அஸந்யதா1த்1மனா யோகோ3 து3ஷ்ப்1ராப1 இதி1 மே மதி1: |
வஶ்யாத்1மனா து1 யத1தா1 ஶக்1யோவாப்1து1முபா1யத1: ||36||
அஸந்யத-ஆத்மனா—--எவர் ஒருவரின் மனம் கட்டுப்பாடற்றதோ; யோகஹ--—யோகம்; துஷ்ப்ராபஹ---- அடைவது கடினம்; இதி--—-என்பது; மே-----என்; மதிஹி-----கருத்து; வஶ்ய-ஆத்மனா—---மனதைக் கட்டுப்படுத்தும் ஒருவரால்; து—--ஆனால்; யததா—--முயற்சி செய்பவர்; ஶக்யஹ--—சாத்தியம்; அவாப்தும்--—-அடைய; உபாயதஹ—--சரியான வழிமுறைகளால்
Translation
BG 6.36: கட்டுப்பாடற்ற மனம் உள்ளவருக்கு யோகம் கிடைப்பது கடினம். இருப்பினும், மனதைக் கட்டுப்படுத்தக் கற்றுக்கொண்டவர்களும், சரியான வழிகளில் தீவிரமாக முயற்சிப்பவர்களும் யோகத்தில் முழுமையை அடைய முடியும். இது என்னுடைய கருத்து.
Commentary
ஒப்புயர்வற்ற தெய்வீக ஆளுமை, ஸ்ரீ கிருஷ்ணர், இப்போது மனதைக் கட்டுப்படுத்துவதற்கும் யோகத்தில் வெற்றி பெறுவதற்கும் இடையேயான இணைப்பைக் கொடுக்கிறார். பயிற்சி மற்றும் பற்றின்மை மூலம் மனதைக் கட்டுப்படுத்தக் கற்றுக் கொள்ளாதவர்கள் யோகப் பயிற்சியில் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர் என்று அவர் கூறுகிறார். ஆனால் விடாமுயற்சியின் மூலம் மனதைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தவர்கள் சரியான வழிமுறைகளைக் கையாண்டு வெற்றியை அடைய முடியும். சரியான செயல்முறை ஏற்கனவே 6.10 முதல் 6.32 வசனங்கள் வரை அவரால் விவரிக்கப்பட்டுள்ளது. புலன்களை அடக்கி, ஆசைகள் அனைத்தையும் துறந்து, கடவுளின் மீது மட்டுமே மனதை செலுத்தி, அசையாத மனதுடன் அவரையே தியானித்து, அனைவரையும் சமமான பார்வையுடன் பார்ப்பது என 6.33 வசனத்தில் சுருக்கமாக கூறப்பட்டது.
இந்த கூற்று அர்ஜுனின் மனதில் மனதை கட்டுப்படுத்த முடியாத பயிற்சியாளரை பற்றி ஒரு சந்தேகத்தை உருவாக்குகிறது, மேலும் அவர் அதை பற்றி ஸ்ரீ கிருஷ்ணரிடம் இப்போது கேள்வி எழுப்புகிறார்.