Bhagavad Gita: Chapter 13, Verse 35

க்ஷேத்1ரக்ஷேத்1ரஞ்ஞயோரேவமன்த1ரம் ஞானச1க்ஷுஷா |

பூ41ப்1ரக்1ருதி1மோக்ஷம் ச1 யே விது3ர்யான்தி1 தே11ரம் ||35||

க்ஷேத்ர---உடலுக்கும்; க்ஷேத்ர-ஞ்ஞயோஹோ-—உடலை அறிபவனுக்கும்; ஏவம்—-இவ்வாறு; அந்தரம்--—வேறுபாட்டை; ஞான-சக்ஷுஷா--—அறிவின் கண்களால்; பூத—--உயிருள்ள உரு பொருள்; ப்ரகி1ரிதி1-மோக்ஷம்--—பொருள் இயற்கையிலிருந்து விடுவிபடும்; ச--—மற்றும்;யே--யார்; விதுஹு----அறிந்தவர்;யாந்தி--—அணுகுவர்;தே---அவர்கள்; பரம்—--உயர்ந்த

Translation

BG 13.35: உடலுக்கும் உடலை அறிபவனுக்கும் உள்ள வேறுபாட்டையும், ஜட இயற்கையிலிருந்து விடுபடும் செயல்முறையையும் அறிவின் கண்களால் உணர்ந்தவர்கள், உயர்ந்த இலக்கை அடைகிறார்கள்

Commentary

தனது வழக்கமான பாணியில், ஸ்ரீ கிருஷ்ணர் இப்பொழுது களம் மற்றும் களத்தை அறிந்தவர் என்ற தலைப்பை முடித்து, அவர் கூறிய அனைத்தையும் சுருக்கமாகக் கூறுகிறார். உண்மையான அறிவு என்பது பொருள் க்ஷேத்திரத்திற்கும் (செயல்பாட்டின் களம்) ஆன்மீக க்ஷேத்ரஞ்ஞத்திற்கும் (களத்தை அறிந்தவர்) இடையே உள்ள வேறுபாட்டை அறிவதாகும். இத்தகைய பாகுபாடான அறிவைக் கொண்டவர்கள் தங்களை ஜட உடல் என்று பார்ப்பதில்லை. அவர்கள் தங்களை ஆன்மாக்களாகவும் கடவுளின் சிறிய பகுதிகளாகவும் தங்கள் ஆன்மீக இயல்புடன் அடையாளம் காண்கிறார்கள். எனவே, அவர்கள் ஆன்மீக உயர்வு மற்றும் ஜட இயற்கையிலிருந்து விடுபடுவதற்கான பாதையை நாடுகின்றனர். பின்னர், ஆன்மீக அறிவொளியின் பாதையில் செல்வதன் மூலம், அத்தகைய ஞானம் கொண்டவர்கள் தங்கள் இறுதி இலக்கான கடவுள்-உணர்தலை அடைகிறார்கள்.