Bhagavad Gita: Chapter 13, Verse 17

அவிப4க்11ம் ச1 பூ4தே1ஷு விப4க்11மிவ ச1 ஸ்தி21ம் |

பூ414ர்த்4ரு ச11ஜ்ஞேயம் க்3ரஸிஷ்ணு ப்1ரப4விஷ்ணு ச1 ||17||

அவிபக்தம்--—வகுக்க முடியாத; ச—-இருந்தாலும்; பூதேஷு--—உயிரினங்களில்; விபக்தம்—--வகுக்கப்பட்ட; இவ—தோன்றுகிற; ச--—இருப்பினும்; ஸ்திதம்--—அமைந்துள்ள; பூத-பர்த்ரி--—அனைத்து உயிரினங்களையும் ஆதரிப்பவர்; ச—--மேலும்; தத்--—அது; ஞேயம்--—அறியப்பட வேண்டிய; க்ரஸிஷ்ணு—--நிர்மூலமாக்குபவர்; பிரபவிஷ்ணு—--படைப்பாளர்; ச---மற்றும்

Translation

BG 13.17: அவர் பிரிக்க முடியாதவர், ஆனாலும் அவர் உயிரினங்களுக்கிடையில் பிரிந்துள்ளதாகத் தோன்றுகிறார். ஒப்புயர்வற்ற ஆளுமையை அனைத்து உயிரினங்களின் படைப்பாளர், பராமரிப்பாளர் மற்றும் நிர்மூலமாக்குபவர் என்று அறிந்து கொள்ளுங்கள்.

Commentary

கடவுளின் ஆளுமை அவரது பல்வேறு ஆற்றல்களை உள்ளடக்கியது. அனைத்து வெளிப்படையான மற்றும் வெளிப்படுத்தப்படாத பொருள்கள் அவரது ஆற்றலின் விரிவாக்கங்கள். எனவே, இருப்பதெல்லாம் அவரே என்று நாம் கூறலாம். அதன்படி, ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது:

த்3ரவ்யம் க1ர்ம ச1 கா1லஶ் ச1 ஸ்வபா4வோ ஜீவ ஏவ ச1

வாஸுதேவாத்11ரோ ப்3ரஹ்மன் ந சா1ன்யோ ’ர்தோ2 ’ஸ்தி11த்1வத1ஹ (2.5.14)

‘படைப்பின் பல்வேறு அம்சங்கள்-நேரம், கர்மா, தனிப்பட்ட உயிரினங்களின் இயல்பு, மற்றும் படைப்பின் ஜடப் பொருட்கள் - அனைத்தும் பரம பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஒரு பகுதியாகும். அவரைத் தவிர இருப்பில் எதுவும் இல்லை. கடவுள் தனது படைப்பின் பொருட்களுக்கு இடையே பிரிக்கப்பட்டதாகத் தோன்றலாம், ஆனால் இருப்பதெல்லாம் அவரே என்பதால், அவர் பிரிக்கப்படாமல் இருக்கிறார். எடுத்துக்காட்டாக, விண்வெளி என்பது அதில் உள்ள பொருட்களுக்கு இடையில் பிரிக்கப்பட்டதாகத் தோன்றலாம். இருப்பினும், அனைத்து பொருட்களும் விண்வெளி எனப்படும் ஒரு பொருளுக்குள் உள்ளன, இது படைப்பின் தொடக்கத்தில் வெளிப்பட்டது. மீண்டும், நீர் குட்டைகளில் சூரியனின் பிரதிபலிப்பு அது பிளவுபட்டது போல் தோன்றுகிறது, ஆனால் சூரியன் பிரிக்க முடியாதது.

கடல் அலைகளை கடலோரம் சேர்த்துவிட்டு, அவற்றைத் தன்னுள் உள்வாங்குவது போல, கடவுள் உலகைப் படைத்து, பராமரிக்கிறார், பின்னர் அதைத் தன்னுள் உள்வாங்குகிறார். எனவே, அவரை அனைத்தையும் படைப்பவராகவும், பராமரிப்பவராகவும், அழிப்பவராகவும் சமமாகப் பார்க்கப்படலாம்.