Bhagavad Gita: Chapter 6, Verse 44

பூ1ர்வாப்4யாஸேன தே1னைவ ஹ்ரியதே1 ஹ்யவஶோ‌பி1 ஸ: |

ஜிஞ்ஞாஸுரபி1 யோக3ஸ்ய ஶப்33ப்3ரஹ்மாதி1வர்த1தே1 ||44||

பூர்வ—--கடந்த; அப்யாஸேன—--ஒழுக்கம்; தேன—--அதன் மூலம்; ஏவ—--நிச்சயமாக; ஹ்ரியதே—--கவரப்படுகிறது; ஹி--—நிச்சயம்; அவஶஹ----உதவியின்றி; அபி--—எனினும்; ஸஹ—--அந்த நபர்; ஜிஞ்ஞாஸுஹு--— அறிவதற்கான ஆர்வம் மிக்கவராக; அபி—--இருப்பினும்; யோகஸ்ய—--யோக்கைப் பற்றி; ஶப்த-ப்ரஹ்மம்—--வேதங்களின் பலனுள்ள பகுதியை; அதிவர்ததே---கடந்து செல்கிறார்

Translation

BG 6.44: உண்மையில், அவர்கள் தங்கள் கடந்தகால ஒழுக்கத்தின் பலத்தால், தங்கள் விருப்பத்திற்கு மாறாக, கடவுளிடம் ஈர்க்கப்படுகிறார்கள். இத்தகைய தேடுபவர்கள் இயற்கையாகவே வேதங்களின் தத்துவக் கொள்கைகளை விட உயர்கிறார்கள்.

Commentary

ஆன்மிக உணர்வுகளின் தளிர் வளர தொடங்கி விட்டால், அவற்றை அழிக்க முடியாது. நிகழ்காலம் மற்றும் கடந்தகால வாழ்க்கையிலிருந்து பக்தி போக்குகள் மற்றும் பதிவுகள் (ஸன்ஸ்காரங்கள்) கொண்ட ஆன்மா இயற்கையாகவே ஆன்மீகத்தை நோக்கி ஈர்க்கப்படுகிறது. அத்தகைய நபர் கடவுளை நோக்கி ஈர்க்கப்படுகிறார்; இந்த இழுப்பு 'கடவுளின் அழைப்பு' என்றும் குறிப்பிடப்படுகிறது. கடந்த கால ஸன்ஸ்காரங்களின் அடிப்படையில், கடவுளின் அழைப்பு சில சமயங்களில் மிகவும் வலுவானதாக மாறும், 'கடவுளின் அழைப்பு ஒருவரது வாழ்க்கையில் வலிமையான அழைப்பு' என்று சொல்லப்படுகிறது. அதை அனுபவிப்பவர்கள் உலகம் முழுவதையும், தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் அறிவுரைகளையும் நிராகரிக்கிறார்கள். வரலாற்றில், பெரிய இளவரசர்கள், பிரபுக்கள் மற்றும் பணக்கார வணிகர்கள் தங்கள் உலகப் பதவியின் சுகத்தைத் துறந்து துறவிகள், யோகிகள், முனிவர்கள், ஆன்மீகவாதிகள் மற்றும் சுவாமிகள் ஆனார்கள். அவர்களின்  ஈடுபாடு கடவுளுக்காக மட்டுமே இருந்ததால், அவர்கள் இயல்பாகவே வேதங்களின் முறையான முன்னேற்றத்தில் பரிந்துரைக்கப்பட்ட சடங்கு நடைமுறைகளை விட உயர்ந்தனர்.