ரிஷிபி4ர்ப3ஹுதா4 கீ3த1ம் ச2ந்தோ3பி4ர்விவிதை4: ப்1ருத2க்1 |
ப்3ரஹ்மஸூத்1ரப1தை3ஶ்சை1வ ஹேது1மத்3பி4ர்வினிஶ்சி1தை1: ||5||
ரிஷிபிஹி--—சிறந்த முனிவர்களால்; பஹுதா--—பல்வேறு வழிகளில்; கீதம்--—பாடப்பட்டது; சந்தோபிஹி----வேத கீர்த்தனைகளில்; விவிதைஹி--—பல்வேறு; ப்ருதக்—பல்வேறு; ப்ரஹ்ம- ஸூத்திர-----ப்ரஹ்ம ஸூத்திரம்; பதைஹி--—துதிகளால்; ச---—மற்றும்; ஏவ--—குறிப்பாக; ஹேது-மத்பிஹி—அறிவுபூர்வமான; வினிஶ்சிதைஹி----முடிவான ஆதாரத்துடன்.
Translation
BG 13.5: சிறந்த முனிவர்கள் களம் பற்றிய உண்மையையும் களத்தை அறிந்தவர்களையும் பலவாறு பாடியுள்ளனர். இது பல்வேறு வேத பாடல்களில் கூறப்பட்டுள்ளது, இது பல்வேறு வேத ஆதாரங்களிலும், குறிப்பாக ப்ரஹ்மஸூத்திரங்களிலும் உறுதியான பகுத்தறிவு மற்றும் முடிவான ஆதாரங்களுடன் குறிப்பிடப்பட்டுள்ளது..
Commentary
தெளிவான, துல்லியமான. மற்றும் உறுதியான வாதங்களுடன் வெளிப்படுத்தப்படும்பொழுது மட்டுமே அறிவு புத்திசாலித்தனத்தை ஈர்க்கிறது. மேலும், சந்தேகத்திற்கு இடமின்றி ஏற்றுக்கொள்ளும் நோக்கத்திற்காக, தவறாத அதிகாரத்தால் அதை உறுதிப்படுத்துவது அவசியம். ஆன்மீக அறிவின் அங்கீகாரம் மற்றும் நம்பகத்தன்மைக்கு வேதங்கள் குறிப்பிடப்படுகின்றன.
வேதங்கள்: வேதங்கள் என்பது ஒரு சில புத்தகங்களின் பெயர் மட்டுமல்ல. வேதங்கள் இறைவனின் நித்திய அறிவு. இறைவன் உலகைப் படைக்கும்பொழுது, ஆன்மாக்களின் நலனுக்காகவே வேதங்களை வெளிப்படுத்துகிறார். பி3ருஹதா3ரண்யக1 உப1நிஷத3ம் (4.5.11) ‘நிஹ்ஶ்வஸ்த1மஸ்ய வேதா3ஹா’ என்று விவரிக்கிறது, அதாவது வேதங்கள் இறைவனின் சுவாசத்தின் மூலம் தோன்றின. முதலாவதாக, முதல் பிறந்த ப்ரஹ்மாவின் இதயத்தில் இறைவன் தனது அறிவை வெளிப்படுத்தினார். அங்கிருந்து ஶ்ருதி மரபில் பூமிக்கு வந்ததால், ‘ஶ்ருதி’ என்ற மற்றொரு பெயரும், அதாவது 'கேட்டதால் பெற்ற அறிவு' என்று வழங்கப்பட்டது. கலியுகத்தின் தொடக்கத்தில், இறைவனின் அவதாரமான மகரிஷி வேதவியாஸர், வேதங்களுக்கு நூல்கள் வடிவத்தைக் கொடுத்து, ஞானத்தின் ஒரு கிளையை ரிக்வேதம், யஜுர்வேதம், ஸாமவேதம் மற்றும் அத2ர்வவேதம் என நான்கு பகுதிகளாகப் பிரித்தார். எனவே அவர் வேதவியாசர் என்று அழைக்கப்பட்டார், அதாவது 'வேதங்களைப் பிரித்தவர். வேத வியாசரை வேதங்களின் ஆசிரியராக ஒருபொழுதும் குறிப்பிடப்படவில்லை, ஆனால் வேதங்களைப் பிரிப்பவர் என்று பெயரிடப்படுகிறார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதனால்தான் வேதங்கள் அபௌ1ருஶேய என்று அழைக்கப்படுகின்றன, அதாவது 'எவராலும் இயற்றப்படவில்லை'. வேதங்கள் ஆன்மீக அறிவிற்கான தவறு இல்லாத அதிகாரமாக மதிக்கப்படுகிறது.
