Bhagavad Gita: Chapter 11, Verse 13

1த்1ரைக1ஸ்த2ம் ஜக3த்1க்1ருத்1ஸ்னம் ப்1ரவிப4க்11மனேக1தா4 |

அப1ஶ்யத்3தே3வதே3வஸ்ய ஶரீரே பா1ண்ட3வஸ்த1தா3 ||13||

தத்ர—--அங்கு; ஏக-ஸ்தம்--—ஒரே இடத்தில் நிலைத்திருப்பதை; ஜகத்-—ப்ரபஞ்சம்; கிருத்ஸ்னம்-—முழு; ப்ரவிபக்தம்—--பிரிக்கப்பட்ட; அநேகதா—--பலவாறாக; அபஶ்யத்-—பார்க்க முடிந்தது; தேவ-தேவஸ்ய—--தேவர்களின் கடவுளின்; ஶரீரே--—உடலில்; பாண்டவஹ—--அர்ஜுனன்; ததா----அந்த நேரத்தில்

Translation

BG 11.13: இறைவன்களின் இறைவனின் உடலில் ப்ரபஞ்சம் முழுவதும் ஒரே இடத்தில் நிலைத்திருப்பதை அர்ஜுனனால் அங்கு பார்க்க முடிந்தது.

Commentary

ப்ரபஞ்ச வடிவில் உள்ள அற்புதமான காட்சிகளை விவரித்த பிறகு, அது முழு ப்ரபஞ்சத்தையும் உள்ளடக்கியதாக ஸஞ்ஜயன் கூறுகிறார். இன்னும் ஆச்சரியமாக, அர்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணரின் உடலில் அனைத்து இருப்பின் முழுமையை கண்டார் . எல்லையற்ற ப்ரபஞ்சங்களின் முழு உருவாக்கத்தையும், விண்மீன் மண்டலம்மற்றும் கிரக அமைப்புகளின் பன்மடங்கு பிரிவுகளுடன், பரம இறைவனின் உடலின் ஒரு சிறியபகுதியிலேயே அவர் பார்த்தார்.

அவரது குழந்தைப் பருவ பொழுதுபோக்கின் பொழுது, ​​ஸ்ரீ கிருஷ்ணர் தனது தாயார் யசோதாவிற்கும் ப்ரபஞ்ச வடிவத்தை வெளிப்படுத்தினார். பரமாத்மாவானவர் தனது பூடகமானச் செல்வங்களை மறைத்து, தனது பக்தர்களின் மகிழ்ச்சிக்காக ஒரு சிறு குழந்தையின் வேடத்தில் நடித்தார். ஸ்ரீ கிருஷ்ணரைத் தன் மகனாக நினைத்து, அன்னை யசோதாவின் தொடர்ச்சியான அறிவுரைகளை மீறி ஸ்ரீ கிருஷ்ணர் சேறு சாப்பிட்டதற்காக யசோதா ஒரு நாள் அவரைக் கடுமையாகத் கண்டித்தார், ஸ்ரீ கிருஷ்ணர் மண் உண்டதை தானே உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, வாயைத் திறக்கும்படி கேட்ட அன்னை யசோதாவின் மகத்தான ஆச்சரியத்திற்கு, ஸ்ரீ கிருஷ்ணர் தனது வாயைத் திறந்து, ​​தனது யோகமாய சக்தியால் தனது ப்ரபஞ்ச வடிவத்தின் தரிசனத்தை வெளிப்படுத்தினார். யசோதா தன் சிறு குழந்தையின் வாயில் எல்லையற்ற அதிசயங்களைக் கண்டு திகைத்தார். அந்த காட்சியால் அவள் மயங்கி விழுந்த, அன்னை யசோதாவை ஸ்ரீ கிருஷ்ணர் தொட்டு மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வந்தார்.

இறைவன் தன் தாய் யசோதாவிடம் வெளிப்படுத்திய அதே ப்ரபஞ்ச வடிவத்தை இப்பொழுது தன் நண்பன் அர்ஜுனனுக்கும் வெளிப்படுத்துகிறார். இப்பொழுது, ​​ ஸஞ்ஜயன் ப்ரபஞ்ச வடிவத்தின் பார்வைக்கு அர்ஜுனனின் பதிலை விவரிக்கிறார்.