Bhagavad Gita: Chapter 11, Verse 1

அர்ஜுன உவாச 1 |

மத3னுக்3ரஹாய பரமம் குஹ்யமத்4யாத்1மஸஞ்ஞித1ம் |

யத்1த்1வயோக்11ம் வச1ஸ்தே1ன மோஹோ‌யம் விக3தோ1 மம || 1 ||

அர்ஜுனஹ உவாச--—அர்ஜுனன் கூறினார் மத்-அனுக்ரஹாய—--என் மீது இரக்கத்தினால்; பரமம்--—உயர்ந்த; குஹ்யம்—--மிக ரகசியமான; அத்யாத்ம-ஸஞ்ஞிதம்--—ஆன்மீக அறிவைப் பற்றி; யத்—--எது; த்வயா--—உங்களால்; உக்தம்—-பேசப்பட்ட; வசஹ--—வார்த்தைகள்; தேன--—அதன் மூலம்; மோஹஹ--—மாயை; அயம்--—இது;— விகதஹ--— விலகிவிட்டது.; மம----என்

Translation

BG 11.1: அர்ஜுனன் கூறினார்: என்மீது இரக்கம் கொண்டு நீங்கள்வெளிப்படுத்திய மிக ரகசியமான ஆன்மீக அறிவைக் கேட்டு, மாயை இப்பொழுது விலகிவிட்டது.

Commentary

ஸ்ரீ கிருஷ்ணரின் ஐஸ்வர்யங்களை பற்றியும், ஒப்புயர்வற்ற ஆளுமை பற்றிய ஞானத்தையும் அறிந்த அர்ஜுனன் மகிழ்ச்சியடைகிறார், மேலும் அவருடைய மாயை இப்பொழுது விலகி விட்டதாக நம்புகிறார். ஸ்ரீ கிருஷ்ணர் தனது சிறந்த நண்பர் மட்டுமல்ல, உலகின் அனைத்து ஐஸ்வரியங்களுக்கும் ஆதாரமான ஒப்புயர்வற்ற தெய்வீக ஆளுமை என்பதை அவர் ஏற்றுக்கொண்டார். இப்பொழுது இந்த அத்தியாயத்தில், அத்தகைய விலைமதிப்பற்ற அறிவை வெளிப்படுத்துவதில் ஸ்ரீ கிருஷ்ணரின் கருணையை நன்றியுடன் ஒப்புக் கொள்ளத் தொடங்குகிறார்.