ஶ்ரீப4க3வானுவாச1 |
பா1ர்த2 நைவேஹ நாமுத்1ர வினாஶஸ்த1ஸ்ய வித்3யதே1 |
ந ஹி கல்1யாணக்1ருத்1க1ஶ்சி1த்3து3ர்க3தி1ம் தா1த1 க3ச்1ச2தி1 ||40||
ஶ்ரீ-பகவான் உவாச்சா—--உயர்ந்த பகவான் கூறினார்; பார்த--—ப்ரிதாவின் மகன் அர்ஜுன்ன்; ந ஏவ—--ஒருபோதும் இல்லை; இஹ—--இந்த உலகில்; ந--—ஒருபோதும்; அமுத்ர----அடுத்த உலகில்; விநாஶஹ—--அழிவு; தஸ்ய--—அவருடைய; வித்யதே---இருக்கிறது; ந—-ஒருபோதும்; ஹி--—நிச்சயமாக; கல்யாண-கிருத்--—இறை-உணர்தலுக்காக பாடுபடுபவர்; கஶ்சித்--—யாரும்; துர்கதிம்--—தீய இலக்கிற்கு; தாதா--—என் நண்பன்; கச்சதி--—செல்கிறது. (ந கச்சதி-—செல்ல மாட்டார்)
Translation
BG 6.40: ஒப்புயர்வற்ற பகவான் கூறினார்: ஓ பார்த், ஆன்மீகப் பாதையில் ஈடுபடும் ஒருவன் இவ்வுலகிலும், மறுமையிலும் அழிவைச் சந்திப்பதில்லை. என் அன்பான நண்பரே, கடவுள்-உணர்தலுக்காக பாடுபடுபவர் ஒருபோதும் தீமையால் வெல்லப்படுவதில்லை.
Commentary
தாத என்ற வார்த்தை அன்புக்குரிய வார்த்தையாகும், 'மகன்' என்பது இதன் அர்த்தம். இந்த வசனத்தில் அர்ஜுனனை தாத என்று அழைத்து, ஸ்ரீ கிருஷ்ணர் அவர்மீது உள்ள பாசத்தை வெளிப்படுத்துகிறார். குரு தனது சீடருக்கு தந்தையைப் போன்றவர், சில சமயங்களில் சீடரை அன்புடன் தாத என்று அழைப்பார். இங்கே, அர்ஜுனனிடம் தனது பாசத்தையும் கருணையையும் காட்டுவதன் மூலம், ஸ்ரீ கிருஷ்ணர், கடவுள் தனது பாதையில் நடப்பவர்களைக் கவனித்துக்கொள்கிறார் என்பதைக் குறிக்க விரும்புகிறார். அவர்கள் கடவுளுக்கு மிகவும் பிரியமானவர்கள், ஏனென்றால், அவர்கள் மிகவும் மங்களகரமான செயல்களில் ஈடுபடுகிறார்கள், மேலும் 'நன்மை செய்பவர் ஒருபோதும் வருத்தப்படுவதில்லை.' பக்தனை இறைவன் இம்மையிலும் மறுமையிலும் காக்கிறார் என்பதை இந்த வசனம் வலியுறுத்துகிறது. இந்த அறிவிப்பு அனைத்து ஆன்மீக ஆர்வலர்களுக்கும் ஒரு சிறந்த உத்தரவாதமாகும். தற்போதைய வாழ்க்கையில் பயணத்தை முடிக்காத யோகியின் முயற்சிகளை கடவுள் எவ்வாறு பாதுகாக்கிறார் என்பதை ஸ்ரீ கிருஷ்ணர் விளக்குகிறார்.