Bhagavad Gita: Chapter 3, Verse 24

உத்1ஸீதே3யுரிமே லோகா1 ந கு1ர்யாம் க1ர்ம சேத3ஹம் |

ஸங்க1ரஸ்ய ச11ர்தா1 ஸ்யாமுப1ஹன்யாமிமா: ப்1ரஜா: ||24||

உத்ஸீதேயுஹு—--அழிந்து போகும்; இமே—--இவை அனைத்தும்; லோகாஹா—--உலகங்கள்; ந—இல்லை; குர்யம்—நான் செய்கிறேன்); கர்மா—--வகுக்கப்பட்ட கடமைகள்; சேத்—--என்றால்; அஹம்--—நான்; ஸங்கரஸ்ய பண்பாடற்ற மக்கள்; ச—--மற்றும்; கர்தா—-பொறுப்பான; ஸ்யாம்—--இருக்கும்; உபஹன்யாம்—--அழிக்கும்; இமாஹா—--இவை அனைத்தும்; பிரஜாஹா—--வாழும் பொருள் (ந—குர்யாம்--—நான் செய்யவில்லை);

Translation

BG 3.24: நான் விதித்த செயல்களைச் செய்வதை நிறுத்தினால், இந்த உலகங்கள் அனைத்தும் அழிந்துவிடும். மனித இனத்தின் அமைதியை குலைக்கும் கலவரத்திற்கு நானே பொறுப்பாவேன்.

Commentary

ஸ்ரீ கிருஷ்ணர் பூமியில் ஒரு மனிதராக அவதரித்த போது ஒரு அரச போர்வீரர் வகுப்பைச் சேர்ந்தவருக்கு தகுந்த வழிகளிலும்நடத்தைகளிலும் தன்னை நடத்தினார். அவர் வேறுவிதமாக செயல்பட்டிருந்தால், மற்றவர்கள் நீதியுள்ள மன்னன் வஶுதேவனின் தகுதியான மகனின் நடத்தையை நகலெடுக்க வேண்டும் என்று நினைத்து அவரைப் பின்பற்றத் தொடங்குவார்கள். ஸ்ரீ கிருஷ்ணர் வேதக் கடமைகளைச் செய்யத் தவறியிருந்தால், அவரை உதாரணமாக பின்பற்றும் மனிதர்கள் கர்மத்தின் ஒழுக்கத்திலிருந்து விலகி, குழப்ப நிலைக்கு இட்டு செல்லப்படுவார்கள். இது மிகவும் கடுமையான குற்றமாக இருந்திருக்கும். மேலும், ஸ்ரீ கிருஷ்ணர் தவறு செய்தவராக கருதப்படுவார். இவ்வாறு, அவர் தனது தொழில் கடமைகளை நிறைவேற்றவில்லை என்றால், அது சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று அர்ஜுனனிடம் விளக்குகிறார்.

அதேபோல், அர்ஜுனன் போரில் தோல்வி அற்றவராக உலகப் புகழ் பெற்றவர், மேலும் நல்லொழுக்கமுள்ள மன்னன் யுதிஷ்டிரரின் சகோதரர் ஆவார். அர்ஜுனன் தர்மத்தைப் பாதுகாப்பதற்கான தனது கடமையை நிறைவேற்ற மறுத்தால், பல தகுதியான மற்றும் உன்னதமான போர்வீரர்கள் அவரை எடுத்துக்காட்டாக பின்பற்றலாம். மற்றும் நீதியைப் பாதுகாக்கும் கடமையைத் துறக்கலாம். இது உலக சமநிலைக்கு அழிவையும், அப்பாவி மற்றும் நல்லொழுக்கமுள்ள மக்களையும் அழிக்கும். இவ்வாறு, முழு மனித இனத்தின் நலனுக்காகவும், உலக நலனுக்காகவும், ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு அவருக்கு விதித்த வேதச் செயல்களைச் செய்வதை புறக்கணிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.

Watch Swamiji Explain This Verse