பூ4தம் ப4வ்யம் ப4விஷ்யம் ச1 ஸ்ர்வம் வேதா3த்1 பிரஸித்3யதி1
(மனு ஸ்மிருதி1 12.97)
‘எந்தவொரு ஆன்மிகக் கொள்கையும் வேதங்களின் அதிகாரத்தில் சரிபார்க்கப்பட வேண்டும்.’ வேதங்களின் இந்த அறிவை விரிவுபடுத்துவதற்காக, பல முனிவர்கள் நூல்களை எழுதினார்கள், மேலும் இவை வேதங்களின் அதிகாரத்திற்கு இணங்குவதால் அவை பாரம்பரியமாக வேதங்களின் வரம்பில் சேர்க்கப்பட்டன. சில முக்கியமான வேத நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
வரலாறு: இவை வரலாற்று நூல்கள். அவற்றின் எண்ணிக்கை இரண்டு - ஒன்று இராமாயணம் மற்றொன்று மகாபாரதம். இவை கடவுளின் இரண்டு பெரிய அவதாரங்களின் வரலாற்றை விவரிக்கிறது. ராமாயணம் வால்மீகி முனிவரால் இயற்றப்பட்டது மற்றும் ராமரின் பொழுது போக்குகளை விவரிக்கிறது. வியக்கத்தக்க வகையில் பகவான் ஸ்ரீ ராமர் இந்த லீலைகளை நடத்துவதற்கு முன்பே வால்மீகியால் இந்த லீலைகள் எழுதப்பட்டது. மகரிஷி வால்மீ தெய்வீக பார்வையின் அருளைப் பெற்றவர், இதன் மூலம் உலகில் பகவான் ஸ்ரீ ராமர் அவதாரம் செய்வதற்கு முன்பே பகவான் ஸ்ரீ ராமர் அவதார காலத்தில் நிகழப்போகும் பொழுது போக்குகளை முன்கூட்டியே அவரால் பார்க்க முடிந்தது. ராமாயணத்தின் மிக அழகாக இயற்றப்பட்ட இருபத்து நான்காயிரம் சமஸ்கிருத வசனங்களை எழுதினார். இந்த ஸ்லோகங்களில் மகன், சகோதரன், மனைவி, ராஜா மற்றும் திருமணமான தம்பதிகள் போன்ற பல்வேறு சமூகப் பாத்திரங்களுக்கான சிறந்த நடத்தையின் போதனைகளும் உள்ளன. ராமாயணம் இந்தியாவின் பல பிராந்திய மொழிகளிலும் எழுதப்பட்டது, இதன் காரணமாக மக்கள் மத்தியில் அதன் புகழ் அதிகரித்தது. பகவான் ஸ்ரீ ராமரின் சிறந்த பக்தரான புனித துளசிதாஸால் எழுதப்பட்ட இந்தி ராமாயணம், ராமசரித்மனாஸ் இவைகளில் மிகவும் பிரபலமானது.
மகாபாரதம் வேத வியாசரால் எழுதப்பட்டது. இது நூறாயிரக்கணக்கான வசனங்களைக் கொண்டுள்ளது மற்றும் உலகின் மிக நீண்ட கவிதையாகக் கருதப்படுகிறது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தெய்வீக லீலைகள் மகாபாரதத்தின் மையக் கருவாகும். இது மனித வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் கடமைகள் மற்றும் கடவுள் பக்தி தொடர்பான ஞானம் மற்றும் வழிகாட்டுதல் நிறைந்தது.
