யோ மாம் ப1ஶ்யதி1 ஸர்வத்1ர ஸர்வம் ச1 மயி ப1ஶ்யதி1 |
த1ஸ்யாஹம் ந ப்1ரணஶ்யாமி ஸ ச1 மே ந ப்1ரணஶ்யதி1 ||30||
யஹ--—யார்; மாம்—--என்னை; பஶ்யதி—--—பார்க்க ஸர்வத்ர—--எல்லா இடங்களிலும்; ஸர்வம்—--எல்லாம்; ச--—மற்றும்; மயி—--என்னில்; பஶ்யதி----பார்க்கிறாரோ; தஸ்ய—--அவருக்கு; அஹம்—--நான்; ந—இல்லை; ப்ரணஷ்யாமி--— விட்டுப் போவேன்; ஸஹ--—அந்த நபர்; ச--—மற்றும்; மே--—எனக்கு; ந—இல்லை; ப்ராணஷ்யதி--—இழந்தது. (ந—--ப்ரணஶ்யாமி----போக மாட்டேன்)
Translation
BG 6.30: எல்லா இடங்களிலும் என்னைப் பார்ப்பவர்களுக்கும், என்னில் எல்லாவற்றையும் பார்ப்பவர்களையும் விட்டு நான் ஒருபோதும் போவதில்லை , அல்லது அவர்கள் என்னை ஒருபோதும் இழந்ததும் இல்லை.
Commentary
கடவுளை இழப்பது என்பது மனதை அவரிடமிருந்து அலைய விடுவது, மற்றும் அவருடன் இருப்பது மனதை அவருடன் ஒன்றிணைப்பது ஆகும். மனதைக் கடவுளுடன் ஒன்றிணைப்பதற்கான எளிதான வழி, அனைத்தும் அவருடன் இணைந்திருப்பதைக் காணக் கற்றுக்கொள்வது. உதாரணமாக, ஒருவர் நம்மை புண்படுத்துகிறார் என்று வைத்துக்கொள்வோம். அத்தகைய நபர் மீது வெறுப்பு மற்றும் வெறுப்பு உணர்வுகளை வளர்ப்பது மனதின் இயல்பு. இருப்பினும், அதை நாம் அனுமதித்தால், நம் மனம் தெய்வீக அனுபவத்திலிருந்து வெளியேறுகிறது, மேலும் கடவுளுடனான நம் மனதின் பக்தி ஐக்கியம் நின்றுவிடும். அதற்குப் பதிலாக, அந்த நபரில் பகவான் அமர்ந்திருப்பதைக் கண்டால், 'கடவுள் இந்த நபர் மூலம் என்னைச் சோதிக்கிறார். நான் சகிப்புத்தன்மையின் நற்பண்பை அதிகரிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்,. ஆனால், அந்தச் சம்பவத்தை என்னைத் தொந்தரவு செய்ய அனுமதிக்க மாட்டேன்.’ என்று யோசிப்போம். இப்படிச் சிந்தித்துப் பார்த்தால், மனதை எதிர்மறை உணர்வுகளுக்கு ஆளாவதைத் தடுக்க முடியும்.
அதேபோல, ஒரு நண்பன் அல்லது உறவினருடன் இணைந்திருக்கும் போது மனம் கடவுளிடமிருந்து பிரிகிறது. இப்போது, அந்த நபரிடம் கடவுளைக் காண மனதைப் பயிற்றுவித்தால், ஒவ்வொரு முறையும் மனம் அவரை நோக்கி அலையும் போது, 'இந்த நபரில் ஸ்ரீ கிருஷ்ணர் அமர்ந்திருக்கிறார், அதனால்தான் நான் இந்த ஈர்ப்பை உணர்கிறேன்' என்று நினைப்போம். இந்த வழியில், மனம் தனது பக்தியை உச்சத்தில் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளும்.
சில சமயம், கடந்த கால சம்பவங்களை நினைத்து மனம் புலம்புகிறது. இது மீண்டும் மனதை தெய்வீக துறையில் இருந்து பிரிக்கிறது, ஏனென்றால் புலம்பல் மனதை கடந்த காலத்திற்கு அழைத்துச் செல்கிறது மற்றும் கடவுள் மற்றும் குருவைப் பற்றிய தற்போதைய சிந்தனை நிறுத்தப்படுகிறது . இப்போது அந்தச் சம்பவத்தை கடவுளுடன் தொடர்புபடுத்திப் பார்த்தால், ‘இறைவன் வேண்டுமென்றே நான் உலகில் இன்னல்களை அனுபவிக்க ஏற்பாடு செய்தார், அதனால் நான் பற்றின்மையை வளர்க்கிறேன். என்னுடைய ஆன்மிக முன்னேற்றத்திற்கு பயனளிக்கும் தகுந்த சூழ்நிலைகளை அவர் இரக்கத்துடன் ஏற்பாடு செய்து தருகிறார்.’ என்று யோசிப்போம். இவ்வாறு சிந்திப்பதன் மூலம், நமது பக்தி மையத்தை நாம் பாதுகாக்க முடியும் என்று நாரத முனிவர் கூறுகிறார்:
லோக1 ஹானௌ சி1ந்தா1 ந கா1ர்யா நிவேதி3தா1த்ம லோக1 வேத3த்3வாத்1
(நாரத3ப4க்1தி1 த3ர்ஶன், ஸூத்1ரம் 61)\
'உலகில் நீங்கள் தலைகீழ் திருப்பத்தை எதிர்கொள்ளும்போது, அதைப் பற்றிப் புலம்பவோ துக்கப்படவோ வேண்டாம். அந்தச் சம்பவத்தில் கடவுளின் அருளைப் பாருங்கள்.’ நம் சுயநலம் மனதை எவ்வாறாவது கடவுளில் வைத்திருப்பதில் உள்ளது. இதை நிறைவேற்றுவதற்கான எளிய தந்திரம் எல்லாவற்றிலும் எல்லாரிடமும் கடவுளைக் காண்பதாகும். அந்தப் பயிற்சி நிலை, இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பரிபூரணத்திற்கு மெதுவாக இட்டுச் செல்கிறது, அங்கு நாம் ஒருபோதும் கடவுளை இழப்பது இல்லை, அவர் நம்மை ஒருபோதும் இழப்பது இல்லை.