதும் சொல்லப்பட்ட அனைத்தையும் கேட்கிறார் . அவர் படைப்பில் எங்கும் வியாபித்திருப்பது போல, அவருடைய கண்களும் காதுகளும் எங்கும் நிறைந்திருப்பதால் இது சாத்தியமாகும். சா2ந்தோ3க்3ய உப1நிஷத3ம் கூறுகிறது: ஸர்வம் க1ல்வித3ம் ப்3ரஹ்ம (3.14.1) 'எல்லா இடங்களிலும் ப்ரஹ்மம்..’ எனவே, ப்ரபஞ்சத்தில் எங்கும் அவருக்கு செய்யப்படும் உணவுப் பிரசாதங்களை அவர் ஏற்றுக்கொள்கிறார்; அவர் தம் பக்தர்கள் எங்கிருந்தாலும் அவர்களின் பிரார்த்தனைகளைக் கேட்கிறார்; மேலும் அவர் மூன்று உலகங்களிலும் நடக்கும் அனைத்திற்கும் சாட்சி. லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் அவரை வணங்கினால், அவர்கள் அனைவரின் பிரார்த்தனையையும் ஏற்றுக்கொள்வதில் அவருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.