அநேக1பா3ஹூத3ரவக்1த்1ரனேத்1ரம்
ப1ஶ்யாமி த்1வாம் ஸர்வதோ1னன்த1ரூப1ம் |
நான்த1ம் ந மத்4யம் ந பு1னஸ்த1வாதி3ம்
ப1ஶ்யாமி விஶ்வேஶ்வர விஶ்வரூப1 ||16||
அநேக--—எண்ணற்ற; பாஹு--—கைகள்; உதர—வயிறுகள்; வக்த்ர—முகங்கள்; நேத்ரம்-—கண்கள்; பஶ்யாமி--—நான் காண்கிறேன்; த்வாம்--—உங்களுடைய; ஸர்வதஹ--—ஒவ்வொரு திசையிலும்; அனந்த-ரூபம்—முடிவற்ற வடிவத்தை; ந அந்தம்—--முடிவு இல்லாமல்; ந--—இல்லை; மத்யம்—--நடுவு; ந—இல்லை புனஹ—-மீண்டும்; தவ—--உங்கள்;ஆதிம்--—ஆரம்பம்; பஶ்யாமி---நான் பார்க்கிறேன்; விஶ்வ-ஈஸ்வர----ப்ரபஞ்சத்தின் இறைவன்; விஸ்வ-ரூப----ப்ரபஞ்சத்தையே வடிவமாகக் கொண்ட
Translation
BG 11.16: எண்ணற்ற கைகள், வயிறுகள், முகங்கள் மற்றும் கண்கள் கொண்ட உங்கள் எல்லையற்ற வடிவத்தை ஒவ்வொரு திசையிலும் காண்கிறேன். ப்ரபஞ்சத்தையே வடிவமாகக் கொண்ட ஒப்புயர்வற்ற ப்ரபஞ்சத்தின் கடவுளே, நான் உங்களில் எந்த ஆரம்பத்தையும், நடுவையும், முடிவையும் காணவில்லை.
Commentary
அர்ஜுனன் இரண்டு வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்- விஶ்வேஶ்வரர், அதாவது, 'ப்ரபஞ்சத்தின் கட்டுப்பாட்டாளர்' மற்றும் விஶ்வரூபம், அதாவது 'உலகளாவிய வடிவம்'. 'ஓ ஸ்ரீ கிருஷ்ணா, இந்த ப்ரபஞ்சம் உனது வெளிப்பாடே தவிர வேறில்லை, நீயே அதன் அதிபதி.' மேலும், எந்தக் கோணத்தில் பார்த்தாலும், இறைவனின் வெளிப்பாடுகளின் முடிவை அவரால் அறிய முடியவில்லை என்று கூறி தான் அனுபவிக்கும் வடிவத்தின் பரந்த தன்மையை வெளிப்படுத்துகிறார். அவர் ஆரம்பத்தைத் தேடும்பொழுது, அவரால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை; அவர் அதன் நடுவில் பார்க்க முயற்சிக்கும் பொழுது, அவர் மீண்டும் வெற்றி பெறவில்லை; மேலும் அவர் முடிவைத் தேடும்பொழுது, அவருக்கு முன்னால் வெளிப்படும் மாறி மாறி வரும் அழகான காட்சிகளுக்கு வரம்பு எதுவும் இல்லை.