நப4:ஸ்ப்1ருஶம் தீ3ப்1த1மனேக1வர்ணம்
வ்யாத்1தா1னனம் தீ3ப்த1விஶாலனேத்1ரம் |
த்3ருஷ்ட்1வா ஹி த்1வாம் ப்1ரவ்யதி2தா1ன்த1ராத்1மா
த்3ருதி1ம் ந வின்தா3மி ஶமம் ச1 விஷ்ணோ ||24||
நபஹ--ஸ்ப்ரிஶம்---—வானத்தைத் தொடும்; தீப்தம்—--ஒளிமயமான; அநேக--—பல; வர்ணம்—--பல வண்ணங்களில்; வ்யாத்த—--திறந்த; ஆனனம்—--வாய்களுடன்; தீப்த—--சுடர்விடும்; விஶால—--பெரிய; நேத்ரம்--—சுடர்விடும் கண்ககளுடன்; த்ருஷ்ட்வா--—பார்த்து; ஹி—--உண்மையில்; த்வாம்--—உங்களை; ப்ரவ்யதிதாந்தர்-ஆத்மா—--என் இதயம் பயத்தால் நடுங்குகிறது; த்ருதிம்---—உறுதி; ந—--இல்லை; விந்தாமி—--காண்கிறேன்; ஶமம்--—மன அமைதியை; ச—--மற்றும்; விஷ்ணோ---பகவான் விஷ்ணுவே
Translation
BG 11.24: ஓ பகவான் விஷ்ணுவே, வானத்தைத் தொடுவதும், பல வண்ணங்களில் பிரகாசிப்பதும், திறந்த வாய்களுடன், மகத்தான சுடர்விடும் கண்களோடும் இருப்பதைக் கண்டு, என் இதயம் பயத்தால் நடுங்குகிறது. நான் தைரியத்தையும் மன அமைதியையும் இழந்துவிட்டேன்.
Commentary
கடவுளின் ப்ரபஞ்ச வடிவத்தைப் பார்த்ததும், ஸ்ரீ கிருஷ்ணருடன் அர்ஜுனனுக்கு இருந்த உறவின் தன்மை மாறியது. முன்னதாக, அவர் அவரை நெருங்கிய நண்பராகப் பார்த்தார் மற்றும் நெருங்கிய கூட்டாளியாக பழகினார். ஸ்ரீ கிருஷ்ணர் கடவுள் என்பதை அறிந்திருந்தாலும் அவரது இதயத்தில் பொங்கி வழியும் அன்பு ஸ்ரீ கிருஷ்ணரின் ஸர்வவல்லமையான ஆளுமையை மறக்கச் செய்தது. அவரது நினைவில் உலகில் உள்ள எல்லாவற்றையும் விட அவர் தனது நண்பர் ஸ்ரீ கிருஷ்ணரை நேசித்தார் என்பது மட்டுமே நிற்கும்.
அதுதான் அன்பின் இயல்பு அது மனதை மிகவும் ஆழமாக ஆழ்த்துகிறது, பக்தன் தனது அன்புக்குரிய இறைவன் உண்மையான வல்லமையான கடவுள் என்ற அறிவை மறந்து விடுகிறான். அவர் சம்பிரதாயத்தை கடைபிடித்தால், காதலில் முழுமையை வெளிப்படுத்த முடியாது. உதாரணமாக, ஒரு மனைவி தன் கணவனை ஆழமாக நேசிக்கிறார். அவர் மாநில ஆளுநராக இருந்தாலும், மனைவி அவரை தனது கணவராக மட்டுமே பார்க்கிறார், அதனால் அவருடன் நெருக்கமாக பழக முடிகிறது. தன் கணவன் கவர்னர் என்ற இந்த அறிவை என்ற கருத்தை நினைவில் வைத்துக்கொண்டால், அவர் வரும்போதெல்லாம், அவனுக்கு அதிக சம்பிரதாய மரியாதையை செலுத்த அவள் முனைவார். எனவே அவரது காதல் உணர்வுகள் அவரது கணவரின் அதிகாரப்பூர்வ நிலை பற்றிய அறிவில் மூழ்கிவிடுகிறது.கடவுள் பக்தியிலும் இதே நிகழ்வு நடைபெறுகிறது.
பிருந்தாவனத்தில் மாடு மேய்க்கும் சிறுவர்கள் ஸ்ரீகிருஷ்ணரை தங்களது நண்பராகவே மட்டுமே பார்த்தார்கள். ஜகத்குரு ஸ்ரீ கிருபாலுஜி மகராஜ் அவர்கள் ஸ்ரீ கிருஷ்ணருடனான அவர்களின் பொழுது போக்குகளை மிகவும் இனிமையாக விவரிக்கிறார்:
தே3கோ2 தே3கோ2 ரீ, க்3வால பா3லன யாரி
ரிஜாவத1 கே2ல ஜிதா1ய ஸக2ன கோ1, கோ3டா ப3னி ப3னி ப3னவாரி,
(ப்1ரேம் ரஸ் மதி3ரா, ரஸி3யா மாது4ரி, பத3ம் 7)
‘ஸ்ரீ கிருஷ்ணருக்கும் அவரது மாடு மேய்க்கும் நண்பர்களுக்கும் இடையிலான அன்பான தொடர்புகளின் இனிமையைப் பாருங்கள்! அவர்கள் ஒன்றாக விளையாடுகிறார்கள், ஸ்ரீ கிருஷ்ணர் விளையாட்டில் தோல்வியுற்றால், அவர் குதிரையாக மாறுகிறார், அவருடைய நண்பர் அவரது முதுகில் சவாரி செய்கிறார்.’ மாடு மேய்க்கும் நண்பர்கள் ஸ்ரீ கிருஷ்ணர் கடவுள் என்பதை நினைவில் வைத்திருந்தால், அத்தகைய செயலைச் செய்ய அவர்களுக்கு ஒருபொழுதும் தைரியம் இருக்காது. மேலும் இறைவனும் தம் பக்தர்களுடன்அன்பான நண்பராகத் தொடர்பு கொள்ளும் இத்தகைய தொடர்புகளின் நெருக்கத்தை ரசிக்கிறார்.
