Bhagavad Gita: Chapter 6, Verse 16

நாத்1யஶ்னத1ஸ்து1 யோகோ‌3ஸ்தி1 ந சை1கா1ன்த1மனஶ்னத1: |

ந சா1தி1ஸ்வப்1னஶீலஸ்ய ஜாக்3ரதோ1 நைவ சா1ர்ஜுன ||16||

ந—--இல்லை; அதி--—மிகவும்; அஶ்னதஹ---உண்பவருக்கு; து--—எனினும்; யோகஹ—யோகம்; அஸ்தி—இருக்கிறது; ந—இல்லை;; ச--—மற்றும்; ஏகாந்தம்--—நிச்சியமாக; அனஶ்னதஹ----உணவைத் தவிர்ப்பவருக்கு; ந--—இல்லை; ச--—மற்றும்; அதி--—மிகவும்; ஸ்வப்ன-ஶீலஸ்ய--—உறங்குபவருக்கு; ஜாக்ரதஹ----போதுமான அளவு தூங்காதவருக்கு; ந—--இல்லை-; ஏவ—--நிச்சயமாக; ச--—மற்றும்; ஶீலஸ்ய அர்ஜுன----அர்ஜுனா

Translation

BG 6.16: ஓ அர்ஜுனா, அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சாப்பிடுபவர்கள், அதிகமாக தூங்குபவர்கள் அல்லது குறைவாக தூங்குபவர்கள் யோகத்தில் வெற்றியை அடைய முடியாது.

Commentary

தியானத்தின் பொருள் மற்றும் அதன் மூலம் அடையப்பட்ட இறுதி இலக்கை விவரித்த பிறகு, ஸ்ரீ கிருஷ்ணர் பின்பற்ற வேண்டிய சில விதிமுறைகளைப் பகிர்ந்து கொள்கிறார். உடல் பராமரிப்பு விதிகளை மீறுபவர்கள் யோகத்தில் வெற்றி பெற முடியாது என்று அவர் கூறுகிறார். பெரும்பாலும் தங்கள் புதிதாக அரைகுறையான ஞான நிலையுடன் இந்த பாதையில் கால் எடுத்து வைப்பவர்கள் : 'நீங்கள் ஆத்மா, இந்த உடல் அல்ல. எனவே வெறுமனே ஆன்மிகச் செயலில் ஈடுபட்டு உடலைப் பராமரிப்பதை மறந்துவிடுங்கள்' என்று கூறுகின்றனர்

இருப்பினும், அத்தகைய தத்துவம் ஒருவரை வெகு தூரம் கொண்டு செல்ல முடியாது நாம் உடல் இல்லை என்பது உண்மைதான், ஆனால் நாம் வாழும் வரை உடலே நம்மை தாங்கும் தூக்கு கலம் என்பதால், அதன் பராமரிப்பு தேவை. எனவே, அதை நாம் கவனித்துக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளோம். ஆயுர்வேத நூல், சரக் சம்ஹிதா கூறுகிறது : ஶரீர மாத்4யம் க1லு த4ர்ம ஸாத4னம் , 'மத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான வாகனம் உடல்.' உடல்நிலை சரியில்லாமல் போனால், ஆன்மீக நோக்கங்களும் தடைபடுகின்றன. ராமாயணம் கூறுகிறது: த1னு பி3னு ப4ஜன வேத3 நஹிம் வரணா 'ஆன்மிகத்தில் ஈடுபடும் போது உடல்நலனை புறக்கணிப்பதை வேதங்கள் பரிந்துரைக்கவில்லை.' மாறாக, பொருள் அறிவியலின் உதவியுடன் நம் உடலை நன்றாகப் பராமரிக்கும்படி அவை அறிவுறுத்துகின்றன. ஈஷோப1நிஷத3ம்கூறுகிறது:

அந்த4ம் த1மஹ ப்1ரவிஶந்தி1 யே வித்3யாம் உபா1ஸதே1

1தோ1 பூ4ய இவ தே11மோ ய யு வித்3யாயாம் ரதா1ஹா (9)

‘ஆன்மத்துறை சாராத  பொருள் அறிவியலை மட்டும் வளர்ப்பவர்கள் நரகத்திற்குச் செல்கிறார்கள். ஆனால் ஆன்மிக அறிவியலை மட்டும் வளர்ப்பவர்கள் இன்னும் இருண்ட நரகத்திற்குச் செல்கிறார்கள்.’ நமது உடலைப் பேணுவதற்குப் பொருள் அறிவியல் அவசியம் அதே சமயம் உள்ளுக்குள் உள்ள தெய்வீகத் தன்மையை வெளிப்படுத்த ஆன்மீக அறிவியல் அவசியம். கடவுளை உணரும் இறுதி இலக்கை அடைய நாம் நம் வாழ்வில் இரண்டையும் சமநிலைப்படுத்த வேண்டும். எனவே, யோகாசனங்கள், பிராணாயாமம் மற்றும் சரியான உணவுமுறை அறிவியல் ஆகியவை வேத அறிவின் இன்றியமையாத பகுதியாகும்.

நான்கு வேதங்களில் ஒவ்வொரு வேதத்திலும் பொருளறிவியலிற்கான அதன் துணை வேதம் உள்ளது. அதர்வ வேதத்தின் துணை வேதம் ஆயுர்வேதம் ஆகும், இது மருத்துவம் மற்றும் நல்ல ஆரோக்கியத்தின் பண்டைய அறிவியல் ஆகும். வேதங்கள் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு வலியுறுத்துவதை எடுத்துக்காட்டுகிறது . அதன்படி, அதிகமாகச் சாப்பிடுவது அல்லது சாப்பிடாமல் இருப்பது, தீவிரச் செயல்பாடு அல்லது முழுச் செயலற்ற தன்மை, அனைத்தும் யோகத்திற்குத் தடைகள் என்று ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார். ஆன்மிகப் பயிற்சியாளர்கள், ஆன்மிகப் பயிற்சியாளர்கள், புதிய சத்தான உணவை உட்கொண்டு, தினசரி உடற்பயிற்சி செய்து, தினமும் இரவில் சரியான அளவு தூங்குவதன் மூலம் தங்கள் தங்கள் உடலை நன்கு பராமரிக்க வேண்டும்.