Bhagavad Gita: Chapter 10, Verse 37

வ்ருஷ்ணீனாம் வாஸுதே3வோ‌ஸ்மி பா1ண்டவானாம் த4னந்ஜய: |

முனீனாமப்1யஹம் வ்யாஸ: க1வீனாமுஶனா க1வி: ||37||

விருஷ்ணீனாம்—--விருஷ்ணியின் சந்ததியினரில்; வாஸுதேவஹ--—வஸுதேவனின் மகன் கிருஷ்ணன்; அஸ்மி--—நான்; பாண்டவனாம்--—பாண்டவர்களிடையே; தனஞ்சயஹ---அர்ஜுனன், செல்வத்தை வென்றவன்; முனீனாம்--—முனிவர்களிடையே; அபி--—மேலும்; அஹம்--—நான்; வ்யாஸஹ----வேத வியாஸர்; கவீநாம்--—பெரிய சிந்தனையாளர்களிடையே; உஶனா--—ஶுக்ராச்சாரியர்; கவிஹி---சிந்தனையாளர்

Translation

BG 10.37: விருஷ்ணியின் சந்ததிகளில் நான் கிருஷ்ணன், பாண்டவர்களில் நான் அர்ஜுனன். என்னை முனிவர்களில் வேத வியாசர் என்றும், சிறந்த சிந்தனையாளர்களில் ஶுக்ராச்சாரியர் என்றும் அறிந்து கொள்.

Commentary

பகவான் கிருஷ்ணர் பூமியில் விருஷ்ணி வம்சத்தில் வஸுதேவரின் மகனாகப் பிறந்தார். எந்த ஆன்மாவும் இறைவனை மிஞ்ச முடியாது என்பதால், இயற்கையாகவே விருஷ்ணி வம்சத்தின் மிகவும் புகழ்பெற்ற ஆளுமை அவர். பாண்டுவின் ஐந்து மகன்கள் பாண்டவர்கள் - யுதிஷ்டிரர், பீமன், அர்ஜுனன், நகுலன் மற்றும் சகதேவன். அவர்களில் அர்ஜுனன் ஒரு சிறந்த வில்லாளி மற்றும் ஸ்ரீ கிருஷ்ணரின் மிகவும் நெருக்கமான பக்தர். அவர் இறைவனை தனது அன்பான நண்பராககவும் கருதினார்.

முனிவர்களில் வேத வியாஸர் சிறப்பு வாய்ந்தவர். அவர் 'பாதராயன்' மற்றும் 'கிருஷ்ண த்வைபாயன்' என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறார். அவர் வேத அறிவை பல்வேறு வழிகளில் வெளிப்படுத்தினார் மற்றும் மக்கள் நலனுக்காக பல நூல்களை எழுதினார்.

உண்மையில், வேத வியாஸர் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரம் மற்றும் ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள அவதாரங்களின் பட்டியலில் குறிப்பிடப்படுகிறார்.

ஶுக்ராச்சாரியர் நெறிமுறை அறிவியலில் தனது நிபுணத்துவத்திற்காக அறியப்பட்ட மிகவும் கற்றறிந்த முனிவர். அசுரர்களை சீடர்களாக ஏற்று அவர்களின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் கருணை காட்டினார். அவருடைய புலமையின் பலத்தால், அவர் கடவுளின் விபூதி என்று அழைக்கப்படுகிறார்.