ஸ்ரீ கிருஷ்ணர் பூமியில் புகழ்பெற்ற கோவர்த்தன லீலாவை நடத்தினார். சொர்க்கத்தின் மன்னனும், மழையின் தேவலோக கடவுளான இந்திரன் விடாமல் பெரு மழையை பிரஜ் தேசத்தில் பொழிந்த பொழுது மழையிலிருந்து பிரஜ் தேசத்தில் வசிப்பவர்களைக் காக்க, ஸ்ரீ கிருஷ்ணர் கோவர்த்தன மலையைத் தனது இடது கையின் சுண்டு விரலில் உயர்த்தினார். இருப்பினும், கிருஷ்ணரின் சிறிய மாடு மேய்க்கும் கூட்டாளிகள் அதை தனி சிறப்பாக கருதவில்லை. அவர்களின் பார்வையில், கிருஷ்ணர் ஒரு அன்பான நண்பன் மட்டுமே. அவர் மலையை உயர்த்த முடியும் என்று அவர்கள் நம்பவில்லை. ஜகத்குரு ஸ்ரீ கிருபாலுஜி மஹராஜ் மேற்கண்ட வசனத்தின் தொடர்ச்சியாகக் கூறுகிறார்:
நக1 தா4ர்யோ கோ3வர்த3ன-கி3ரி ஜப3, ஸக2ன கஹ்யோ ஹம கி3ரிதா3ரி
(ப்1ரேம் ரஸ் மதி3ரா, ரஸி3யா மாது4ரி, பத3ம்)
‘ஸ்ரீ கிருஷ்ணர் கோவர்தன மலையைத் தூக்கியபொழுது, அவரது மாடு மேய்க்கும் நண்பர்கள் தாங்கள் மலையைத் தூக்குபவர்கள் என்று நினைத்து, மலையின் அடிவாரத்தில் தங்கள் குச்சிகளைப் பயன்படுத்தி மலையை நிலை நிறுத்துவதாக நினைத்தார்கள்.’ ஏழு இரவும் ஏழு பகல்களும் முடிவில், வெள்ளை யானையில் அமர்ந்த இந்திரன் தோல்வியை ஏற்றுக்கொண்டு ஸ்ரீ கிருஷ்ணரின் உன்னத நிலையை உணராமல், பெருமழையை அனுப்பியதற்காக மன்னிப்புக் கோரினார்.
இப்பொழுது, மாடு மேய்க்கும் சிறுவர்கள், சொர்க்கத்தின் அரசனான இந்திரன், தங்கள் நண்பன் கிருஷ்ணனுக்கு வணக்கம் செலுத்துவதைக் கண்டதும், கிருஷ்ணர் கடவுள் என்பதை உணர்ந்தனர். எனவே, அவர்கள் தூரத்திலிருந்தே அவரைப் பயத்துடன் பார்க்க ஆரம்பித்தார்கள். அவர்களின் நட்பின் உணர்வு பயம் மற்றும் பய பக்தியாக மாறுவதை கண்டு ஸ்ரீகிருஷ்ணர் புலம்பினார் , 'நாங்கள் அனுபவித்துக்கொண்டிருந்த அந்த அன்பான பரிமாற்றம் மறைந்து விட்டது. அவர்கள் இப்பொழுது நான் கடவுள் என்று நினைக்கிறார்கள்.’ பிறகு அவருடைய யோகமாய சக்தியால், அவர்களை அவர்கள் பார்த்தவற்றின் முக்கியத்துவத்தை மறக்கச் செய்து ஸ்ரீ கிருஷ்ணர் தங்கள் நண்பரை தவிர வேறு இல்லை என்று அவர்களை மீண்டும் உணரச் செய்தார்.
அர்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணருடன் தோழமை பாராட்டிய அதே சமயத்தில் ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தராகவும் இருந்தார். அர்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணர் உடன் நண்பராக பழகியதால் அவரை தனது தேர் ஓட்டுநராக இருக்க ஒப்புக் கொண்டார். ஸ்ரீ கிருஷ்ணர் ஸர்வ சிருஷ்டியின் ஒப்புயர்வற்ற கடவுள் என்ற உண்மையால் அவரது பக்தி தூண்டப்பட்டிருந்தால், அர்ஜுனன் அவரை ஒருபொழுதும் இத்தகைய இழிவுபடுத்தும் சேவையை செய்ய அனுமதித்திருக்க மாட்டார். ஆனால் இப்பொழுது, அவரது எல்லையற்ற தேசோன்மயத்தை, நினைத்துப் பார்க்க இயலாத அளவிற்கான ஐஸ்வரியங்களையும் கண்டு, ஸ்ரீ கிருஷ்ணரின் மீதான அவரது சகோதர உணர்வு பயத்தால் மாற்றப்படுகிறது.