வக்1து1மர்ஹஸ்யஶேஷேண தி3வ்யா ஹ்யாத்1மவிபூ4த1ய: |
யாபி4ர்விபூ4தி1பி4ர்லோகா1னிமான்ஸ்த்1வம் வ்யாப்1ய தி1ஷ்ட2ஸி ||16||
க1த2ம் வித்3யாமஹம் யோகி3ன்ஸ்த்1வாம் ஸதா3 ப1ரிசின்த1யன் |
கே1ஷு கே1ஷு ச1 பா4வேஷு சி1ன்த்1யோஸி ப4க3வன்மயா ||17||
வக்தும்—விளக்க; அர்ஹஸி—--தயவுசெய்து விவரியுங்கள்; அஶேஷேண—--முழுமையாக; திவ்யாஹா--—தெய்வீக; ஹி—--உண்மையில்; ஆத்மா—--உங்களுடைய; விபூதயஹ---—ஐஸ்வர்யங்களை; யாபிஹி—---எவைகளின்; விபூதிபிஹி----ஐஸ்வரியங்கள் மூலம்; லோகான்--—எல்லா உலகங்களை; இமான்--—இவை; த்வம்--—நீங்கள்; வ்யாப்ய—--வியாபித்து; திஷ்டஸி—--வசிக்கிறீர்கள்; கதம்--—எப்படி; வித்யாம் அஹம்—--நான் அறிவேன்; யோகின்—--யோகத்தின் உன்னதமான நிபுணரே; த்வாம்—--உங்களை; ஸதா--—எப்பொழுதும்; பரிச்சிந்தயன்--—தியானம் செய்துகொண்டு; கேஷு--—எதில்; கேஷு--—எதில்; ச—--மற்றும்; பாவேஷு--—வடிவங்களில்; சிந்த்யஹ அஸி--—நினைக்கப்பட முடியும்; பகவன்--—சிறந்த தெய்வீக ஆளுமை; மயா—--என்னால்
Translation
BG 10.16-17: தயவு செய்து உங்கள் தெய்வீக ஐஸ்வர்யங்களை எனக்கு விவரியுங்கள், அதன் மூலம் நீங்கள் உலகங்களை வியாபித்து அவற்றில் வசிக்கிறீர்கள். ஓ யோகத்தின் உன்னதமான நிபுணரே, நான் எப்படி உங்களை அறிய மற்றும் உங்களைப் பற்றி நினைக்க முடியும்? உன்னத தெய்வீக ஆளுமையே,மேலும் தியானம் செய்யும் பொழுது, நான் எந்த வடிவில் உங்களைப் பற்றி நினைக்க முடியும்?
Commentary
இங்கே, ‘யோக்’ என்பது யோகமாயயைக் குறிக்கிறது (கடவுளின் தெய்வீக சக்தி), மற்றும் ‘யோகி’ என்பது யோகமாயத்த்தின் தலைச்சிறந்த அதிகாரி . ஸ்ரீ கிருஷ்ணர் பகவான் என்பதை புரிந்து கொண்ட அர்ஜுனன் இன்னும் சொல்லப்படாத, ஸ்ரீ கிருஷ்ணரின் ஆழ்ந்த கம்பீரமான செழுமை -- விபூ4தி1 வேறு என்ன வழிகளில் படைப்பு முழுவதும் காட்சி அளிக்கும் என்பதை அவர் இப்பொழுது அறிய விரும்புகிறார். அவர் ஸ்ரீ கிருஷ்ணரின் மேன்மை மற்றும் அனைத்து படைப்புகளின் உன்னதமான கட்டுப்பாட்டாளர் என்ற முதன்மையான நிலையைப் பற்றி கேட்க விரும்புகிறார். எனவே, அவர் மன்றாடுகிறார், 'நான் தளராத பக்தியை அடைவதுற்கு உங்கள் தெய்வீக வெளிப்பாடுகளை அறிய நான் ஆர்வமாக உள்ளேன், உங்கள் அருள் இல்லாமல் உங்களது ஆளுமையை வெளிப்படுத்துவது சாத்தியமில்லை. எனவே தயவு செய்து கருணை காட்டுங்கள், உமது பல பெருமைகளை வெளிப்படுத்துங்கள், இதன் மூலம் நான் உங்களை உணர முடியும்.'