பகவத் கீதை மகாபாரதத்தின் ஒரு பகுதி. இது மிகவும் பிரபலமான இந்து வேதமாகும், ஏனெனில் இது ஆன்மீக அறிவின் சாராம்சத்தைக் கொண்டுள்ளது, இது பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் மிகவும் அழகாக விவரிக்கப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள பகவத் கீதைக்கு எண்ணற்ற விளக்கங்கள் எழுதப்பட்டுள்ளன
புராணங்கள்: வேத வியாச முனிவரால் எழுதப்பட்ட பதினெட்டு புராணங்கள் உள்ளன. அவை நான்கு இலட்சம் வசனங்களைக் கொண்டிருக்கின்ற இவை கடவுள் மற்றும் அவரது பக்தர்களின் பல்வேறு வடிவங்களின் தெய்வீக பொழுதுபோக்குகளை விவரிக்கின்றன. இவைகளில் தத்துவ ஞானமும் நிறைந்திருக்கின்றன. இவை பிரபஞ்சத்தின் உருவாக்கம், நிலைநிறுத்தம்,, அழிவு மற்றும் அதன் மறு உருவாக்கம், தேவலோக தெய்வங்கள் மற்றும் புனித முனிவர்களின் வம்சாவளி ஆகியவற்றை விவரிக்கின்றன. அவற்றுள் முக்கியமானவை முனிவர் வேத வியாசரால் கடைசியாக எழுதப்பட்ட பகவத் புராணம் அல்லது ஸ்ரீமத் பாகவதம். இந்த வேதத்தில், கடவுள் மீதான தூய்மையான தன்னலமற்ற அன்பின் உயர்ந்த தர்மத்தை வெளிப்படுத்தப் போவதாக அவர் குறிப்பிடுகிறார். தத்துவ ரீதியாக, பகவத் கீதை முடிவடையும் இடத்தில் ஸ்ரீமத் பாகவதம் தொடங்குகிறது.
ஷட3 த3ரிஷனம்: வேத நூல்களின் அடுத்த முக்கியமான நூல்களான இவை ஆறு ரிஷிகளால் இயற்றப்பட்ட ஆறு நூல்கள். இந்து தத்துவத்தின் குறிப்பிட்ட அம்சங்களை முன்னிலைப்படுத்தும் இவை ஷட1 த3ரிஷனம் அல்லது ஆறு தத்துவம் எனப்படும். அவை:
-- மீமாம்ஸ: ஜைமினி மகரிஷியால் இயற்றப்பட்ட இந்நூல், சமயச் சடங்குகள், கடமைகள் மற்றும் சட-ங்குகளை விவரிக்கிறது.
--- வேதா3ந்த1 த3ரிஷனம் மகரிஷி வேத வியாஸரால் எழுதப்பட்டது, இது முழுமையான உண்மையின் தன்மையைப் பற்றி விவாதிக்கிறது.
--நியாய த3ரிஷனம் மகரிஷி கௌதமரால் எழுதப்பட்டது, இது வாழ்க்கையையும் முழுமையான உண்மையையும் புரிந்து கொள்வதற்கான தர்க்க அமைப்பை உருவாக்குகிறது.
--- வைஷேஷிக் த3ரிஷனம்: மகரிஷி கானாட் எழுதியது, அதன் பல்வேறு கூறுகளின் கண்ணோட்டத்தில் அண்டவியல் மற்றும் படைப்பை பகுப்பாய்வு செய்கிறது
.--- யோக3 த3ரிஷன: மகரிஷி பதஞ்சலி எழுதிய இந்த தத்துவத்தில், உடல் யோகா ஆசனங்களுடன் தொடங்கி கடவுளுடன் இணைவதற்கான எட்டு மடங்கு பாதையை (அஷ்டாங்க யோகம்) விவரிக்கிறது.
-- ஸாங்க்2ய த3ரிஷனம்: மகரிஷி கபிலாரல் எழுதப்பட்டது, இது பொருள் ஆற்றலின் ஆதி வடிவமான ப்ரகி1ரிதி1யிலிருந்து பிரபஞ்சத்தின் பரிணாமத்தை விவரிக்கிறது.
மேலே குறிப்பிட்டுள்ள நூல்களைத் தவிர, இந்து மரபில் நூற்றுக்கணக்கான நூல்கள் உள்ளன. அவற்றையெல்லாம் இங்கு விவரிக்க இயலாது. சுருக்கமாக, வேத நூல்கள் மனிதகுலத்தின் தொடர்ச்சியான நலனுக்காக கடவுள் மற்றும் மகான்கள் வெளிப்படுத்திய தெய்வீக அறிவின் வற்றாத பொக்கிஷம் என்று கூறலாம்.
