த1த1: ஸ விஸ்மயாவிஷ்டோ1 ஹ்ருஷ்ட1ரோமா த4னஞ்ஜய: |
ப்1ரணம்ய ஶிரஸா தே3வம் க்1ருதா1ஞ்ஜலிரபா4ஷத1 ||14||
ததஹ--—பிறகு; ஸஹ--—அவன்; விஸ்மயா-ஆவிஷ்டஹ--—ஆச்சரியம் நிறைந்து; ஹ்ருஷ்ட—ரோமா--— உடல் சிலிர்ந்து தனஞ்சயஹ---அர்ஜுனன், செல்வத்தை வென்றவன்; ப்ரணம்ய--—வணங்கி; ஶிரஸா--—(தன்) தலையுடன்; தேவம்--—இறைவனிடம்; க்ருத-அஞ்சலிஹி----கூப்பிய கைகளுடன்; அபாஷத----உரையாற்றினார்
Translation
BG 11.14: பிறகு, அர்ஜுனன், ஆச்சரியம் நிறைந்து, உடல் சிலிர்த்து, இறைவன் முன் தலை குனிந்து, கூப்பிய கைகளுடன் ஸ்ரீ கிருஷ்ணரிடம் உரையாற்றினார்.
Commentary
அந்த திகைப்பூட்டும்படியான அற்புதமான காட்சியைக் கண்டு அர்ஜுனன் வியப்பும் ஆழ்ந்த பயபக்தியும் அடைந்தார். இது அவரது இதயத்தின் பக்தி சரங்களை அசைத்து அவரது இதயத்தில் தீவிர மகிழ்ச்சியை தூண்டியது. பக்தி உணர்வுகள் மூலம் அனுபவிக்கும் மகிழ்ச்சி எப்போதாவது உடல் வெளிப்பாடாக வெளிப்படுகிறது. சில சமயங்களில் பக்தர்களின் இதயம் பக்தியில் சிலிர்க்கப்படும்பொழுது வெளிப்படும் அத்தகைய எட்டு அறிகுறிகள் , அல்லது அஷ்ட1 ஸாத்1வீக1 பா4வம் பற்றி பக்தி நூல்கள் விவரிக்கின்றன :
ஸ்த1ம்ப4 ஸ்வேதோ3 ’தா2 ரோமாஞ்ச2ஹ ஸ்வரபே4தோ3 ’த வேபது1ஹு
வைவர்ண்யமஶ்ரு ப்1ரலய இத்1யஷ்டௌ ஸாத்1விகா1ஹா ஸ்ம்ருத1ஹா
(ப4க்1தி 1 ரஸாம் ம்ருத1 ஸிந்து4)
' உறைந்து போவது, வியர்த்தல், மயிர்கூச்செரிதல், கமமிய குரல், நடுக்கம், முகம் சாம்பலாக மாறுதல், கண்ணீர் சிந்துதல், மயக்கம் வருதல்- இவையெல்லாம் சில சமயங்களில் உள்ளத்தின் தீவிரமான காதல் வெளிப்படும் உடல் ரீதியான அறிகுறிகள்.' அறிகுறிகளை அனுபவித்த அர்ஜுனன் கூப்பிய கைகளுடன் பயபக்தியுடன் வணங்கி, பின் வரும் வார்த்தைகளை உச்சரித்தார். அர்ஜுனன் என்ன கூறினார் என்பது அடுத்த பதினேழு வசனங்களில் விவரிக்கப்பட்டுள்ளது.