ம்ருத்1யுஹு ஸர்வஹரஶ்சா1ஹமுத்3ப4வஶ்ச1 ப4விஷ்யதா1ம் |
கீ1ர்தி1ஹி ஶ்ரீர்வாக்1ச1 நாரீணாம் ஸ்ம்ருதி1ர்மே1தா4 த்4ருதி1ஹி க்ஷமா ||34||
ம்ருத்யுஹு----மரணம்; ஸர்வ-ஹரஹ—--அனைத்தையும் விழுங்கும்; ச--—மற்றும்; அஹம்--—நான்; உத்பவஹ--- இருக்கப்போகிறவற்றின் தோற்றம்; ச—--மற்றும்; பவிஷ்யதாம்--—வருங்காலத்தில் இருக்க வேண்டியவை; கீர்திஹி-----பகழ்-; ஶ்ரீஹி--—பெருமை; வாக்—--நல்ல பேச்சு; ச---மற்றும்; நாரீணாம்—--பெண் குணங்களில்; ஸ்ம்ருதிஹி----நினைவாற்றல்; மேதா—--புத்திசாலித்தனம்; த்ருதிஹி---தைரியம்; க்ஷமா—--மன்னிப்பு
Translation
BG 10.34: நானே அனைத்தையும் விழுங்கும் மரணம், வருங்காலத்தில் இருக்கப்போகிறவற்றின் தோற்றம் நானே. பெண்மையின் குணங்களில், புகழ், செழிப்பு, சிறந்த பேச்சு, நினைவாற்றல், புத்திசாலித்தனம், தைரியம் மற்றும் மன்னிப்பு.
Commentary
ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு: 'மரணம் போல் உறுதியானது'. பிறந்தவருக்கு இறப்பு நிச்சயம். எல்லா வாழ்க்கையும் தவிர்க்க முடியாமல் மரணத்தில் முடிவடைகிறது. கடவுள் படைப்பின் சக்தி மட்டுமல்ல; அழிவின் சக்தியும் அவரே. மரணத்தின் வடிவில் அனைத்தையும் விழுங்குகிறார். வாழ்க்கை மற்றும் இறப்பு சுழற்சியில், இறந்தவர்கள் மீண்டும் பிறக்கிறார்கள். ஸ்ரீ கிருஷ்ணர், அவர் அனைத்து எதிர்கால உயிரினங்களையும் உருவாக்கும் கொள்கை என்று கூறுகிறார்.
சில குணங்கள் பெண்களின் ஆளுமையில் அலங்காரங்களாகக் காணப்படுகின்றன, மற்ற குணங்கள் குறிப்பாக ஆண்களின் பாராட்டிற்குரியதாகக் கருதப்படுகின்றன. ஒரு விரிவான வளர்ச்சி மற்றும் நன்கு சமநிலையான ஆளுமை என்பது இரண்டு வகையான குணங்களையும் கொண்ட ஒன்றாகும். இங்கே, ஸ்ரீ கிருஷ்ணர் புகழ், செழிப்பு, சரியான பேச்சு, நினைவாற்றல், புத்திசாலித்தனம், தைரியம் மற்றும் மன்னிப்பு, பெண்களை மகிமைப்படுத்தும் நற்பண்புகளாக பட்டியலிடுகிறார். இவற்றில் முதல் மூன்று குணங்கள் வெளியில் வெளிப்படும், மீதமுள்ள நான்கு உள் அலங்காரங்கள்.
இது தவிர, மனிதகுலத்தின் முன்னோடியான தக்ஷ பிரஜாபதிக்கு இருபத்தி நான்கு மகள்கள் இருந்தார்கள். இவர்களில் ஐந்து பேர் சிறந்த பெண்களாகக் கருதப்பட்டனர் - கீர்த்தி, ஸ்மிருதி, மேதா, த்ரிதி மற்றும் க்ஷமா. ஸ்ரீ பிருகு முனிவரின் மகள். வாக் ப்ரஹ்மாவின் மகள். அந்தந்த பெயர்களுக்கு ஏற்ப, இந்த ஏழு பெண்களும் இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏழு குணங்களின் முதன்மையான தெய்வங்கள். இங்கே, ஸ்ரீ கிருஷ்ணர் இந்த குணங்களை தனது விபூதிகளாக பட்டியலிடுகிறார்.