அர்ஜுன உவாச 1 |
ப1ஶ்யாமி தே3வாந்ஸ்த1வ தே3வ தே3ஹே
ஸர்வாந்ஸ்த1தா2 பூ4த1விஶேஷஸங்கா4ன் |
ப்3ரஹ்மாணமீஶம் க1மலாஸனஸ்த2ம்ருஷீந்ஶ்ச1
ஸர்வானுரகா3ந்ஶ்ச1 தி3வ்யான் ||15||
அர்ஜுனஹ உவாச--—அர்ஜுனன் கூறினார்; பஶ்யாமி--—நான் பார்க்கிறேன்; தேவான்--—அனைத்து தேவர்களையும்; தவ--—உங்கள்; தேவ—--இறைவன்; தேஹே--—உடலுக்குள்ளே; ஸர்வான்--—அனைத்து; ததா--—அத்துடன்; பூத விஶேஷ-ஸங்கான்---—பல்வேறு உயிரினங்களின் புரவலன்கள்; ப்ரஹ்மாணம்—--ப்ரஹ்மா; ஈஶம்—--சிவன்; கமல-ஆஸன-ஸ்தம்—--தாமரை மலரில் அமர்ந்திருப்பதை; ரிஷீன்--—முனிவர்களை; ச--—மற்றும்; ஸர்வான்--—அனைத்து; உரகான்—-தேவலோக நாகங்களை; ச—--மற்றும்; திவ்யான்---தெய்வீக
Translation
BG 11.15: அர்ஜுனன் கூறினார்: ஓ ஸ்ரீ கிருஷ்ணா, நான் உங்கள் உடலில் உள்ள அனைத்து கடவுள்களையும் பல்வேறு ஜீவராசிகளையும் பார்க்கிறேன் தாமரை மலரில் ப்ரஹ்மா அமர்ந்திருப்பதைக் காண்கிறேன்; நான் சிவனையும், அனைத்து முனிவர்களையும், தேவலோக நாகங்களையும் பார்க்கிறேன்.
Commentary
அர்ஜுனன் தேவலோக இருப்பிடங்களின் கடவுள்கள் உட்பட மூன்று உலகங்களிலிருந்தும் ஏராளமான உயிரினங்களைக் காண்கிறேன் என்று வியந்து உரைத்தார். க1மலாஸனஸத2ம் என்ற சொல் ப்ரபஞ்சத்தின் வட்டமான தாமரை இலைகளில் அமர்ந்திருக்கும் ப்ரஹ்மாவுக்கு பயன்படுத்தப்படுகிறது.. சிவபெருமான், விஸ்வாமித்திரர் போன்ற முனிவர்கள், வாசுகி போன்ற பாம்புகள் அனைவரும் ப்ரபஞ்ச வடிவத்திற்குள் காணப்பட்டனர்.