Bhagavad Gita: Chapter 10, Verse 1

ஶ்ரீப43வானுவாச1 |

பூ4ய ஏவ மஹாபா3ஹோ ஶ்ருணு மே ப1ரமம் வச1: |

யத்1தே‌ஹம் ப்1ரீயமாணாய வக்ஷ்யாமி ஹித1கா1ம்யயா || 1 ||

ஶ்ரீ---பகவான் உவாச—--இறைவன் கூறினார்; பூயஹ--—மீண்டும்; ஏவ—--உண்மையாக; மஹா-பாஹோ—--வலிமையான கைகளை உடையவனே; ஸ்ருணு—--கேள்; மே--—என்; பரமம்—--தெய்வீக; வசஹ--—போதனைகளை; யத்—--எது; தே—--உனக்கு; அஹம்----நான்; ப்ரீயமாணாய—--என் அன்பிற்குரிய நம்பிக்கைக்குரியவனுக்காக; வக்ஷ்யாமி—-வெளிப்படுத்துகிறேன்; ஹித-காம்யயா----உன் நலனை விரும்பி

Translation

BG 10.1: ஒப்புயர்வற்ற ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார்: ஓ வலிமையான கைகளை உடையவனே, என் தெய்வீக போதனைகளை மீண்டும் கேள். நீ என் அன்புக்குரிய நண்பன் என்பதால் உன் நலனை விரும்பி, அவற்றை உனக்கு வெளிப்படுத்துகிறேன்.

Commentary

ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனன் அவரது பெருமைகளை கேட்பதில் ஆர்வம் உடையவராக இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைகிறார். இப்பொழுது, ​​அவரது மகிழ்ச்சியை மேலும் மேம்படுத்தவும், பக்தியின் மீதான அவரது ஆர்வத்தை கூடுதலாக்கவும், ஸ்ரீ கிருஷ்ணர் தனது மேன்மைகளையும் ஒப்பற்ற பண்புகளையும் விவரிப்பதாக அறிவிக்கிறார். அவர் ப்1ரீயமாணாய என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார், 'நீ என் அன்பான நம்பிக்கைக்குரியவன், எனவே இந்த சிறப்பு அறிவை நான் உனக்கு வெளிப்படுத்துவேன்.’