Bhagavad Gita: Chapter 10, Verse 18

விஸ்த1ரேணாத்1மனோ யோக3ம் விபூ4திம்11 ஜனார்த3ன |

பூ4ய: க12ய த்1ருப்1தி1ர்ஹி ஶ்ருண்வதோ1 நாஸ்தி1 மே‌ம்ருத1ம் ||18||

விஸ்தரேண—--விவரமாக; ஆத்மனஹ----உங்கள்; யோகம்--—தெய்வீக மகிமைகளை; விபூதிம்— ஐஸ்வர்யங்களை; ச--—மேலும்; ஜனார்தன---ஸ்ரீ கிருஷ்ணர், பொதுமக்களைக் கவனிப்பவர்; பூயஹ-—மீண்டும்; கதய—--சொல்லுங்கள்; த்ரிப்திஹி-----தருப்தியுடன்; ஹி---ஏனெனில்; ஶ்ருண்வதஹ—-கேட்பதை விட; ந----இல்லை அஸ்தி----இருக்கிற; மே---எனக்கு; அமிர்தம்—-அமிர்தம்; (ந---ஆஸ்தி வேறு இல்லை)

Translation

BG 10.18: உங்களது தெய்வீக மகிமைகள் மற்றும் வெளிப்பாடுகள் பற்றி மீண்டும் விரிவாகச் சொல்லுங்கள், ஓ ஜனார்தனா. உங்களது அமிர்தத்தைக் கேட்டு என்னால் ஒருபொழுதும் சோர்வடைய முடியாது.

Commentary

அர்ஜுனன் கூறுகிறார், '.... அமிர்தம் போன்ற உங்கள் வார்த்தைகளைக் கேட்பது,' என்பதற்குப் பதிலாக,’உங்கள் அமிர்தத்தைக் கேட்பது '... என்று அவர் கூறுகிறார். 'உங்கள் வார்த்தைகளைப் போன்றது' என்பதை அவர் தவிர்த்து விட்டார். இது ஒப்பிடும் பொருள் தவிர்க்கப்படும். அதி1ஶயோக்1தி1 அல்லது ஹைப்பர்போல் (அதிசய வெளிப்பாட்டின் அறிக்கை) எனப்படும் இலக்கிய நுட்பமாகும். ஸ்ரீ கிருஷ்ணரை ஜனார்தனன் என்று அழைக்கிறார், அதாவது 'துன்பமடைந்த மக்கள் நிவாரணம் கேட்கும் ஒரு கருணையாளர்'.

கடவுளின் மகிமைகளை வர்ணிப்பது அவரை நேசிப்பவர்களுக்கு அமிர்தம் போன்றது. அவர் ஸ்ரீ கிருஷ்ணரின் அமுதமான தேன் போன்ற வார்த்தைகளைத் தனது காதுகளால் குடித்து வருகிறார், மேலும் அவர் இப்பொழுது பூ4ய க12ய மீண்டும் ஒருமுறை என்று கூறி அவரை உற்சாகப்படுத்துகிறார். ‘உங்கள் மகிமைகளைக் கேட்பதற்கான என் தாகம் தணியவில்லை.’ இது தெய்வீக அமிர்தத்தின் இயல்பு. அது நம்மைத் திருப்திப்படுத்துகிறது, அதே நேரத்தில் அதிக தாகத்தை அதிகரிக்கிறது. நைமிஷாரண்ய முனிவர்கள், ஸுத கோஸ்வாமியிடம் இருந்து ஸ்ரீமத் பாகவதத்தைக் கேட்கும் பொழுது, ​​இதே போன்ற ஒரு கருத்தைச் சொன்னார்கள்:

வயம் து1 ந வித்1ரிப்1யாம உத்11மஶ்லோக1விக்1ரமே

யச்1ச்2ருண்வதா1ம் ரஸஞ்ஞானம் ஸ்வாது1 ஸ்வாது11தே3 1தே3 (1.1.19)

‘பகவான் கிருஷ்ணரிடம் பக்தி கொண்டவர்கள் அவருடைய தெய்வீக விளக்கங்களைக் கேட்பதில் சோர்வடைய மாட்டார்கள். இந்த பொழுது போக்குகளின் அமிர்தம் எவ்வளவு அதிகமாக ருசிக்கப்படுகிறதோ, அவ்வளவு அதிகமாகிறது.