இந்த மத நூல்களில், ப்ரஹ்ம ஶுதிரம் (வேதாந்த தத்துவம்) ஆன்மா, உடல் மற்றும் பரமாத்மா ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடு பற்றிய தலை சான்ற வாக்கியமாக கருதப்படுகிறது, இது மேலே உள்ள வசனத்தில் பகவான் கிருஷ்ணர் குறிப்பாக விவரித்தார்.
வேதா3ந்த1 தர்ஶனம் வியாச முனிவரால் எழுதப்பட்டாலும், பல பெரிய அறிஞர்கள் அதை தத்துவ ஆய்வுக்கான ஆதாரமாக ஏற்றுக்கொண்டு, ஆன்மா மற்றும் கடவுளைப் பற்றிய அவர்களின் தனித்துவமான தத்துவக் கண்ணோட்டத்தை நிறுவுவதற்கு வர்ணனைகளை எழுதினார்கள்.. வேதாந்த தர்ஶனம் பற்றிய ஜகத்குரு சங்கராச்சாரியாரின் வர்ணனை ஶாரீரக்1 பா4ஷ்ய என்று அழைக்கப்படுகிறது, இது இருமையற்ற (அத்3வைத1வாத3) தத்துவ பாரம்பரியத்தின் அடித்தளத்தை அமைக்கிறது. வாசஸ்பதி, பத்ம்பாத போன்ற இவரைப் பின்பற்றுபவர்கள் பலர் அதற்குத் தங்கள் விளக்கங்களை விரிவாக எழுதியுள்ளனர். ஜகத்குரு நிம்பர்கார்ச்சார்யா இருமை சார்ந்த மற்றும் இருமை அற்ற (த்3வைத1-அத்3வைத1வாத3ம்) சிந்தனைப் பள்ளியை விளக்கும் வேதா3ந்த1 பா1ஜாத1 சௌரப்4 என்ற நூலை எழுதினார். ஜகத்குரு ராமானுஜாச்சார்யாவின் வர்ணனை ஸ்ரீ பா4ஷ்யம் என்று அழைக்கப்படுகிறது, இது தத்துவத்தின் விஷிஷ்ட1-அத்3வைத1-வாத3 அமைப்புக்கு அடிப்படையாக அமைகிறது. ஜகத்குரு மத்வாச்சார்யாவின் வர்ணனை ப்3ரஹ்ம ஸுத்1ர பாஷ்யம் என்று அழைக்கப்படுகிறது, இது சிந்தனை த்3வைத1-வாத3 பள்ளிக்கு அடித்தளமாக உள்ளது. மஹாபிரபு வல்லபாச்சார்யா அணு பா4ஷ்யத்தை எழுதினார், அதில் அவர் ஶுத்3த4 த்3வைத1-வாத3ம் தத்துவ அமைப்பை நிறுவினார். இவர்களைத் தவிர, வேறு சில நன்கு அறியப்பட்ட வர்ணனையாளர்கள் பட் பாஸ்கர், யாதவ் பிரகாஷ், கேசவ், நீலகாந்த், விக்னனாபிக்ஷு, மற்றும் பலதேவ் வித்யாபுக்ஷு ஆகியோர் ஆவர்.
சைதன்ய மஹாபிரபு, ஒரு சிறந்த வேத அறிஞர், வேதாந்த தரிசனத்தைப் பற்றி எந்த விளக்கமும் எழுதவில்லை. வேதாந்தத்தின் எழுத்தாளர், முனிவர் வேத் வியாஸர். அவர்களே, அவருடைய இறுதி நூலான ஸ்ரீமத் பாகவதம் அதன் சரியான வர்ணனை என்று அறிவித்தார்.
அர்தோ2யம் ப்3ரஹ்மஸுத்1ராணம் ஸர்வோப1நிஷதா3மபி1
‘வேதாந்த தரிசனம் மற்றும் அனைத்து உபநிடதங்களின் அர்த்தத்தையும் சாரத்தையும் ஸ்ரீமத் பாகவதம் வெளிப்படுத்துகிறது.’ எனவே, வேத வியாசரின் மீதுள்ள மரியாதையின் காரணமாக, சைதன்ய மஹாபிரபு வேதத்திற்கு மற்றொரு விளக்கத்தை எழுதுவது பொருத்தமாக கருதவில்லை.