அஹமாத்1மா கு3டாகே1ஶ ஸர்வபூ4தா1ஶயஸ்தி2த1: |
அஹமாதி3ஶ்ச1 மத்4யம் ச1 பூ4தா1னாமன்த1 ஏவ ச1 ||20||
அஹம்--—நான்; ஆத்மா--—ஆன்மா; குடாகேஶ--—உறக்கத்தை வென்ற அர்ஜுனா; ஸர்வ-பூத--—அனைத்து உயிரினங்களின்; ஆஶய-ஸ்திதஹ--—இதயத்திலும் அமர்ந்திருக்கிறேன்; அஹம்--—நான்; ஆதிஹி----ஆரம்பம்; ச—--மற்றும்; மத்யம்--—நடுவில்; ச—மற்றும்; பூதானாம்--—எல்லா உயிர்களின்; அந்தஹ--—முடிவு; ஏவ--—கூட; ச--—மேலும்
Translation
BG 10.20: ஓ அர்ஜுனா, நான் அனைத்து உயிர்களின் இதயத்திலும் அமர்ந்திருக்கிறேன். நான் எல்லா உயிரினங்களின் ஆரம்பம், நடுப்பகுதி, மற்றும் முடிவு.
Commentary
ஸ்ரீ கிருஷ்ணர் ஆன்மாவிலிருந்து வெகு தொலைவில் இல்லை என்று அறிவிக்கிறார், உண்மையில், அவர் மிக நெருக்கமானதை விட நெருக்கமானவர். இது வேதங்களில் விவரிக்கப்பட்டுள்ளது- யா ஆத்1மநி தி1ஷ்ட1தி1 அதாவது ‘எல்லா உயிர்களின் ஆன்மாவிலும் இறைவன் இருக்கிறார்.’ அவர் உள்ளே அமர்ந்து, ஆன்மாவுக்கு உணர்வு மற்றும் நித்திய சக்தியை வழங்குகிறார். அவர் தனது சக்திகளைத் திரும்பப் பெற்றால், நம் ஆன்மாவே செயலற்றதாகி அழிந்துவிடும். நாம் ஆன்மாக்கள் நமது சொந்த சக்தியால் அல்லாமல்,கடவுள் உள்ளே அமர்ந்து நமக்குத் தம் சக்திகளை வழங்குவதால் நித்தியமாகவும் உணர்வுபூர்வமாகவும் இருக்கிறோம், எனவே, ஸ்ரீ கிருஷ்ணர் அனைத்து உயிர்களின் இதயத்திலும் அவர் இருக்கிறார் என்று அறிவிக்கிறார்.
நம் ஆன்மா என்பது கடவுளின் உடல், அவர் நம் ஆன்மாவின் ஆத்மா. பாகவதம் கூறுகிறது:
ஹரிஹி ஸாக்ஷாத்3ப4க3வான் ஶரீரிணா
மாத்1மா ஞாஷணமிவ தோ1யமீப்1ஸித1ம். (5.18.13)
‘கடவுள் அனைத்து உயிரினங்களின் ஆன்மா.’ குழந்தை ஸ்ரீ கிருஷ்ணரைப் பார்க்க கோபியர்கள் தங்கள் குழந்தைகளை வீட்டில் விட்டுச் சென்றதை ஸுகதேவர் விவரித்தபொழுது, இது எப்படி சாத்தியம் என்று பரீக்ஷித் கேட்டார் என்று பாகவதத்தில் மீண்டும் கூறப்பட்டுள்ளது.
ப்3ரஹ்மன் ப1ரோத்3ப4வே கி1ருஷ்ணே இயான் ப்1ரேமா க1தம் ப4வேத்1.(10.14.49)
‘ஓ பிரம்மன், எல்லா தாய்மார்களும் தங்கள் குழந்தைகளின் மீது பற்று வைத்திருக்கிறார்கள், பிறகு கோபியர்களுக்கு அவர்கள் தங்கள் குழந்தைகளிடம் உணராத இவ்வளவு ஆழமான பற்றுதல் எப்படி ஸ்ரீ கிருஷ்ணரிடம் ஏற்பட்டது,’ ஸுகதேவர் பதிலளித்தார்:
க்1ரிஷ்ணமேநமவேஹி த்1வமாத்1மானமகி2லாத்1மநாம்
(பா4க3வத1ம் 10.14.55)
‘பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் ஒப்புயர்வற்ற பகவான் கிருஷ்ணர் என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். மனிதகுலத்தின் நலனுக்காக, அவர் தனது யோகமாய சக்தியால் மனித உருவில் தோன்றினார்.'
ஸ்ரீ கிருஷ்ணர் மேலும் அவர் அனைத்து உயிரினங்களின் , ஆரம்பம், நடுப்பகுதி, மற்றும் முடிவு என்று கூறுகிறார். அவர்கள் அவரிடமிருந்து வெளிப்பட்டார்கள், அதனால் அவர் அவர்களின் ஆரம்பம். படைப்பில் இருக்கும் அனைத்து உயிர்களும் அவரது ஆற்றல் மூலம் நிலைத்திருக்கின்றன, எனவே, அவர் நடுத்தரவர். மேலும் விடுதலையை அடைந்தவர்கள் அவருடன் நித்தியமாக வாழ்வதற்காக அவருடைய தெய்வீக இருப்பிடத்திற்குச் செல்கிறார்கள். எனவே, கடவுள் எல்லா உயிர்களின் முடிவாகவும் இருக்கிறார். வேதங்களால் வழங்கப்பட்ட கடவுளின் பல்வேறு வரையறைகளில், அவற்றில் ஒன்று:
யதோ1 வா இமானி பூ4தா1னி ஜாயந்தே1, யேன ஜாதா1னி ஜீவந்தி,1
யத்1ப்1ரயந்த்1யபி4ஸம்விஶந்தி1 (தை1த்1தி1ரீய உப1நிஷத3ம் 3.1.1)
‘எல்லா உயிர்களும் எவரிடமிருந்து தோன்றினதோ அவரே கடவுள்; அனைத்து ஜீவராசிகளும் எவற்றில் நிலைத்திருக்கின்றனவோ அவர்தான் கடவுள்; எல்லா ஜீவராசிகளும் எவருக்குள் இணைகின்றனவோ அவர்தான் கடவுள்.’